முகேஷ் அம்பானி #மாஸ்டர் பிளான்.. இனி மொத்த ரீடைல் வர்த்தகமும் ரிலையன்ஸ்-க்கு தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின் ரீடைல் வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தனது ஜியோமார்ட் சேவையை நாடுமுழுவதும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவும், குறைந்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய வேண்டும் என்ற மிகப்பெரிய இலக்குடன் உள்ளூர் கடைகளுடன் கூட்டணி சேரும் திட்டத்தைத் துவங்கியுள்ளது.

 

ஆனால் இதற்குப் பின்னால் மிகப்பெரிய திட்டத்தைப் புதைத்து வைத்துள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல்.

புதிய வர்த்தகக் கூட்டணி

புதிய வர்த்தகக் கூட்டணி

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தற்போது நாடு முழுவதிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஒவ்வொரு ஊரில் இருக்கும் மளிகைக் கடைகளுடன் பிரான்சைஸ் முறையில் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்தக் கூட்டணி திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது.

ஜியோமார்ட் ஆர்டர்

ஜியோமார்ட் ஆர்டர்

இந்தக் கூட்டணி கடைகள் ஜியோமார்ட் தளத்தில் வரும் ஆன்லைன் ஆர்டர்களை ஏற்றுப் பொருட்களைத் தத்தம் முகவரிக்கு டெலிவரி செய்யும் வேலையைச் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இனி வரும் காலத்தில் ஜியோமார்ட் தளத்தில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை அடுத்த 1 மணிநேரத்திற்குள் ஹோம் டெலிவரி பெற

முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ரீடைல்
 

ரிலையன்ஸ் ரீடைல்

இந்தத் திட்டத்தின் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் பேகேஜ் உணவு, மளிகை பொருட்கள், எப்எம்சிஜி பொருட்களின் நேரடி விற்பனையில் இருந்து முழுமையாக விலகி இந்தப் பொருட்களுக்கான விற்பனை கூட்டணி நிறுவனங்களின் வாயிலாகச் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்தப் பெரும் வர்த்தகத்தை இழக்கும் ரிலையன்ஸ் ரீடைல் ஸ்மார்ட்டாக இன்னொரு திட்டத்தைத் தீட்டியுள்ளது.

முக்கியக் கண்டிஷன்

முக்கியக் கண்டிஷன்

இப்பெரும் வர்த்தக இழப்பை ஈடுசெய்யும் வகையில் ரிலையன்ஸ் ரீடைல் உடன் கூட்டணி சேரும் கடைகள் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பொருட்களை வாங்க வேண்டும் என்கிற முக்கிய விதிமுறையுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது எனச் சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லாபம் பகிர்வு

லாபம் பகிர்வு

இதன் படி ஜியோமார்ட்-ல் தளத்தில் ஆர்டர் செய்யும் பொருட்களை இந்தக் கூட்டணி கடைகளிடம் இருந்தும், இக்கடைகளில் இல்லாத பொருட்களை ரிலையன்ஸ் ரீடைல் கடைகளின் வாயிலாகவும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய உள்ளது. இதற்கான லாபத்தை ரிலையன்ஸ் கூட்டணி கடைகளுடன் பகிர உள்ளது.

ரிலையன்ஸ் மார்கெட்

ரிலையன்ஸ் மார்கெட்

மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் ரீடைல் கடைகளுக்குப் பொருட்களை விற்பனை செய்யும் B2B வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் மார்கெட் நிறுவனத்தை மூடிவிட்டு, இந்த ரிலையன்ஸ் மார்கெட் தளம் முழுமையாக ரீடைல் கடைகளின் Fulfilment centreஆக மாற உள்ளது.

நிறைய நன்மை

நிறைய நன்மை

இதன் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் தனது B2C வர்த்தகத்தை B2B வர்த்தகத்தின் வாயிலாகவே பெற்ற உள்ளது. இதில் குறைந்த நேரத்தில் டெலிவரி, வர்த்தக விரிவாக்கம், ஆன்லைன் டெலிவரி எளிமைப்படுத்துதல், புதிய வாடிக்கையாளர்கள் எனப் பல நன்மைகள் உள்ளது.

100 நகரங்களுக்கு விரிவாக்கம்

100 நகரங்களுக்கு விரிவாக்கம்

தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி ரிலையன்ஸ் ரீடைல் இப்புதிய பிரான்சைஸ் திட்டத்தின் கீழ் சுமார் 56,000 கடைகளை 30 நகரங்களில் கூட்டணி ஒப்பந்தம் மூலம் தனது குடைக்குள் இணைத்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்குள் இத்திட்டத்தை 100 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Retail's Master plan: Tieup with kirana stores as franchise partners for JioMart

Reliance Retail's Master plan: Tieup with kirana stores as franchise partners for JioMart
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X