Ruja Ignatova தலைக்கு 1 லட்சம் டாலர்.. வலைவீசி தேடும் FBI.. யார் இவர்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் மக்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து லாபம் பார்க்க ஆர்வமாக இருந்த போது, ஒருவர் மட்டும் கிரிப்டோ முதலீட்டாளர்களிடமே பணத்தை மொத்தமாகத் திருடியவர் தான் ருஜா இக்னாடோவா.

FBI வலைவீசித் தேடும் அளவிற்கு இவர் என்ன செய்தார்..? யார் இவர்..? இவருக்குக் கிரிப்டோ குவின் எனச் செல்ல பெயரும் உண்டு என்பது தெரியுமா..?!

லோன் ஆப் நிறுவனங்களின் அட்டூழியம்.. 5000 ரூபாய் கடனுக்கு 4.28 லட்சம் செலுத்தும் நிலை..! லோன் ஆப் நிறுவனங்களின் அட்டூழியம்.. 5000 ரூபாய் கடனுக்கு 4.28 லட்சம் செலுத்தும் நிலை..!

கிரிப்டோ குவின்

கிரிப்டோ குவின்

கிரிப்டோகரன்சி சந்தையில் கிரிப்டோ குவின் எனச் செல்ல பெயர் வாங்கிய ருஜா இக்னாடோவால தற்போது அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு சேவை அமைப்பான FBI-ன் Ten Most Wanted fugitives பட்டியலில் ருஜா இக்னாடோவா இடம்பெற்றுள்ளார்.

4 பில்லியன் டாலர்

4 பில்லியன் டாலர்

ருஜா இக்னாடோவா தான் உருவாகிய ஓன்காயின் கிரிப்டோகரன்சி நிறுவனத்தில் முதலீட்டாளர் முதலீடு செய்த 4 பில்லியன் டாலர் பணத்தை அபேஸ் செய்து தலைமறைவாகியுள்ளார்.

2017ல் மாயம்

2017ல் மாயம்

அமெரிக்க அதிகாரிகள் ருஜா இக்னாடோவா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவரைக் கைது செய்வதற்கான வாரண்ட்டையும் சமர்ப்பித்த நேரத்தில், 2017 அக்டோபரில் கிரீஸில் காணாமல் போனார் பல்கேரியப் பெண்ணான ருஜா இக்னாடோவா.

1,00,000 டாலர்

1,00,000 டாலர்

இவருக்குத் தற்போது அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் அமைப்பு இவரைக் கைது செய்ய உதவுபவருக்கு 1,00,000 டாலர் வெகுமதியை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ருஜா இக்னாடோவா தற்போது 4 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டாளர்கள் பணத்துடன் மாயமாகியுள்ளார்.

OneCoin கிரிப்டோகரன்சி

OneCoin கிரிப்டோகரன்சி

2014 இல் ருஜா இக்னாடோவா சொந்தமாக OneCoin என்னும் கிரிப்டோகரன்சியை Bitcoin ஆதிக்கத்தைக் குறைப்பதற்காகவே அறிமுகம் செய்தார். உலகின் முன்னணி விர்ச்சுவல் கரன்சியாக மாற்ற வேண்டும் என்ற மிகப்பெரிய இலக்கை கொண்டு உள்ளதாக அறிவித்து இயங்கி வந்தார்.

அமெரிக்கா

அமெரிக்கா

அதிலும் குறிப்பாக OneCoin அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யப்பட்டதால், குறுகிய காலத்திலேயே அதிகப்படியானோர் இதில் நம்பி முதலீடு செய்தனர், ஒரு கட்டத்தில் மூன்று மில்லியன் முதலீட்டாளர்கள் OneCoin கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளதாக இந்நிறுவனம் அறிவித்தது.

4 பில்லியன் டாலர் அபேஸ்

4 பில்லியன் டாலர் அபேஸ்

42 வயதான ருஜா இக்னாடோவா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்ததாகவும், மெக்கின்சியில் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 2014 முதல் 2016 வரையில் ருஜா இக்னாடோவா-வும் அவருடைய கூட்டு களவாணியும் 4 பில்லியன் டாலர் அளவிலான பணத்தைத் திருடியது வெளிச்சத்திற்கு வந்தது.

போன்சி கிரிப்டோ

போன்சி கிரிப்டோ

கிரிப்டோ சந்தையில் OneCoin மிகவும் பிரபலமான போன்சி திட்டமாக விளங்குகிறது. பணத்தைத் திருடிய பின்பு 2017ஆம் ஆண்டு வரையில் ருஜா இக்னாடோவா எதிரான ஆதாரங்களைத் திரட்டி வந்த அதிகாரிகளுக்கு அக்டோபர் 25, 2017 முதல் அவர் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியாக விளங்குகிறது.

கைது

கைது

FBI 1,00,000 டாலர் அறிவித்தது போல் Europol அமைப்பும் most-wanted list சேர்த்து 5000 யூரோ தொகையை அறிவித்துள்ளது. ருஜா இக்னாடோவா-ன் சகோதரன் Konstantin Ignatov மற்றும் அவருடன் இருந்த Sebastian Greenwood, Mark Scott, ஆகியோர் 2018-2019 ஆண்டுகளில் அமெரிக்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கைது செய்யப்பட்ட நிலையில் ருஜா மட்டும் இன்னும் தலைமறைவாக உள்ளார்.

ரஷ்யா, கிரிப்டோ.. டிசைன் டிசைனாக பொய்.. 100 கோடி அபேஸ் செய்த MBA பட்டதாரி..! ரஷ்யா, கிரிப்டோ.. டிசைன் டிசைனாக பொய்.. 100 கோடி அபேஸ் செய்த MBA பட்டதாரி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ruja Ignatova: FBI announced bounty for this crypto Queen; Know who is She?

Ruja Ignatova: crypto Queen Ruja Ignatova in FBI’s 10 Most Wanted fugitives list: onecoin $4 billion scam FBI வலைவீசித் தேடும் ருஜா இக்னாடோவா.. யார் இந்தப் பெண்..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X