தமிழக இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. 45,000 பேருக்கு வேலை தரும் டாடா.. எங்கு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாடா குழுமம் தென் இந்தியாவில் உள்ள தனது எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில், ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையில் ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உணவில் பயன்படுத்தப்படும் உப்பு முதல் சாப்ட்வேர் வரையில் வெற்றிகரமாக கோலோச்சி வரும் டாடா, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் களமிறங்கியுள்ளது.

ஐபோன் வாங்க துபாய் பறந்த கேரள இளைஞன்.. டிரெண்டாகும் போட்டோ..!ஐபோன் வாங்க துபாய் பறந்த கேரள இளைஞன்.. டிரெண்டாகும் போட்டோ..!

ஓசூர் ஆலையில் பணியமர்த்தல்

ஓசூர் ஆலையில் பணியமர்த்தல்

தமிழ் நாட்டில் ஓசூரில் அமைந்துள்ள ஆலையில் தான் இந்த பணியமர்த்தலானது இருக்கலாம் என கூறப்படுகிறது. இங்கு மொத்தம் 45000 ஊழியர்களை, அடுத்து வரும் 18 - 24 மாதங்களில் பணியமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேற்கண்ட இந்த பணியமர்த்தலில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிகக் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தற்போதைய நிலவரம் என்ன?

தற்போதைய நிலவரம் என்ன?

எனினும் டாடா குழுமம் இது குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிடவில்லை.

தற்போது டாடாவின் இந்த ஓசூர் ஆலையில் 10,000 பேர் பணி புரிந்து வருகின்றனர். இந்த ஆலையினை ஐபோன் வீடாக மாற்றும் என்று தெரிவித்துள்ளது.

 

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி

உணவில் பயன்படுத்தும் உப்பு முதல் சாப்ட்வேர் வரையில் வெற்றிகரமாக கோலேச்சி வரும் டாடா, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் களமிறங்கியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து தனது உற்பத்தியினை படிப்படியாக குறைத்து, சீனாவுக்கு வெளியே உற்பத்தியினை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே ஐபோன் 14 ப்ரோ மாடலை சென்னையில் உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளது.

 

தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு

தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு

இந்த ஐபோன் 14 ப்ரோ ஆனது சீனாவில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் தற்போது அதன் உற்பத்தியினை இந்தியாவில் தொடங்கியுள்ளது. தற்போது உதிரி பாகங்கள் உற்பத்தியினையும் இந்தியாவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் உற்பத்தி பாதிப்பு

சீனாவில் உற்பத்தி பாதிப்பு

சீனா தற்போதும் கூட கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பல முக்கிய நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மூலதன பொருட்கள் தொடங்கி, மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி வரையில் பலவற்றின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவுக்கு மாற்றாக நிறுவனங்கள் மாற்று வழியினை தேடத் தொடங்கியுள்ளன. இது இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

இதுவும் ஒரு முக்கிய காரணம்

இதுவும் ஒரு முக்கிய காரணம்

மேலும் சீனா அமெரிக்கா இடையேயான அரசியல் பதற்றமானது தொடர்ந்து கொண்டே உள்ளது. இது எப்போது பெரும் பிரச்சனையாக மாறுமோ என்ற பதற்றமும் நிறுவனங்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இதுவும் அமெரிக்க நிறுவனங்கள் உள்பட, சீனாவில் உள்ள வெளி நாட்டு நிறுவனங்கள் மாற்று வழியினை தேட வழிவகுத்துள்ளன.

டாடாவின் ஒசூர் ஆலை

டாடாவின் ஒசூர் ஆலை

டாடாவின் ஓசூர் ஆலை 500 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்துள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் பழங்குடியின சமூகத்தினை சேர்ந்த பெண்கள் உள்பட 5000 பெண்களை பணிக்கு அமர்த்தியது குறிப்பிடத்தகக்து.

 

ஒசூர் தொழிற்சாலையில் பெண்களின் மொத்த சம்பளம் மாதம் சுமார் 16,000 ரூபாயாகும். டாடாவின் இந்த தொழிற்சாலை வளாகத்திற்குள் இலவச பயிற்சி கல்வி மற்றும் இலவச உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata plans to add up to 45,000 employees at iphone part plant in tamil nadu

According to the report, Tata plant located in Hosur in Tamil Nadu will hire 45,000 people in the next 18-24 months.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X