நடப்பு வாரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய 8 விஷயங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த அக்டோபர் 1வுடன் முடிவடைந்த வாரத்தில், ஈக்விட்டி பெஞ்ச்மார்க் குறியீடுகள் முந்தைய வாரத்தின் பெரும் இழப்புகளை, எஃப்ஐஐக்களின் விற்பனையும் தாண்டி ஈடு செய்துள்ளன. சொல்லப்போனால் 3% அதிகமான லாபத்தினை ஈட்டியுள்ளன.

இரண்டாவது நிதி தூண்டுதல், நேர்மறையான உலகளாவிய குறிப்புகள், லாக்டவுன் தளர்வு 5.0, வாகன விற்பனை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் சந்தை கடந்த வாரத்தில் சற்று ஏற்றத்தில் முடிவடைந்தது.

கடந்த வாரத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1308.39 புள்ளிகள் அதிகரித்து (அ) 3.50% அதிகரித்து 38,697.05 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 366.70 புள்ளிகள் அதிகரித்து, 11,416.95 ஆகவும் காணப்படுகிறது.

நடப்பு வாரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய 8 விஷயங்கள்..!

ஆக இப்படி வலுவான பல காரணிகளினால் வரவிருக்கும் வாரத்திலும் சந்தை ஏற்றத்தினைக் காணலாம். இந்த நிலையில் நடப்பு வாரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகளைத் தெரிந்து கொள்வோம்.

1) நிதி பற்றாக்குறை - நாட்டின் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க நேரடி நிதி ஊக்கம் தேவை. அரசு உணவு மற்றும் நேரடி செலவுகளை அதிகரிக்க வேண்டும். தனியாரின் செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அதே சமயம் அரசின் முக்கிய வருவாய்கள் வெகுவாக குறைந்துள்ள நிலையில், இந்த நிதி ஊக்கம் இருக்குமா என்ற பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. அப்படி ஊக்கத் தொகை வந்தால், அது ஜிடிபி வளர்ச்சிக்கு கைகொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2) மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான இஎம்ஐ கால அவகாசத்திற்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பாக அரசின் உயர்மட்ட அளவில் எடுக்கப்படும் முடிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரூ.2 கோடி வரையிலான வங்கி கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 5-ம் ( நாளை) தேதிக்கு தள்ளி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

3) டிசிஎஸ், 5 பைசா கேப்பிட்டல், majesco ltd, betata global securities ltd, gammon infrastructure projects ltd, rathi steel & power ltd, utta, galva sttels ltd, tilaknagar industries ltd, unity infraprojects services ltd, alpha hi tech fuel ltd உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை இந்த வாரத்தில் வெளியிட உள்ளன

படுஜோரான வாகன விற்பனை.. நிலையானது அல்ல.. எம்ஜி மோட்டார் சொன்ன உண்மை..!படுஜோரான வாகன விற்பனை.. நிலையானது அல்ல.. எம்ஜி மோட்டார் சொன்ன உண்மை..!

4) சர்வதேச வர்த்தகர்கள் மிக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் அமெரிக்காவின் இரண்டாம் கட்ட ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகள். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உடல் நிலை பற்றிய அறிவிப்புகள் கூட சந்தையில் வெளியாகலாம்.

5) கொரோனா பரவலானது உலகம் முழுக்க அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் 65 லட்சம் பேர் தாக்கம் அடைந்துள்ளனர். அதோடு பலி எண்ணிக்கையானது 1 லட்சத்தினையும் தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு வருவது 84% ஆக அதிகரித்துள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கமானது அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், கொரோனா தடுப்பூசி எப்போது வரும் என்ற பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.

6) ஏஞ்சல் புரோகிங் நிறுவனத்தின் பங்கானது அக்டோபர் 5 அன்று பட்டியலிடப்படுகிறது. இது எந்த அளவுக்கு பிரீமியம் விலையில் பங்கு சந்தையில் தொடங்கலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

7) டெக்னிக்கல் வியூ- முந்தைய மூன்று வார உயர்வான 11,630 மேல் செல்லும் போது ஏற்றம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8) நடப்பு வாரத்தில் சில கார்ப்பரேட் நிகழ்வுகள் நடக்கவுள்ளன. குறிப்பாக sagardeep alloys 1: 2 என்ற விகிதத்தில் போனஸ் கொடுக்க உள்ளது. Natco pharma, CIL nova petrochemicals, pradip overseas, indo tech transformers, texmo pipes and products உள்ளிட்ட நிறுவனங்களின் வருடாந்திர கூட்டம் நடக்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Traders must watch these 8 key factors in this week

Traders must watch these eight key factors in this week
Story first published: Sunday, October 4, 2020, 22:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X