ரிலையன்ஸ் ரீடைல் புதிய முயற்சி.. ஈஷா அம்பானி திட்டம்தான் என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தில் ரிலையன்ஸ் ஜியோ-வின் நிர்வாகப் பொறுப்பு ஆகாஷ் அம்பானிக்கு வழங்கப்பட்டு உள்ள நிலையில், ரிலையன்ஸ் ரீடைல் நிர்வாகப் பொறுப்பும் ஈஷா அம்பானிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் வாய்ப்புகள் கிடைக்கும் இடமெல்லாம் வர்த்தகத்தை உருவாக்கி வருகிறது.

இதனால் குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு புதிய வர்த்தகத்தைத் துவங்கி வருகிறது ரிலையன்ஸ் ரீடைல். இந்திய ரீடைல் சந்தையில் புதிய வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும், அதை எப்படி நிர்வாகம் செய்யப்படுகிறது, எத்தனை நாள் தொடர்ந்து நிலையான கவனத்தை அளிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்படியிருக்கையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் சுமார் 50 இனிப்பு தயாரிப்பாளர்கள் உடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளது.

 உச்சத்தில் இருந்து 17% சரிவு.. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்கினை வாங்கி போடலாமா? உச்சத்தில் இருந்து 17% சரிவு.. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்கினை வாங்கி போடலாமா?

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது, இதேபோல் ரீடைல் சந்தையும் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் சுமார் 50 பாரம்பரிய மற்றும் பிராந்திய இனிப்பு வகைகளைச் செய்வோரிடம் கூட்டணி வைத்துள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

இந்தக் கூட்டணி மூலம் இந்தியா முழுவதும் உள்ள பிரபலமான இனிப்பு வகைகளை அதிகளவில் தயாரித்து, மார்டன் பேக்கிங் முறையில் அதிகக் காலம் தாக்குப்பிடிக்கும் வகையில் இனிப்புகளைத் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது ரிலையன்ஸ் ரீடைல்.

வர்த்தக மாடல்
 

வர்த்தக மாடல்

அதாவது கோவில்பட்டி கடலை மிட்டாய் டெல்லியில் ரிலையன்ஸ் ரீடைல் விற்பனை செய்ய விரும்புகிறது, இதேபோல் பஞ்சாப்-ன் Kada prasad கன்னியாகுமரி-யில் விற்பனை செய்ய வேண்டும் எனத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. மக்கள் மத்தியில் தற்போது பாரம்பரிய மற்றும் பிராந்திய உணவுகளுக்குப் பெரிய அளவிலான வரவேற்பு உள்ளது.

விரிவாக்கம்

விரிவாக்கம்

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பிரபலமாக இருக்கும் இனிப்பு வகைகளைப் பெரிய அளவில் தயாரித்து ரிலையன்ஸ் ரீடைல் கடைகள் மட்டும் அல்லாமல் சிறிய சிறிய மளிகைக் கடைகளிலும் கிடைக்கும் வகையில் விற்பனையை விரிவாக்கம் செய்ய உள்ளது ரிலையன்ஸ்.

தாமோதர் மால்

தாமோதர் மால்

இந்தத் திட்டத்தையும், புதிய வர்த்தகம் குறித்து ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் ரீடைல் மளிகை பிரிவின் தலைவர் தாமோதர் மால் உறுதி செய்தார், மேலும் பண்டிகை காலம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் திருமணச் சீசன் வரும் நிலையில் விற்பனை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

100க்கும் அதிகமான இனிப்பு வகைகள்

100க்கும் அதிகமான இனிப்பு வகைகள்

மேலும் இதற்காக ஒவ்வொரு ரிலையன்ஸ் ரீடைல் கடைகளிலும் இனிப்புகளுக்காகவே தனியாக ஒரு ஸ்டாண்ட் வைக்கப்பட்டு உள்ளதாகவும், 100க்கும் அதிகமான இனிப்பு வகைகளை அறிமுகம் செய்ய உள்ளது ரிலையன்ஸ் ரீடைல். இத்திட்டத்திற்காக ஜெய்ப்பூரின் தூத் மிஸ்தான் பந்தர், மைசூரில் லால் ஸ்வீட்ஸ், மேற்கு வங்கத்தில் பிரபுஜி & பிகாரம் சந்த்மால் மற்றும் அஜ்மீரின் சாவன்னிலால் ஹல்வாய் ஆகியோரிடம் ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Retail targets sweets market; partnered with 50+ traditional sweets makers

Reliance Retail targets sweets market plans to exapand its selling from ecommerce to small kirana stores; partnered with 50+ traditional sweets makers
Story first published: Wednesday, October 19, 2022, 11:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X