விரைவில் 3,000 பேரை வீட்டுக்கு அனுப்பலாம்.. டாடா ஸ்டீல் அதிரடி நடவடிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதன் ஐரோப்பா கிளையில் விரைவில் 3,000 பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

முன்னதாக இத்துறையில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக இந்த நிறுவனம் 2,500 பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் இதே போல் ஒரு அறிக்கை வந்துள்ளது. இதில் 3,000 பேர் ஆள்குறைப்பு செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஐரோப்பிய கிளையின் தலைமை அதிகாரி ஹென்ரிக் ஆதாம் இது குறித்து கூறுகையில், ஐரோப்பாவில் சுமார் 20,000 பேர் பணியாற்றுகிறார்கள். எனினும் எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற புள்ளி விவரங்களை அவர் அறிவிக்கவில்லை.

30,000 - 40,000 பேர் வேலை பறிக்கப்படலாம்.. கவலையில் ஐடி ஊழியர்கள்..!30,000 - 40,000 பேர் வேலை பறிக்கப்படலாம்.. கவலையில் ஐடி ஊழியர்கள்..!

ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படலாம்

ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படலாம்

டச்சு ஊழியர்களின் கூட்டத்தை தொடர்ந்து 3000 பேரின் வேலை குறைக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது. இது வரும் வாரங்களில் இருந்து செயல்பாட்டுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் டாடாவின் செய்தித் தொடர்பாளர் இது பற்றிய உடனடியான கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது முன்னதாக 2,500 பேர் என்ற நிலையில் நாளுக்கு நாள் ஸ்டீல் துறை பின்னடைவை சந்திப்பதையே இது குறிக்கிறது.

வணிகத்தை வலுபடுத்த திட்டம்

வணிகத்தை வலுபடுத்த திட்டம்

இந்திய வணிகத்திற்கு சொந்தமான டாடா ஸ்டீல் தனது ஐரோப்பிய வணிகத்தை வலுப்படுத்த, கடந்த ஜூன் மாதத்திலேயே ஒரு அதிரடியான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனத்தின் ஸ்டீல் தயாரித்தல் நெதர்லாந்து மற்றும் வேல்ஸில் எஃகு தயாரித்தல் செயல்பாடுகள் அனைத்தும் ஐரோப்பா வணிகத்தை வலுபடுத்த அதன் கீழ் கொண்டு வரப்பட்டது. எனினும் அதெல்லாம் கை கொடுக்காத நிலையிலேயே இப்படி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

ஆட்குறைப்பு எனும் அஸ்திரம்
 

ஆட்குறைப்பு எனும் அஸ்திரம்

ஸ்டீல் ஆலைகள் மூடல் எதுவும் இருக்காது. இந்த நிறுவனம் எதிர்கொள்ளும் பெரும் எண்ணிக்கையிலான சவால்களுக்கு எதிராக அதைக் காப்பாற்றுவதே இதன் நோக்கம் என்று டாடா தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் ஸ்டீல் தயாரித்தல் மற்றும் சர்வதேச போட்டி, அதிக அளவிலான செலவினங்களிலிருந்து திணறடிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டீல் நிறுவனங்கள் இப்படி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளன.

சீனாவும் ஒரு காரணம்

சீனாவும் ஒரு காரணம்

இந்த நிலையிலேயே நல்ல ஊதியம் பெறும் உயர்மட்ட வேலைகளுக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதெல்லாவற்றையும் விட சீனா ஸ்டீல் உற்பத்தியை அதிகரித்துள்ளது மிகப் பெரிய காரணமாக கருதப்படுகிறது. ஏனெனில் ஸ்டாக் அதிகளவில் இருக்கும் அளவுக்கு உற்பத்தியை அதிகரித்துள்ளது, மற்ற முக்கிய உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தியை பாதித்துள்ளதோடு, அவர்களின் உற்பத்தியை குறைக்கவும் இது வழிவகை செய்தது.

சீனா உள்நாட்டு உற்பத்தியில் கவனம்

சீனா உள்நாட்டு உற்பத்தியில் கவனம்

அமெரிக்கா சீனாவிடையே நிகழ்ந்து வரும் வர்த்தகப்போரினால், அமெரிக்காவில் தனது வர்த்தகத்தில் இருந்து வெளியேறிய சீனா, தற்போது தனது உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. ஒரு புறம் இதன் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ள ஆர்செலர், சில நாடுகளில் உள்ள கிளைகளில் எந்த உற்பத்தியையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. குறிப்பாக ஐரோப்பாவில் முன்பை விட உற்பத்தியை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

செலவினை குறைக்க திட்டம்

செலவினை குறைக்க திட்டம்

இந்த நிறுவனம் செலவினைக் குறைக்கவும், செயல்திறனை ஒழுங்கு படுத்தவும், வினியோக சங்கிலிகளை மேம்படுத்தவும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் முற்படுகிறது. இந்த நிலையில் தான் ஆட்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது டாடா ஸ்டீல். இதன் மூலம் செலவினை குறைக்க முடியும் என்றும், இந்த பணத்தின் மூலம் தொழில் நுட்பத்தினை பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

மற்ற நாடுகளிலும் பணி நீக்கம்

மற்ற நாடுகளிலும் பணி நீக்கம்

டாடா ஸ்டீல் நிறுவனம் ஐரோப்பா தவிர, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அதன் ஆலைகளிலும் பணி நீக்கம் செய்யலாம் என்றும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டச்சு மீடியாவில் வெளிவந்தது. இதை இதற்கு முன்பே https://tamil.goodreturns.in/news/2019/10/22/tata-steel-europe-to-may-cut-2-500-employees-to-cost-cut-016460.html என்ற கட்டுரையில் வெளியிட்டுள்ளோம். வழக்கமாக மந்த நிலையால் சில நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை என்பதை எடுத்து வந்தாலும், ஆலைகளை குறைக்கும் நடவடிக்கையை இதுவரை எடுக்கவில்லை. ஆனால் ஆட்டோமொபைல் துறையில் உள்ள மந்த நிலையால், டாடா ஸ்டீல் அதையும் கையில் எடுக்கலாம் என்றும் முன்னர் வெளிவந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செலவை குறைக்க திட்டம்

செலவை குறைக்க திட்டம்

இது குறித்து டாடா குழுமம் ஏற்கனவே செய்தி நிறுவனங்களுக்கு அளித்த தகவலின் அடிப்படையில், டாடா குழுமம் தனது இந்திய நடவடிக்கைகள் பற்றியும், அதே நேரத்தில் ஒடிசாவிலுள்ள தனது கலிங்கா நகர் ஆலையில் முதலீடுகளை அதிகரித்தது குறித்தும் கூறியிருந்தது. அதில் டாடா ஸ்டீல் இந்தியா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2020ம் நிதியாண்டிற்கான மூலதன செலவாக 12,000 கோடி ரூபாயிலிருந்து, 8,000 கோடி ரூபாயாக குறைக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டது.

இந்தியாவிலும் ஆட்குறைப்பு இருக்கலாம்

இந்தியாவிலும் ஆட்குறைப்பு இருக்கலாம்

இதனால் ஐரோப்பாவிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான அசல் திட்டத்தை (செயல்பாடுகள்) விட 20- 25 சதவிகிதம் குறைவாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலமை செயல் அதிகாரி டிவி நரேந்திரன் நிச்சயம் இது இந்தியா மற்றும் ஐரோப்பிய தரப்பில் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata steel plans to shed up around 3,000 jobs across its European operations

Tata steel Europe to may cut 3,000 employees to cost cut, and it will continue other country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X