ரிலையன்ஸூக்கு போட்டியாக களமிறங்கும் டாடா.. இறுதிக் கட்டத்தில் பிக்பாஸ்கெட்டுடனான கூட்டணி ஒப்பந்தம்..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமம், விரைவில் ஆன்லைன் இ-காமர்ஸ் சந்தையில் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதற்காக டாடா குழுமம் தனது ஆன்லைன் டிஜிட்டல் வணிகத்தினை தொடங்க, பல முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றது.

இந்த நிலையில் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிக்பாஸ்கெட் நிறுவனத்துடன், டாடா குழுமம் கூட்டணி சேரலாம் என்றும் கூறப்பட்டது.

இறுதிகட்ட பேச்சு வார்த்தை

இறுதிகட்ட பேச்சு வார்த்தை

ஏற்கனவே டாடா குழுமம் பல சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதற்கிடையில் வளர்ந்து வரும் ஆன்லைன் மளிகை சந்தையை, கைப்பற்றுவதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், அது தற்போது இறுதி கட்ட ஒப்பந்தத்தினை எட்டும் நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது. இதன் மதிப்பு சுமார் 1.3 பில்லியன் டாலராக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு பங்கு?

எவ்வளவு பங்கு?

டாடா குழுமம் பிக்பாஸ்கெட்டில் சுமார் 80% பங்குகளை சுமார் 1.3 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக இதனையறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. டாடா குழுமம் வளர்ந்து வரும் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனையாளரை 1.6 பில்லியன் டாலர் என மதிப்பிடுவதாகவும், இவ்வளர்ச்சியை பற்றி அறிந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முதலீட்டாளர்களிடம் இருந்தும் பங்குகளை வாங்கலாம்
 

முதலீட்டாளர்களிடம் இருந்தும் பங்குகளை வாங்கலாம்

சுமார் ஐந்து மாத பேச்சு வார்த்தைக்கு பிறகு டாடா குழுமமும், பிக்பாஸ்கெட் நிறுவனமும், இந்த இறுதிகட்ட ஒப்பந்தத்திற்கு முன்னேறியுள்ளன. டாடா குழுமம் ஏற்கனவே உள்ள அலிபாபா உள்ளிட்ட சில முதலீட்டாளர்களிடம் இருந்து 50 - 60% பங்குகளை வாங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் பிக்பாஸ்கெட்டில் 20 - 30% பங்குகளை வாங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் டாடா குழுவிற்கு பிக்பாஸ்கெட்டில் கிட்டதட்ட 80% பங்கு இருக்கலாம். இந்த ஒப்பந்தம் குறித்து முறையான அறிவிப்புகள் அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் போட்டியாளராக மாறலாம்

பெரும் போட்டியாளராக மாறலாம்

டாடா குழுமம் ஏற்கனவே எஃப்எம்சிஜி சில்லறை வர்த்தகம், டாடா CLiQ, என பல வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்து வருகிறது. இந்த நிலையில் டாடாவின் ஆன்லைன் வர்த்தகங்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஜியோமார்ட்டுக்கு நிச்சயம் ஒரு போட்டியாளராக மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன அம்சங்கள்?

என்னென்ன அம்சங்கள்?

டாடா குழுமம் தனது சூப்பர் ஆப்பில் உணவு மற்றும் மளிகை, பேஷன், எலக்ட்ரானிக்ஸ், இன்சூரன்ஸ், நிதி சேவைகள், கல்வி, ஹெல்த்கேர், பில் பேமெண்ட் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கலாம் என்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரன், நடப்பு ஆண்டு கூட்டத்தில் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

பிக்பாஸ்கெட்டின் திறன்

பிக்பாஸ்கெட்டின் திறன்

இதற்கிடையில் அலிபாபாவிடம் இருக்கும் பிக்பாஸ்கெட்டின் முழு பங்கினையினையும், டாடா குழுமம் வாங்கலாம் என்கிறது ஒரு தரப்பு. Forrester Research தகவல் படி, பெங்களூரினை தலைமையிடமாகக் கொண்ட பிக்பாஸ்கெட்டில், தினசரி 3 லட்சம் ஆர்டர்கள் கிடைப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த மார்ச் 31-வுடன் முடிவடைந்த ஆண்டில் பிக்பாஸ்கெட் நிறுவனம் 920 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டதாகவும், இதன் விற்பனை மதிப்பு 5,200 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டது. இதன் மதிப்பு கடந்த மார்ச்சில் 1.23 பில்லியன் டாலர்களாகும்.

பிக்பாஸ்கெட்டின் மதிப்பு

பிக்பாஸ்கெட்டின் மதிப்பு

கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு கொரோனாவால் ஆன்லைன் வணிகங்கள் மேம்பட்டுள்ளன. இதன் காரணமாக பிக்பாஸ்கெட்டின் மதிப்பும் கணிசமாக அதிகரித்திருக்கும். மக்கள் கொரோனா பயத்தால், சமூக இடைவெளி, சுகாதாரம் இவற்றால், ஆன்லைனிலேயே ஷாப்பிங் செய்ய விரும்புகின்றனர். ஆக இதுவும் பிக்பாஸ்கெட் மதிப்பு அதிகரிக்க ஒரு காரணம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata group nears deal to buy bigbasket for 1.3 billion dollar

Tata group new updates.. Tata group nears deal to buy bigbasket for 1.3 billion dollar
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X