TVS சேர்மன் பதவியில் இருந்து விலகும் வேணு சீனிவாசன்.. 2023 முதல் புதிய தலைவர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகிலேயே மிகவும் போட்டி மிகுந்த இரு சக்கர வாகனச் சந்தையான இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இரு சக்கர வாகனங்களைச் சமாளித்துத் தனக்கென ஒரு அடையாளத்தையும், வர்த்தகத்தையும் பெற்றுள்ளது தமிழ்நாட்டைச் சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம்.

சுமார் 21 வருடம் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தை நிர்வாகம் செய்து வரும் வேணு சீனிவாசன் 2023ஆம் ஆண்டு முதல் தனது சேர்மன் பதவியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இவருடைய முடிவு டிவிஎஸ் ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வேளையில், புதிய தலைவரை நியமிக்கும் முடிவில் டிவிஎஸ் வரலாற்றில் இதுவரை செய்யாத புதிய மாற்றத்தைச் செய்துள்ளார் வேணு சீனிவாசன்.

 டிவிஎஸ் மோட்டார்ஸ்

டிவிஎஸ் மோட்டார்ஸ்

தென்னிந்திய இரு சக்கர வாகன விற்பனை சந்தையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் டிவிஎஸ் மோட்டார்ஸ், நடுத்தர மக்களுக்கும் சாமானிய மக்களுக்கும் விருப்பமான நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே டிவிஎஸ் குழுமம் தனது நிர்வாகத்தில் பல முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது.

 முக்கிய நிர்வாக மாற்றம்

முக்கிய நிர்வாக மாற்றம்

2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டிவிஎஸ் குழும நிர்வாகத்தில் முக்கியமான மறுசீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த மறுசீரமைப்பு மூலம் டிவிஎஸ் குழுமத்தின் கீழ் இருக்கும் நிறுவனங்களை டிவிஎஸ் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் வர்த்தகம் மற்றும் நிறுவனத்தின் முழு உரிமை கொடுக்கப்பட்டது.

 கிராஸ் ஹோல்டிங் நீக்கம்

கிராஸ் ஹோல்டிங் நீக்கம்

இதனால் டிவிஎஸ் குழுமத்தின் கீழ் இருக்கும் நிறுவனங்கள் மத்தியில் இருந்த கிராஸ் ஹோல்டிங் முழுமையாக நீக்கப்பட்டுத் தனித்தனி நிறுவனமாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. மேலும் நிறுவனங்கள் மத்தியிலும், குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலும் ராயல்டி கொடுப்பது முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தத்தம் குடும்ப உறுப்பினர்களின் கீழ் தத்தம் நிறுவனம் முழுக் கட்டுப்பாட்டிற்குக் கீழ் வரும்.

 அதிர்ச்சி அளிக்கும் முடிவு

அதிர்ச்சி அளிக்கும் முடிவு

இந்த முக்கியமான நிர்வாக மாற்றத்தைத் தொடர்ந்து சில மாதங்கள் இடைவேளையில் டிவிஎஸ் குழுமத்தின் மிக முக்கியமான நிறுவனமாக விளங்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ்-ன் சேர்மன் பதவியில் இருந்து வேணு சீனிவாசன் விலக முடிவு முதலீட்டாளர்களும், பங்குதாரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

 முக்கியமான முடிவு

முக்கியமான முடிவு

இதுமட்டும் அல்லாமல் டிவிஎஸ் குழுமத்தில் முதல் முறையாக இக்குடும்ப உறுப்பினர்கள் அல்லாமல் வெளியில் இருந்து புதிய தலைவரை நியமிக்க வேணு சீனிவாசன் முடிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்திய நிறுவனங்களில் குடும்ப உறுப்பினர்களைத் தாண்டி வெளியில் இருந்து புதிய தலைவரை நியமிப்புது புதிய டிரென்ட் ஆகியுள்ளது, இதேவேளையில் மிகவும் சரியானதாகவும் அமைந்து வருகிறது. குறிப்பாக இன்போசிஸ், விப்ரோ, டாடா இன்னும் பல..

 புதிய சேர்மன்

புதிய சேர்மன்

இந்நிலையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சேர்மேனாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான ரால்ப் ஸ்பெத் நியமிக்க வேணு சீனிவாசன் முடிவு செய்துள்ளார். ரால்ப் ஸ்பெத்-ன் பணி 2023 முதல் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 TVS வர்த்தகக் கனவு

TVS வர்த்தகக் கனவு

சமீபத்தில் டிவிஎஸ் நிறுவனம் தனது வர்த்தகத்தை வெளிநாடுகளுக்கு விரிவாக்கம் செய்யவும், வெளிநாட்டில் இருக்கும் முன்னணி இருசக்கர வாகன பிராண்டுகளை இந்தியாவிற்குக் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது.

 வெளிநாட்டு வர்த்தகக் கனவு

வெளிநாட்டு வர்த்தகக் கனவு

இதன் வாயிலாக டிவிஎஸ் நிர்வாகம் பிரிட்டன் நாட்டில் மிகவும் பிரபலமான நார்டன் பிராண்ட்-ஐ வாங்கியது, இதற்கு முன்பு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் BMW நிறுவன பைக்குக்களை தயாரித்து விற்பனை செய்ய ஜெர்மனி நாட்டின் BMW Motorrad உடன் கூட்டணி வைத்தது.

 சரியான தேர்வு

சரியான தேர்வு

டிவிஎஸ் நிறுவனத்தின் இந்தி பிரம்மாண்ட சர்வதேச வர்த்தகத் திட்டத்திற்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான ரால்ப் ஸ்பெத் சரியான தேர்வாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TVS Motors Chairman Venu Srinivasan step down in 2023: Appoints outsider for first time

TVS Motors Chairman Venu Srinivasan step down in 2023: Appoints outsider for the first time
Story first published: Monday, March 29, 2021, 16:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X