விவசாயிகளுக்கு ஸ்பெஷல் ஏடிஎம் சேவை.. ஆந்திர அரசு புதிய அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆந்திர பிரதேச மாநில அரசு மக்களுக்குப் பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், வங்கி சேவைகள் மூலம் சமூகத்தில் விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

 

இப்புதிய திட்டத்தின் படி ஆந்திர மாநிலத்தில் எல்லை வரையில் இருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் வங்கி சேவை மட்டும் அல்லாமல் ஏடிஎம் சேவையும் அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 ஆந்திர மாநில அரசு

ஆந்திர மாநில அரசு

ஆந்திர மாநில அரசின் பல்வேறு நல திட்டங்களைத் தற்போது இந்தியாவில் பல மாநிலங்கள் காப்பி அடித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கி சமீபத்தில் அம்மாநிலத்தின் விவசாயத் துறையை மேம்படுத்தும் திட்டத்தையும், Rythu Barosa Kendras (RBKs) திட்டத்தையும் வெகுவாகப் பாராட்டியுள்ளது.

 ரயிது பரோசா கேந்திரா

ரயிது பரோசா கேந்திரா

இந்நிலையில் ஆந்திர மாநில அரசு ரயிது பரோசா கேந்திராக்கள் உடன் ஏற்கனவே வங்கியியல் சேவையை இணைக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது புதிதாக ஏடிஎம் சேவைகளையும் அறிமுகம் செய்ய ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 நிதியியல் சேவை
 

நிதியியல் சேவை

இத்தகைய திட்டங்கள் மூலம் கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு முழுமையான நிதியியல் சேவை கிடைக்கும் குறிப்பாக விவசாயிகளுக்கு அதிகப்படியான நிதி ஆதரங்கள் உடனுக்குடன் கிடைக்கும். இத்திட்டத்தின் பிடி விவசாயிகளுக்கு வங்கி சேவைகளைக் கிடைக்கும் வகையில் ரயிது பரோசா கேந்திராக்களில் வங்கி சேவைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

 வங்கி நிருபர்கள்

வங்கி நிருபர்கள்

மேலும் 9160 வங்கி நிருபர்களை 10,778 ரயிது பரோசா கேந்திராக்கள் உடன் இணைக்கப்பட்டு உள்ளது. தற்போது வங்கி அதிகாரிகள் மீதமுள்ள 1,618 கிளைகளுக்கு வங்கி நிருபர்களை இணைக்கும் பணிகளைச் செய்து வருகிறது. ஆந்திர மாநில அரசின் இத்திட்டம் விவசாயிகளுக்கு மட்டும் அல்லாமல் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பிரிவில் இருக்கும் மக்களுக்கும் பெரிய அளவில் உதவும்.

 விவசாயத் துறை கமிஷ்னர்

விவசாயத் துறை கமிஷ்னர்

பரவலாக்கப்பட்ட வங்கி மாதிரி வடிவம் விவசாயக் கடன் மற்றும் ஆரோக்கியமான வங்கி சேவைக்கு வழி வகுக்கும் என ஆந்திர மாநில விவசாயத் துறை கமிஷ்னர் அருண் குமார் தெரிவித்துள்ளார். வங்கி நிருபர்கள் ஏற்கனவே தத்தம் பகுதிகளில் நிதியியல் சேவைகளையும், மினி ஏடிஎம் சேவைகளையும் அளித்து வருகின்றனர்.

 ஏடிஎம் இயந்திரங்கள்

ஏடிஎம் இயந்திரங்கள்

இதேபோல் 20,000 ரூபாய் மதிப்பிலான பணம் வித்டிரா மற்றும் டெபாசிட் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உண்மையான ஏடிஎம் இயந்திரங்களை ரயிது பரோசா கேந்திராக்களில் நிறுவ திட்டமிடப்பட்டு வருகிறது.

 வங்கி சேவைகளின் முக்கியதுவம்

வங்கி சேவைகளின் முக்கியதுவம்

எப்படி வங்கி சேவைகள் அனைத்து மக்களுக்குக் கிடைக்கும் போது நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி அடைகிறதோ அதேபோல் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான வங்கி சேவைகளைக் கொண்டு சேர்க்கும் போது பொருளாதாரம் வளர்ச்சி அடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Special ATMs for Farmers launched across Andhra Pradesh

Special ATMs for Farmers launched across Andhra Pradesh விவசாயிகளுக்கு ஸ்பெஷல் ஏடிஎம் சேவை.. ஆந்திர அரசு புதிய அறிவிப்பு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X