ஒரு விசா வாங்குவதற்கு இவ்வளவு அக்கப்போரா? ட்விட்டர் பயனாளியின் புலம்பல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளிநாடு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட், விசா என்பது ஒரு மிகப்பெரிய வேலை என்பதும் குறிப்பாக விசா எடுப்பதற்கு பலர் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விசா விண்ணப்பத்தை பூர்த்தி செய்த அனுபவம் குறித்து ட்விட்டர் பயனாளி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பல பக்கங்கள் கொண்ட விசா விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ள அந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.

விசா விண்ணப்பம்

விசா விண்ணப்பம்

வெளிநாட்டுப் பயணத்திற்கான விசா விண்ணப்பம் என்பது ஒரு மிகப்பெரிய சிக்கலான செயல்முறையாக இன்னும் பல நாடுகளில் உள்ளது. ஒரு சில நாடுகளில் டிஜிட்டல் முறையில் விசா விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் வசதிகள் இருந்தாலும் இன்னும் உலகின் வளர்ந்த நாடுகளில் கூட பேப்பரில் தான் விசா விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வருகிறது.

 ட்விட்டர் பயனாளி

ட்விட்டர் பயனாளி


உலகின் மிக வளர்ந்த நாடுகளில்கூட சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்தால் பல பக்கங்களை பூர்த்திசெய்து கையெழுத்திட வேண்டிய நிலை உள்ளதாக ட்விட்டர் பயனாளி சப்தர்ஷி பிரகாஷ் என்பவர் தெரிவித்துள்ளார். அவர் எந்த நாட்டிற்கு விண்ணப்பித்துள்ளார் என பயனர்கள் அவரிடம் கேட்டபோது அதற்கு அவர், 'Schengen' என்று பதிவு செய்துள்ளார். Schengen விசா என்பது ஆஸ்திரியா, ஸ்வீடன், ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து உள்பட 26 ஐரோப்பிய நாடுகளுக்கு உரிய குறுகியகால விசா அனுமதி ஆகும்.

விசா பேப்பர்கள்

விசா பேப்பர்கள்

இந்த விசா பேப்பர்களை அவர் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் ட்விட்டுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சப்தர்ஷி பிரகாஷ் பதிவு செய்துள்ள இந்த ட்விட்டுக்கு பலரும் சுவராசியமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்துள்ளனர்.

 ஆவணங்கள்

ஆவணங்கள்

ஸ்விக்கி ஆவணங்களில் உள்ள யூபிஐ பரிவர்த்தனைகள் நிறைந்த ஒரு அறிக்கை போல் இந்த விசா விண்ணப்பம் இருப்பதாக ஒருவர் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த சப்தர்ஷி பிரகாஷ், இந்த விசா விண்ணப்பத்துடன் வங்கி கணக்கு மட்டுமின்றி, பேங்க் ஸ்டேட்மென்ட், மூன்று வருட வருமான வரி ரிட்டன், பேஸ்லிப் உள்பட பல்வேறு ஆவணங்களை இணைக்க வேண்டும் என்பதால் நீங்கள் சொன்னது போல் ஸ்விக்கி பரிவர்த்தனைகள் போல்தான் இது இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

சிக்கலான விசா விண்ணப்பங்கள்

சிக்கலான விசா விண்ணப்பங்கள்

1947ல் மட்டுமல்ல, 2014 இல் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் கூட இம்மாதிரி சிக்கலான விசா விண்ணப்பங்களை இன்னும் நடைமுறையில் வைத்துள்ளன என்று இன்னொரு ட்விட்டர் பயனாளி தெரிவித்துள்ளார்.

கமெண்ட்ஸ்

கமெண்ட்ஸ்

ஒருசில டிவிட்டர் பயனாளிகள் நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் போது ஏற்பட்ட கடினமான அனுபவங்கள் உங்கள் ட்விட்டை பார்க்கும் போது நினைவூட்டுகிறது என்று பதிவு செய்துள்ளனர். இன்னொரு ட்விட்டர் பயனாளி நானும் வெளிநாடு செல்லும்போது இந்த கொடுமையை அனுபவித்தேன் என்று கமெண்ட் செய்துள்ளார். மொத்தத்தில் இன்னும் பல நாடுகளில் விசா விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது என்பது ஒரு சிக்கலான வேலையாக உள்ளது என்பது இந்த பதிவு மூலம் தெரிய வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter user shows just how much paperwork you need for a Europe tourist visa

Twitter user shows just how much paperwork you need for a Europe tourist visa | ஒரு விசா வாங்குவதற்கு இவ்வளவு அக்கப்போரா? ட்விட்டர் பயனாளியின் புலம்பல்!
Story first published: Tuesday, August 9, 2022, 9:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X