கைவிட்டு போன ஏர் இந்தியா.. 87 வருடங்களுக்கு பிறகு.. மீண்டும் டாடாவின் கைவசமாகுமா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடன் நெருக்கடியால் தவித்து வரும் ஏர் இந்தியாவின் பங்குகளை எப்படியேனும் விற்றால் போதும் என அரசு ஒரு புறம் தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், அதை டாடா நிறுவனம் வாங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

87 ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியாவை டாடா குழுமம்தான் இதை நிறுவியது. பின்னர் அதை அரசு கைப்பற்றியது. இந்த நிலையில் தற்போது அரசு ஏர் இந்தியாவை கை கழுவ முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் ஏர் இந்தியாவை வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளார். இது குறித்து டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், சமீபத்திய டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் கூறுகையில், இதை விஸ்தாராதான் வாங்க வேண்டும். ஏற்கனவே 2 ஏர்லைன்ஸ்கள் டாடா சன்ஸிடம் உள்ள நிலையில், மூன்றாவது தேவையா என்ற கேள்வியும் எழுகிறது என்றார் அவர்.

காய வைக்கும் துணியில் இருந்து கரண்டா..? அச்சர்யப்படுத்தும் ஐஐடி ஆராய்ச்சி..!காய வைக்கும் துணியில் இருந்து கரண்டா..? அச்சர்யப்படுத்தும் ஐஐடி ஆராய்ச்சி..!

அரசின் முயற்சி பலனளிக்கவில்லை

அரசின் முயற்சி பலனளிக்கவில்லை

அரசு 24 சதவிகிதம் பங்குகளை தக்கவைத்துக் கொண்டு, அதன் மீதான பங்குகளை விற்க போடப்பட்ட முந்தைய திட்டம் சரியாக பலன் அளிக்காத நிலையில், ஏர் இந்தியா புதிய திட்டத்தை நிறுவியது. அதன் படி ஏர் இந்தியாவில் இருந்து முழுமையாக வெளியேறுவதற்கான விருப்பத்தை அரசாங்கம் சமீபத்திய மாதங்களில் சுட்டி காட்டி வருகிறது. ஏனெனில் ஏர் இந்தியாவின் 76 சதவிகித பங்கு விற்பனை பலனளிக்காத நிலையில், தற்போது ஏர் இந்தியாவின் முழு பங்கினையும் விற்க முடிவெடுத்துள்ளது.

கடுமையான விதிமுறைகள்

கடுமையான விதிமுறைகள்

ஏனெனில் அரசின் கடுமையான விதிமுறைகளும் நிபந்தனைகளும் இருக்கும் என்றும் கூறப்பட்ட நிலையில், டாடா குழுமம் இதில் எந்த வித ஆர்வமும் காட்டவில்லை. மேலும் டாடா நிறுவனம் ஜெட் ஏர்வேர்ஸை வாங்குவதையே, இதன் கூட்டு நிறுவனம் மதிப்பீடு செய்து வந்ததாகவும் சந்திரசேகரன் கூறியிருந்தார். டாடா மட்டும் அல்ல, வேறு எந்த நிறுவனமும் ஏர் இந்தியாவின் முந்தைய திட்டத்திற்கு ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை.

இணைப்புக்கு பின் நஷ்டம்

இணைப்புக்கு பின் நஷ்டம்

ஏர் இந்தியாவை கையகப்படுத்துவதற்கு டாடா நிறுவனத்திற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஏனெனில் இது அதன் முன்னோடி நிறுவனம். தவிர நஷ்டத்தில் உள்ள விஸ்தாரா விமான வணிகத்தை அளவிட உதவும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சில பங்குதாரர்களுடன் இணைந்துள்ள நிலையில் விஸ்தாரா, கடந்த 2019ம் நிதியாண்டில் 1,500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏர் இந்தியா கையகப்படுத்துதல் இந்த இழப்பை சரிசெய்ய உதவலாம் என்றும் கூறப்படுகிறது.

ரத்தன் டாடா இதை பற்றி சிந்திக்கலாம்

ரத்தன் டாடா இதை பற்றி சிந்திக்கலாம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் டாடா டிரஸ்டின் தலைவருமான ரத்தன் டாடா, ஏர் இந்தியாவை கையகப்படுத்துவது குறித்து சாதகமாக காணக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இது அவரது முன்னோடி. நிறுவனம் அல்லவா? கடந்த 1932ல் ஜேர்.ஆர்.டி டாடாவால் நிறுவப்பட்டது. மேலும் ஏர் இந்தியாவைப் வாங்கும்போது, விஸ்தாரா நிறுவனத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல இது உதவும் என்றும் கூறப்படுகிறது. தற்போது விஸ்தாரா நான்கு சர்வதேச இடங்களுக்கு மட்டுமே பறக்கிறது. இந்த நிலையில் இது இன்னும் பெரிய அளவில் மேம்படுத்த உதவும் என்றும் கூறப்படுகிறது.

உள்நாட்டு பங்கினையும் அதிகரிக்கும்

உள்நாட்டு பங்கினையும் அதிகரிக்கும்

மேலும் இது விஸ்டாராவின் உள்நாட்டு சந்தை பங்கினையும் அதிகரிக்கும் என்றும், இது தற்போது 6 சதவிகிதமாக உள்ள நிலையில், ஏர் இந்தியாவை கையகப்படுத்தும்போது இது இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஏர் இந்தியாவைக் கையகப்படுத்துவதற்கு தகுதியான முதல் நபர் டாடா குழுமமே என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் பிப்ரவரி 10, 1929ல் அவர் தனது விமான நிறுவன உரிமத்தை பெற்றார் என்றும், இந்தியாவுக்கு விமான வணிகத்தை கொண்டு வந்தவரும் இவரே என்றும் கூறப்படுகிறது.

டாடாவின் கீழ் சிறப்பாக செயல்பட்டது

டாடாவின் கீழ் சிறப்பாக செயல்பட்டது

இதில் வேடிக்கை என்னவெனில் இந்த நிறுவனம் தேசியமையமாக்கப்பட்ட போதும், சிறிது காலம் டாடாவே விமான நிறுவனத்தின் தலைவராக இருந்துள்ளார். 1977ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் அவரை நீக்கும் வரையிலும் கூட ஏர் இந்தியா டாடாவுக்கு கீழ் சிறப்பாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

படிப்படியாக சரிவு

படிப்படியாக சரிவு

இந்த நிலையில் ஏர் இந்தியா படிப்படியாக சரியத் தொடங்கிய நிலையில், கடந்த 2017 - 2018ம் ஆண்டில் இதன் வருவாய் 27,000 கோடி ரூபாய் என்றும், இதன் நிகர இழப்பு 5,799 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டது. இந்த காலத்தில் நிதி அல்லத் வட்டித் தொகை 4000 கோடி ரூபாபாயைத் தாண்டியது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் இந்த நிறுவனத்துக்கு 58,000 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் கூறப்பட்டது.

மற்ற நிறுவனங்களை விட பின் தங்கியது

மற்ற நிறுவனங்களை விட பின் தங்கியது

அதிலும் கடந்த மாதத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைமையிலான எரிபொருள் சப்பைளையர்கள், நிலுவையை செலுத்த வேண்டும் இல்லையெனில் எரிபொருள் தர முடியாது என்றும் தனது சப்ளையை நிறுத்தியது. இதனால் இந்த நிறுவனம் மற்ற தனியார் விமான நிறுவனங்களை விட பின் தங்கியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata group looking at bid for Air India after 87 year again

Tata group looking at bid for Air India after 87 year again. Air india clocked consolidated revenues in excess of Rs 27,000cr in 2017-18,its made loss of Rs 5,799cr and interest charges exceeded Rs 4,000cr in this period. Also last month earlier consolidated debt around Rs 58,000cr.
Story first published: Monday, November 4, 2019, 15:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X