அதீத கடனில் சிக்கித்தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு நீண்ட காலமாக முயற்சி செய்து வரும் நிலையில், ஏர் இந்தியாவை வாங்க டாடா குரூப் களத்தில் இறங்கியுள்ளது.
டாடா குழுமத்தின் விமானப் போக்குவரத்து நிறுவனமான விஸ்தாரா நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர் இந்தியாவை வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் டாடா - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டணி விஸ்தாரா நிறுவனத்தின் வாயிலாக ஏர் இந்தியாவைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான் ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. செம குஷியில் ஊழியர்கள்..!

கொரோனா
ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய இந்தக் கொரோனா காலத்தில் மட்டும் 4 முறை விருப்ப விண்ணப்பங்கள் பெறுவதற்காக நாட்களை ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது டாடா குழுமத்தின் இந்தப் பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

டாடா குழுமம்
கடந்த 2 வருடமாக டாடா குழுமம் பல துறைகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து புதிய வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும், வருமானத்தையும் பெற்று வருகிறது. குறிப்பாக நுகர்வோர் மற்றும் ரீடைல் விற்பனை சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கும் திட்டத்தில் டாடா குழுமம் தீவிரமாக உள்ளது.

113 பில்லியன் டாலர்
ஸ்டீல், ஆட்டோமொபைல் முதல் மென்பொருள் சேவை வரையில் பல துறைகளில் 100க்கும் அதிகமான வர்த்தகத்தைக் கொண்டுள்ள மாபெரும் வர்த்தகம் சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம் 113 பில்லியன் டாலர் அதாவது 8.34 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது.
இந்த மாபெரும் நிறுவனம் நீண்ட காலத்திற்குப் பின் ஏர் இந்தியாவைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

டாடா அதிரடி
சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் உடனான டாடா குழுமத்தின் பேச்சுவார்த்தை சாதகமாக இல்லை என்றாலும் டாடா தனிப்பட்ட முறையில் ஏர் இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் உள்ளதாகவும், வெளி நிறுவனங்களின் தலையீடு இல்லாமல் தனிப்பட்ட நிர்வாகத்தை அமைத்து விமானச் சேவை அளிக்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டாடா விமானச் சேவை
டாடா குழுமம் தற்போது சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் உடனான கூட்டணியில் விஸ்தாரா-வும், ஏர் ஏசியா பெர்ஹாட் உடனான கூட்டணியில் ஏர் ஏசியா இந்தியா ஆகிய இரு நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் விமானச் சேவை அளித்து வருகிறது டாடா.
தற்போது டாடா வெற்றிகரமான ஏர் இந்தியாவைக் கைப்பற்றினால் 3 வர்த்தகத்தையும் ஒற்றை நிறுவனமாக மறுசீரமைப்புச் செய்து சேவை அளிக்கும் திட்டமும் டாடா தீட்டியுள்ளது.

விஸ்தாரா
டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் கூட்டணியில் உருவான விஸ்தாரா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் மற்றும் Temasek ஆகிய நிறுவனங்கள் சுமார் 55 சதவீத பங்குகளை வைத்துள்ள காரணத்தால் ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்றும் முடிவில் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் மற்றும் Temasek நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.