ஒரே வாரத்தில் 3% வீழ்ச்சி.. 2வது வாரமாக தொடரும் போராட்டம்.. கவலையில் முதலீட்டாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்கு சந்தைகள் இரண்டாவது வாரமாக நடப்பு வாரத்திலும் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் வரவிருக்கும் வாரத்திலும் பட்ஜெட்டின் எதிரொலி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1 வாரத்தில் மட்டும் 3% வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது சந்தை. இது அமெரிக்கா தனது பணக் கொள்கைகளை கடுமையாக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பங்கு சந்தைகள் தரை தட்டின.

இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினையே ஏற்படுத்தியது. இதனால் முதலீட்டாளர்கள் பலத்த இழப்பினையும் கண்டுள்ளனர். எனினும் ஷார்ட் கவரிங் காரணமாக வரவிருக்கும் வாரத்தில் சந்தையானது மீண்டும் ஏற்றம் கண்டாலும் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி

சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி

கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 1836.95 புள்ளிகள் அல்லது 3.11% வீழ்ச்சி கண்டுள்ளது. இது வார இறுதியில் , 57,200 புள்ளிகள் என்ற லெவலில் முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 50 குறியீடானது 515.20 புள்ளிகள் அல்லது 3% வீழ்ச்சி கண்டது. இது வார இறுதியில் 17,101.95 புள்ளிகளாகவும் முடிவடைந்தது.

பலத்த வீழ்ச்சி கண்ட பங்குகள்

பலத்த வீழ்ச்சி கண்ட பங்குகள்

தொடர்ந்து அன்னிய முதலீடுகளானது வெளியேறிய நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவினைக் கண்டது. நிஃப்டி குறியீட்டில் உள்ள 36 நிறுவனங்கள் கடந்த வாரத்தில் சரிவினைக் கண்டன. இந்த குறியீட்டில் டெக் மகேந்திரா 11,48% வீழ்ச்சியுடன் டாப் லூசராகவும் இருந்தது. இதனை தொடர்ந்து விப்ரோ நிறுவனம் 8.74% வீழ்ச்சியுடனும், டைட்டன் நிறுவனம் 8.41% வீழ்ச்சியுடனும், ஹெச்.சி.எல் டெக்னாலஜி 7.49% வீழ்ச்சியுடனும், டாடா ஸ்டீல் 7.27% வீழ்ச்சியுடனும் சரிவினைக் கண்டுள்ளது.

 ஏற்றம் கண்ட பங்குகள்

ஏற்றம் கண்ட பங்குகள்

மேலும் டாக்டர் லேபாரட்டீஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிவிஸ் லேப், இன்ஃபோசிஸ், கிரசிம், ஏசியன் பெயிண்ட்ஸ், உள்ளிட்ட பங்குகளும் 5% மேலாக சரிவினைக் கண்டன.

அதே சமயம் சிப்லா, ஆக்ஸிஸ் வங்கி, இந்தஸ் இந்த் வங்கி, என்.டி.பி.சி, மாருதி சுசுகி, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் 4 - 8% ஏற்றத்திலும் காணப்பட்டன.

 விலகியே இருங்கள்

விலகியே இருங்கள்

சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் பணவீக்கம், நாணய மதிப்புகள் சரிவு, கச்சா எண்ணெய் விலையேற்றம், பட்ஜெட் 2022 எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட பலவற்றிற்கும் மத்தியில் நிபுணர்கள் பலரும் ஷார்ட் கவரிங்கினையே கடந்த வாரத்தில் பரிந்துரை செய்திருந்தனர். மேலும் ஃபண்டமெண்டல் ரீதியில் பலவீனமான பங்குகள், தொடர்ந்து புதிய உச்சம் எட்டிய பங்குகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பிஎஸ்இ இன்டெக்ஸ் சரிவு

பிஎஸ்இ இன்டெக்ஸ் சரிவு

இதே பிஎஸ்இ குறியீட்டினை பொறுத்தவரையில், கன்சியூமர் டியூரபிள் குட்ஸ் 6.83% வீழ்ச்சி கண்டுள்ளது. ஐடி மற்றும் ரியாலிட்டி துறை, டெக், மெட்டல்ஸ் மற்றும் கேப்பிட்டல் குட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 2% முதல் 6% வரையில் சரிவினைக் கண்டன.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

குறிப்பாக அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் ஈக்விட்டியில் நிக விற்பனையாளர்களாக உள்ளனர். மொத்தமாக 33,253.64 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியிருந்தாலும், 52,705.26 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர். இதற்கிடையில் மொத்தம் 19,000 கோடி ரூபாய் நிகர வெளியேற்றம் உள்ளது.

பட்ஜெட்டினை பொறுத்து?

பட்ஜெட்டினை பொறுத்து?

இதற்கிடையில் வரவிருக்கும் வாரத்தில் பட்ஜெட் அறிவிப்பினை பொறுத்தே சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். குறிப்பாக உள் நாட்டு முதலீட்டாளர்கள் பெரியளவிலான முதலீடுகளை தவிர்க்கலாம். வரவிருக்கும் மாதங்களில் புதிய பல பொருளாதாரம் குறித்தான அறிவிப்புகள் வரலாம். இதன் காரணமாக சந்தையின் நகர்வு அதனை பொறுத்தும் இருக்கலாம்.

முக்கிய டேட்டாக்கள்

முக்கிய டேட்டாக்கள்

வரவிருக்கும் வாரத்தில் வாகன விற்பனை குறித்தான தரவு, பொருளாதார வளர்ச்சி குறித்தான தரவு, பிஎம்ஐ தரவு என பலவும் வெளியாகவுள்ளன. இதன் காரணமாக சந்தையில் இதன் தாக்கமும் இருக்கலாம். இதற்கிடையில் வரவிருக்கும் வாரத்தில் இந்தஸ்இந்த் வங்கி, பிபிசிஎல், எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், டாபர் இந்தியா, பஜாஜ் கன்சியூமர் கேர், லூபின், கெயில், அப்பல்லோ டயர்ஸ், டைட்டன் நிறுவனம், பிர்லா கார்ப்பரேஷன், இண்டிகோ உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex slips over 3% for second week ahead of budget 2022

sensex slips over 3% for second week ahead of budget 2022./ஒரே வாரத்தில் 3% வீழ்ச்சி.. 2வது வாரமாக தொடரும் போராட்டம்.. கவலையில் முதலீட்டாளர்கள்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X