தூள்கிளப்பும் ரிலையன்ஸ் பங்குகள்.. முகேஷ் அம்பானி ஹேப்பியோ ஹேப்பி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வேகமாக வளர்ந்து ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தகத் திட்டமாக விளங்கும் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் குரூப்-ன் 24,713 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை அமெரிக்காவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் சிங்கப்பூர் நடுவர் அமைப்பில் வழக்குத் தொடுத்துத் தடை உத்தரவைப் பெற்றது.

இதனால் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் குரூப் வர்த்தக இணைப்பு தடைப்படுமோ என்ற அச்சத்தில் இரு நிறுவனங்களும் இருந்த நிலையில் The Competition Commission of India (CCI) அமைப்பு வெள்ளிக்கிழமை இந்த ஒப்பந்தத்திற்கு அமேசான் பெற்ற தடை உத்தரவையும் நினைவில் வைத்துக்கொண்டு ஒப்புதல் அளித்ததுள்ளது.

'கிஷோர் பியானி-க்கு' அம்பானி போட்ட பயங்கரமான கன்டிஷன்..?! 15 வருடத்திற்கு 'No Entry' 'கிஷோர் பியானி-க்கு' அம்பானி போட்ட பயங்கரமான கன்டிஷன்..?! 15 வருடத்திற்கு 'No Entry'

இதன் எதிரொலியாக வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் காலை வர்த்தகம் துவங்கியது முதலே 3 சதவீத உயர்வுடன் துவங்கியுள்ளது.

CCI ஒப்புதல்

CCI ஒப்புதல்

ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் குரூப் இடையிலான ஒப்பந்தத்தை ஆய்வு செய்த The Competition Commission of India (CCI) அமைப்பு, பியூச்சர் குரூப்-ன் ரீடைல், மொத்த விலை விற்பனை, லாஜிஸ்டிக்ஸ், கிடங்குகள் மற்றும் வர்த்தகத்தை ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பேஷன் லைப்ஸ்டைல் லிமிடெட் கைப்பற்ற ஒப்புதல் அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்

இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகத் துவக்கத்திலேயே 3 சதவீத வளர்ச்சி பதிவு செய்து அசத்தியது. ஆனால் சில நிமிடங்களில் வீழ்ந்த ரிலையன்ஸ் பங்குகள் மீண்டும் 2.32 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து ஒரு பங்கு 1,945 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

பியூச்சர் ரீடைல்
 

பியூச்சர் ரீடைல்

இதைத் தொடர்ந்து பியூச்சர் ரீடைல் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 73.05 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் தடாலடியாக 9.99 சதவீத வளர்ச்சி அடைந்து 7.25 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

ஈகாமர்ஸ் வர்த்தகம்

ஈகாமர்ஸ் வர்த்தகம்

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் சமீபத்தில் ஜியோமார்ட் என்னும் ஈகாமர்ஸ் தளத்தை அறிமுகம் செய்து நாடு முழுவதும் சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்தப் பிரிவு வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என ரிலையன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது .

24,713 கோடி ரூபாய் ஒப்பந்தம்

24,713 கோடி ரூபாய் ஒப்பந்தம்

இதன் அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கடனில் தவிக்கும் பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்ற முடிவு செய்து பல ஆலோசனை மற்றும் மாற்றங்களுக்குப் பின் பியூச்சர் குரூப்-ன் மொத்த வர்த்தகத்தையும் சுமார் 24,713 கோடி ரூபாய் தொகைக்குக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது.

1,800 கடைகளை

1,800 கடைகளை

தற்போது கிடைத்துள்ள ஒப்புதல் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் இனி பியூச்சர் குழுமத்தின் பிக் பஜார், FBB, ஈஸி டே, சென்டரல், புட்ஹால் ஆகிய பிராண்டுகளின் கீழ் இருக்கும் 1,800 கடைகளைப் பெற உள்ளது. இந்தக் கடைகள் நாட்டில் சுமார் 420 நகரங்களில் இருக்கும் காரணத்தால் ரிலையன்ஸ் ரீடைல் அடுத்த சில மாதத்தில் நாடு முழுவதும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய உள்ளது.

அமேசான்

அமேசான்

ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப்-ன் ஒப்பந்தத்திற்கு The Competition Commission of India (CCI) கொடுத்த ஒப்பந்தம் அமேசான் நிறுவனத்திற்குப் பெரும் பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ரீடைல் உடன் நேரடியாகப் போட்டிப்போடும் அமேசானுக்கு ஒரு மாத போராட்டத்திற்குப் பின்பும் தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் அமேசான் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RIL, Future retails shares rise phenomenally after CCI approves 24,713crore deal

RIL, Future retails shares rise phenomenally after CCI approves 24,713crore deal
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X