முத்ரா திட்டத்தில் 20% வாரக்கடன்.. தடுமாறும் எஸ்பிஐ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறு குறு மற்றும் தொழில் முனைவோருக்கான அரசின் திட்டம் தான் இந்த முத்ரா. இது பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் 3 வகைகளில் குறுந்தொழில் முனைவோர் தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்திக் கொள்ளவும் கடன்களை வங்கிகள் வழங்கி வருகின்றன.

முத்ராவின் சிசு திட்டம் மூலமாக 50,000 ரூபாய் வரையிலும், இதே கிஷோர் திட்டத்தின் மூலம் 50,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதே தருண் திட்டத்தின் மூலம் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் பெறலாம்

முத்ரா திட்டத்தில் வாரக்கடன் அதிகரிப்பு

முத்ரா திட்டத்தில் வாரக்கடன் அதிகரிப்பு

ஒரு புறம் அதிகரித்து வரும் பொருளாதார பிரச்சனையை சமாளிக்க அரசு பல புதிய திட்டங்களை வகுத்து வந்தாலும், மறுபுறம் இதுபோன்ற அரசி திட்டங்கள் புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாகவே இருந்து வருகின்றது. எனினும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய இந்த முத்ரா திட்டத்திலும் வாராக்கடன் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எஸ்பிஐ –முத்ரா கடன்

எஸ்பிஐ –முத்ரா கடன்

இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம், வழங்கப்பட்ட கடன்களில் பலர் சரியாக திரும்ப செலுத்தாதால் வாராக்கடன் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எஸ்பிஐயின் மொத்த வாராக்கடனில், முத்ரா கடனின் கீழ் உள்ள நிலுவை மட்டும், கிட்டதட்ட 20 சதவீதமாக அதிகரிதுள்ளதாக தெரிவித்துள்ளது.

மற்ற வங்கிகளில் வாரக்கடன்

மற்ற வங்கிகளில் வாரக்கடன்

கடந்த மார்ச் 2020ம் நிதியாண்டுடன் முடிவடைந்த ஆண்டில், எஸ்பிஐ-யின் கடன் புத்தகத்தில் 30,000 கோடி ரூபாய் கடனும், இதே மொத்த வாராக்கடன் இந்த பிரிவில் 5,800 கோடி ரூபாயும் உள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ வங்கியே முத்ரா கடன் பங்கில் 20% வாராக்கடனை பதிவு செய்துள்ள நிலையில், மற்ற பொதுத்துறை வங்கிகளின் நிலையை என்ன என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

சிறு தொழில் முனைவோர்

சிறு தொழில் முனைவோர்

சிறு தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் விதமாக 10 லட்சம் ரூபாய் வரையில் கடன் வழங்குவதற்காக முத்ரா திட்டம், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கடன் வாங்கியவர்கள் முக்கியமாக மொபைல் பழுதுபார்க்கும் கடை, பியூட்டி பார்லர் உள்ளிட்ட பலரும் இதில் அடங்குவர்.

அரசு தரப்பு

அரசு தரப்பு

இதற்கிடையில் தான் கடந்த 2019 - 2020ம் ஆண்டிற்கான பொதுத்துறை நிறுவனங்களின் முத்ரா கடன் திட்ட விவரங்கள் குறித்தான அறிக்கையை அரசு சமீபத்தில் வெள்ளியிட்டது. இந்த அறிக்கையில் அரசின் பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தில் கீழ் 3.92 லட்சம் கோடி ரூபாய் முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் வாராக்கடன் விகிதம் 18,836 கோடி ரூபாயாகும். கடந்த நிதியாண்டில் வாராக்கடன் விகிதம் 4.80% என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

சரியான அளவுகோல் அல்ல

சரியான அளவுகோல் அல்ல

ஆனால் வாராக்கடனை அளவிடுவதற்கு இது சரியான அளவுகோல் அல்ல, ரிசர்வ் வங்கியின் விதிகளின் படி, நிலுவையில் உள்ள NPA மட்டும் கணக்கிடப்படுகிறது. ஆனால் வங்கிகளின் கடன் புத்தகத்தில், முத்ரா திட்டத்தின் கீழ் வாராக்கடன் அதிகம். எஸ்பிஐ இதற்கு ஒரு சிறந்த உதாரணம். மொத்த வாராக்கடனில் 20%மும், நிகரவாராக்கடனில் 12% முத்ரா வாரக்கடன் உள்ளது.

இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்

இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்

முத்ரா கடனின் வாரக்கடன் அழுத்தம் தற்போதைக்கு தெரியாது. ஏனெனில் அரசு உத்தரவாத திட்டத்தின் கீழ் 3 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் கடனை அறிவித்துள்ளது. அதோடு ஆறு மாத கால அவகசாமும் கொடுத்தது. ஆக இந்த வாராக்கடன் விகிதம் வெளிப்பட இன்னும் கொஞ்சம் காலம் ஆகலாம்.

கவலைகுரிய விஷயம்

கவலைகுரிய விஷயம்

கடந்த இரண்டு ஆண்டுகளில் முத்ராவின் கீழ் அதிகளவு வாராக்கடன் விகிதம், கவலைக்குரிய விஷயங்களில் ஒன்றாகும். ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்தி காந்தி தாஸ் முன்பு, வங்கிகளுக்கு சிறு கடன் வழங்குவதில் எச்சரிக்கையாகவும், விவேகமாகவும் இருக்குமாறும் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாரக்கடன் குறித்து எச்சரிக்கை

வாரக்கடன் குறித்து எச்சரிக்கை

இதே போல மத்திய வங்கியின் துணை ஆளுநர் எம்கே ஜெயினும் முத்ரா கடன்களில் அதிகரித்து வரும் வாரக்கடன் பற்றி எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் மற்றும் உர்ஜித் படேல் ஆகியோரும் இந்த கடன் பிரிவில் மோசமான கடன் விகிதம் அதிகரித்து வருவதை பற்றி பேசினர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI’s Mudra loan NPA jumped 20% to its loan outstanding

State bank of india seen its gross NPAs in the mudra loan segments at close to 20% of its loan outstanding under PMMY scheme
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X