இனி இலவசம்.. எஸ்பிஐ வங்கி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க அனைத்து தரப்பினரும் ஊக்குவித்து வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இந்த அறிவிப்பால் பொதுத்துறை வங்கிகள் மட்டும் அல்லாமல் தனியார் வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வை பின் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகேஷ் அம்பானியின் சொத்து பிரிக்கும் மெகா திட்டம்.. 3 சூப்பர் ஸ்டார்களுக்கு என்ன தேவை..! முகேஷ் அம்பானியின் சொத்து பிரிக்கும் மெகா திட்டம்.. 3 சூப்பர் ஸ்டார்களுக்கு என்ன தேவை..!

அப்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ன தான் சொல்லியிருக்கு.. இதனால் சாமானிய மக்களுக்கு என்ன நன்மை இருக்கு தெரியுமா..

 டிஜிட்டல் பேமெண்ட் சேவை

டிஜிட்டல் பேமெண்ட் சேவை

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி சமீபத்தில் கிராமம் மற்றும் டவுன் பகுதி மக்களுக்காக ஆப்லைன் பேமெண்ட்-ஐ அறிமுகம் செய்த நிலையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இன்று அதிகப் பணத்தை டிஜிட்டல் பணப் பரிமாற்றம் செய்பவர்களையும், செய்யவும் ஊக்குவிக்கும் வகையில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 IMPS பணப் பரிமாற்ற

IMPS பணப் பரிமாற்ற

எஸ்பிஐ வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் வங்கி சேவை தளங்கள் வாயிலாகச் செய்யப்படும் 5 லட்சம் ரூபாய் வரையிலான IMPS பரிமாற்றத்திற்கு இனி எவ்விதமான சேவை கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது.

 5 லட்சம் ரூபாய்
 

5 லட்சம் ரூபாய்

அதாவது 5 லட்சம் ரூபாய் வரையிலான IMPS பணப் பரிமாற்றத்திற்கு ஜீரோ கட்டணம், தற்போது IMPS மூலம் பணப் பரிமாற்றம் செய்தால் அதற்குத் தொகைக்கு அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இனி இல்லை. மேலும் இந்த இலவச IMPS பணப் பரிமாற்றம் சேவை டிஜிட்டல் சேவை தளத்தில் மட்டுமே, அதாவது இண்டர்நெட் வங்கி, மொபைல் பேங்கிங், YONO எஸ்பிஐ ஆ போன்றவற்றில் மட்டுமே இந்த இலவச IMPS சேவை அளிக்கப்படுகிறது.

 ரிசர்வ் வங்கி அனுமதி

ரிசர்வ் வங்கி அனுமதி

ஆனால் இதே IMPS சேவையை வங்கி கிளையில் செய்தால் அதற்கு ஜிஎஸ்டி உடன் சேவை கட்டணமும் உண்டு. இதற்கு முன்பு IMPS சேவையின் கீழ் 2,00,000 ரூபாய் மட்டுமே பணப் பரிமாற்றம் செய்ய முடியும், ரிசர்வ் வங்கி அனுமதிக்குப் பின்பு எஸ்பிஐ வங்கி இந்த அளவீட்டை 5 லட்சம் வரையில் உயர்த்தப்பட்டது மட்டும் அல்லாமல் 24×7 மணிநேரமும் இயங்கும் வண்ணம் மாற்றப்பட்டு உள்ளது.

 கட்டண விபரம்

கட்டண விபரம்

டிஜிட்டல் வங்கி சேவையில் இலவசம் என அறிவிக்கப்பட்டு உள்ள இந்த IMPS சேவைக்கு வங்கியில் எவ்வளவு கட்டணம் தெரியுமா..?

1000 ரூபாய் வரை - 0 ரூபாய்
ரூ.1000 முதல் ரூ.10,000 வரை - 2 ரூபாய்+ஜிஎஸ்டி
ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரை - 4 ரூபாய்+ஜிஎஸ்டி
ரூ.1,00,000 முதல் ரூ.2,00,000 வரை - 12 ரூபாய்+ஜிஎஸ்டி
ரூ.2,00,000 முதல் ரூ.5,00,000 வரை - 20 ரூபாய்+ஜிஎஸ்டி

இதே கட்டணம் தான் முன்பு ஆன்லைன் சேவையிலும் இருந்து, தற்போது இலவசமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

 எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

நாட்டில் அதிகப்படியான ரீடைல் வாடிக்கையாளர்களைக் கொண்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய கடனுக்கான வட்டியை உயர்த்தும் போது எப்படி அனைத்து வங்கிகளும் உயர்த்துகிறதோ, அதேபோல் தான் தற்போது IMPS கட்டணமும் குறைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனாஸ் இதைத் தனியார் வங்கிகள் செய்யுமா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI: IMPS transaction limit to Rs 5 lac with NIL charges for digital channel transactions

SBI: IMPS transaction limit to Rs 5 lac with NIL charges for digital channel transactions இனி இலவசம்.. எஸ்பிஐ வங்கி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X