வெளிநாட்டு சுற்றுப்பயணமா? எளிதில் விசா கிடைக்க இந்த நாடுகளை தேர்வு செய்யுங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளிநாடு செல்பவர்களுக்கு விசா எடுப்பது என்பது தற்போது மிகவும் அரிதான வேலையாக உள்ளது.

 

ஒரு சில நாடுகள் விசா வழங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதிக்கும் என்பதும் அந்த நிபந்தனைகளை தாண்டி விசா பெறுவது என்பது பெரும் வேலையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாய் அங்கன்வாடி ஊழியர்.. மகனுக்கு ரூ.1.8 கோடி சம்பளம்.. ஓரே நேரத்தில் 3 நிறுவனத்தில் வேலை..!

ஆனால் அதே நேரத்தில் சில நாடுகள் இந்தியர்களுக்கு மிக எளிதில் விசா வழங்கும் நடவடிக்கை எடுத்துள்ளன. அவ்வாறு இந்தியர்களுக்கு மிக எளிதில் விசா வழங்கும் ஐந்து நாடுகள் குறித்து தற்போது பார்ப்போம்.

துருக்கி

துருக்கி

வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அம்சமாக இருக்கும் துருக்கி நாட்டில் உள்ள நினைவுச் சின்னங்கள், வரலாற்று சின்னங்கள் ஆகியவை தவறாமல் பார்க்க கூடிய பகுதிகள் ஆகும். துருக்கி நாடு இந்தியர்களுக்கு விசா வழங்குவதை மிகவும் எளிமைப்படுத்தி உள்ளது. துருக்கி நாட்டின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று தேவையான ஆவணங்களை வழங்கினால் உடனடியாக விசா கிடைப்பது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா

மலேசியா

இயற்கையின் மடியில் தங்கியிருக்கும் அழகான நிலப்பரப்புகளை கொண்ட மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்தியர்களுக்கு அந்நாடு மிகவும் எளிதாக விசாக்களை வழங்கி வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் அதிக இடங்கள் இருக்கும் மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய ஒவ்வொருவரும் விரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஸ்கூபா டைவிங் மற்றும் ட்ரெக்கிங் போன்ற பலவிதமான அம்சங்கள் இந்த நாட்டில் உள்ளது. மலேசியாவும் இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் மிகவும் எளிமைப்படுத்தி உள்ளது.

தான்சானியா
 

தான்சானியா

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தான்சானியா நாடு இயற்கை ஆர்வலர்களுக்கு மிகச் சரியான தேர்வாகும். புகழ்பெற்ற கிளிமஞ்சாரோ மலை தான்சானியாவின் சிகரங்களில் ஒன்று என்பதும் ஒரு கிரீடம் போல அந்நாட்டிற்கு இந்த கிளிமஞ்சாரோ மலை அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்தின் படப்பிடிப்பும் இங்கு நடந்துள்ளது என்பது தெரிந்ததே. இவ்வளவு அழகான தான்சானியா நாட்டை சுற்றிப்பார்க்க விரும்பும் இந்தியர்களுக்கு மிக எளிதில் அந்நாடு விசாக்களை வழங்கி வருகிறது.

மாலத்தீவுகள்

மாலத்தீவுகள்

சர்வதேச அளவில் மிகச்சிறந்த சுற்றுலா பயணம் செல்லும் இடங்களில் ஒன்று மாலத்தீவு என்பதும் குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள் மாலத்தீவுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா நட்சத்திரங்களுக்கு பல்வேறு சலுகைகள் இருந்தாலும் சாதாரண மக்களுக்கும் கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல் 30 நாட்களுக்குள் விசாவை மாலத்தீவு இந்தியர்களுக்கு வழங்கி வருகிறது என்பதால் எளிதில் விசா எடுத்து இந்நாட்டிற்கு சுற்றுப் பயணம் செய்யலாம்.

பஹ்ரைன்

பஹ்ரைன்

மிகவும் அற்புதமான சுற்றுலா பிரதேசங்கள் இருக்கும் பஹ்ரைன் நாட்டில் அற்புதமான கட்டிடக்கலை, கலாச்சார மையங்கள் ஆகியவை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இந்தியர்களுக்கு பஹ்ரைன் மிக எளிதில் விசாக்களை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விசா

விசா


மேற்கண்ட ஐந்து நாடுகள் இந்தியர்களுக்கு மிக எளிதில் விசா வழங்கி வருவதால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தவர்கள் முதலில் இந்த ஐந்து நாடுகளில் ஒன்றை பரிசீலனை செய்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

This Five Countries Provide Easy E-Visas To Indians!

This Five Countries Provide Easy E-Visas To Indians! | வெளிநாட்டு சுற்றுப்பயணமா? எளிதில் விசா கிடைக்க இந்த நாடுகளை தேர்வு செய்யுங்கள்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X