மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வாரத்தின் முதல்நாளே ஆசியச் சந்தையின் வீழ்ச்சியின் காரணமாகச் சரிவுடன் துவங்கியுள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் நிதியியல் துறை, ஐடி மற்றும் நுகர்வோர் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது.
இன்றைய வர்த்தக சரிவுக்கு ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படாமல் இருப்பது, கச்சா எண்ணெய் விலை, அதிகரித்து வரும் பணவீக்கம், அதிகரித்து வரும் கொரோனா தொற்று ஆகியவற்றின் மூலம் முதலீட்டாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை உடன் முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால் பாதிப்பு நிறைந்த நாடுகளில் இருக்கும் முதலீடுகளைப் பன்னாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர். இதேவேளையில் தங்கம் மீது முதலீடு செய்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
Mar 28, 2022 2:23 PM
சரிவில் இருந்து மீண்ட மும்பை பங்குச்சந்தை
Mar 28, 2022 2:23 PM
சென்செக்ஸ் குறியீடு 95.19 புள்ளிகள் உயர்ந்து 57,457.39 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 28, 2022 2:23 PM
நிஃப்டி குறியீடு 31.90 புள்ளிகள் உயர்ந்து 17,184.90 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 28, 2022 2:23 PM
கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருக்கும் நிலையில் ஆட்டோமொபைல்,FMCG நிறுவனங்களில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்
Mar 28, 2022 2:23 PM
பிவிஆர் - ஐநாக்ஸ் இணைக்க CCI ஒப்புதல் அவசியம் இல்லை
Mar 28, 2022 2:22 PM
உமா எக்ஸ்போர்ட்ஸ் முதல் நாள் ஐபிஓவில் 1.5 மடங்கு முதலீட்டை பெற்றது
Mar 28, 2022 2:22 PM
ரூச்சி சோயா பங்குகள் 7 சதவீதம் வரையில் சரிவு
Mar 28, 2022 2:22 PM
பிவிஆர் - ஐநாக்ஸ் பங்குகள் 52 வார உச்சத்தை தொட்டது
Mar 28, 2022 2:22 PM
மதர்சன் சுமி வைரிங் பங்குகள் 5 சதவீத லோவர் சர்கியூட் அளவீட்டை தொட்டது
Mar 28, 2022 12:20 PM
2 வருட சரிவை மொத்தமாக மீண்டு வந்த பிட்காயின்
Mar 28, 2022 12:20 PM
பிட்காயின் விலை 47,583 டாலராக உயர்வு
Mar 28, 2022 12:20 PM
பெங்களூரில் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ள 33 ஏக்கர் வீட்டு மனை திட்டத்தின் மூலம் 2000 கோடி ரூபாய் வருமானத்தை காட்ரிஜ் ஈர்க்கும்
Mar 28, 2022 12:19 PM
மீடியம் டெர்மில் 25% வரையில் லாபம் கொடுக்கலாம்.. மோதிலால் ஆஸ்வாலின் பலே பரிந்துரை!
Mar 28, 2022 12:19 PM
வினோத் ராய்-ஐ புதிய சேர்மன் ஆக நியமிக்க கல்யாண் ஜுவல்லர்ஸ் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் செபி மற்றும் பங்குதாரர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்
Mar 28, 2022 12:19 PM
பிவிஆர் - ஐநாக்ஸ் இணைப்பு 1500 திரைகளை கொண்ட நிறுவனமாக உருவெடுத்தது
Mar 28, 2022 12:06 PM
2 வருட சரிவில் இருந்து மொத்தமாக மீண்டு வந்த பிட்காயின்
Mar 28, 2022 12:06 PM
பிட்காயின் விலை 47,583 டாலராக உயர்வு
Mar 28, 2022 12:05 PM
பெங்களூரில் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ள 33 ஏக்கர் வீட்டு மனை திட்டத்தின் மூலம் 2000 கோடி ரூபாய் வருமானத்தை காட்ரிஜ் ஈர்க்கும்
Mar 28, 2022 12:05 PM
வினோத் ராய்-ஐ புதிய சேர்மன் ஆக நியமிக்க கல்யாண் ஜுவல்லர்ஸ் முடிவு
Mar 28, 2022 12:05 PM
பிவிஆர் - ஐநாக்ஸ் இணைப்பு 1500 திரைகளை கொண்ட நிறுவனமாக உருவெடுத்தது
Mar 28, 2022 12:04 PM
நிஃப்டி மீடியா அதிகப்படியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது
Mar 28, 2022 12:04 PM
முகேஷ் அம்பானி ஆசை ஆசையாய் வாங்கி 3 விஷயங்கள்..!
Mar 28, 2022 12:03 PM
நிஃப்டி கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் குறியீடு -1.6 சதவீதம் சரிவு
Mar 28, 2022 12:03 PM
பிஎஸ்ஈ 500 பிரிவில் பிவிஆர், ஐநாக்ஸ், சுப்ரீம் பெட்ரோகெம், லெமன்ட்ரீ பங்குகள் அதிகப்படியான உயர்வு
Mar 28, 2022 12:03 PM
மே, ஜூன் கூட்டத்தில் அமெரிக்க பெடரல் வங்கி 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தை உயர்த்தும்
Mar 28, 2022 12:00 PM
இந்திய பணக்காரர்கள் அதிகம் முதலீடு செய்யும் இடம் இதுதான்..!
Mar 28, 2022 11:59 AM
ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ் இந்த் வங்கி, மாருதி சுசூகி, ரிலையன்ஸ் ஆகியவை விளிம்பில் உள்ளது
Mar 28, 2022 11:59 AM
ஹெச்டிஎப்சி பங்குகள் 2.31 சதவீதம் சரிவு
Mar 28, 2022 11:59 AM
ஹெச்சிஎல் டெக் பங்குகள் 1.69 சதவீதம் சரிவு
Mar 28, 2022 11:59 AM
ஐடி, பார்மா, வங்கி துறை பங்குகள் இன்று அதிகப்படியான சரிவு
Mar 28, 2022 11:58 AM
ரூச்சி சோயா பங்குகள் கடைசி நாளில் அனைத்து பங்குகளுக்கும் முதலீடு குவிந்தது
Mar 28, 2022 11:57 AM
உமா எக்ஸ்போர்ட்ஸ் ஐபிஓ முதல் நாளில் 18 சதவீத பங்குகளுக்கு முதலீட்டைப் பெற்றது
Mar 28, 2022 11:57 AM
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளுக்கு 2800 ரூபாய் டார்கெட் விலையைக் கொடுத்த ஸ்கேன்டம் வெல்த்
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed