2022-23 ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டின் முதல் வர்த்தக நாளில் எதிர்பார்க்கப்பட்டத்தை போலேவே சரிவுடன் துவங்கியுள்ளது, இதைவிட முக்கியமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் 79 ரூபாய்க்குக் கீழ் சரிந்துள்ளது.
இதைத் தாண்டி அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகளின் தாக்கத்தால் இந்திய சந்தையில் இருந்து முதல் 6 மாதத்தில் மட்டும் சுமார் 2.1 லட்சம் கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. இது ரீடைல் முதலீட்டாளர்களின் லாபத்தைப் பெரிய ஓட்டையை உருவாக்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் மற்றும் நிதியியல் துறை நிறுவன பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது.
