மாநில அரசுகளுக்கு ரூ.95,082 கோடி கொடுக்க நிர்மலா சீதாராமன் உத்தரவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் மாநிலங்களுடன் செய்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், மாநில அரசுக்கான நவம்பர் மாத வரி பகிர்வை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலின் பெயரில் மத்திய அரசு நவம்பர் மாதம் கூடுதலாக 47,541 கோடி ரூபாய் கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

 கிரிப்டோகரன்சியை தடை செய்ய வேண்டாம், ஆனா.. முக்கிய முடிவை எடுக்கும் மத்திய அரசு..! கிரிப்டோகரன்சியை தடை செய்ய வேண்டாம், ஆனா.. முக்கிய முடிவை எடுக்கும் மத்திய அரசு..!

 உள்கட்டுமான மேம்பாடு

உள்கட்டுமான மேம்பாடு

இதன் மூலம் நவம்பர் மாதம் மட்டும் மாநில அரசுகள் சுமார் 95,082 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற உள்ளது. இந்தக் கூடுதல் நிதியை மாநில அரசுகள் உள்கட்டுமானத்தை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது எனத் தெரிகிறது.

 14 தவணை

14 தவணை

பொதுவாக மத்திய நிதியமைச்சகம் ஜிஎஸ்டி வரி வசூல் அளவீட்டை 14 தவணையாக மாநில அரசுகளுக்கு ஒரு வருடத்தில் பிரித்துக் கொடுக்கும், இதில் மார்ச் மாதம் மட்டும் 3 தவணை சேர்த்து அளிக்கப்படும்.

 நிர்மலா சீதாராமன்
 

நிர்மலா சீதாராமன்

இந்நிலையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நிதித்துறை செயலாளரை நவம்பர் 22ஆம் தேதி மார்ச் மாதத்திற்கான ஒரு தவணையைச் சேர்த்து நவம்பர் மாதம் 2 தவணையாகக் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.

 95,082 கோடி ரூபாய்

95,082 கோடி ரூபாய்

இதன் மூலம் நவம்பர் 22ஆம் தேதி மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுமார் 95,082 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற உள்ளது. இதேபோல் மார்ச் மாதம் 3 தவணைக்குப் பதிலாக 2 தவணைக்கான தொகையை மட்டுமே பெற உள்ளது.

 வரி வருமானம்

வரி வருமானம்

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான அதீத வரி விதிப்பால் அதிகளவிலான வரியை வசூலித்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் மாத இறுதியில் மத்திய அரசு சுமார் 2.7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வரி வருமானத்துடன் உள்ளது.

 பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

மேலும் தற்போது பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டது மூலம் வரி வருமான அளவீட்டில் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இருக்காது என நிதித்துறை செயலாளர் டிவி.சோம்நாத் தெரிவித்துள்ளார்.

 ஜிஎஸ்டி வரி

ஜிஎஸ்டி வரி

தற்போது ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் மத்திய அரசு வசூலித்த வரித் தொகையில் 41 சதவீத தொகையை 14 தவணைகளாக மத்திய அரசு மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து அளிக்கிறது. நவம்பர் மாதம் 2 தவணைகளை அளிக்கப்படும் காரணத்தால் மாநில அரசுகளிடம் அதிகளவிலான பணப்புழக்கம் உருவாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

State Govts to get Rs 95,082 crore on November for Infra Developments: Nirmala Sitharaman

State Govts to get Rs 95,082 crore on November for Infra Developments: Nirmala Sitharaman
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X