டெல்லி: தொலைத் தொடர்பு துறைக்கு இது போதாத காலமே. சொல்லப்போனால் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை சமாளித்து கொண்டு இருக்கின்றன.
அதிலும் ஏஜிஆர் பிரச்சனைகள் தலைதூக்கிய பின்னர், வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சேவையை தொடர முடியுமா என்ற நிலைக்கே சென்றுள்ளது.
அரசு போதிய நிவாரணம் வழங்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால் கடையை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று கூறியது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு மனுவையும் நிராகரித்தது.
இதனால் வோடபோன் ஐடியாவின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் வெடித்து சிதறியது. இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் 10,000 கோடி ரூபாய் செலுத்திய நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனம் இரு தவணைகளாக 3,500 கோடி ரூபாய் நிதியினை செலுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் மீதி தவணையை செலுத்த 15 ஆண்டுகள் அவகாசம் கேட்டுள்ளது.
மத்திய தொலைத் தொடர்பு துறைக்கு ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட பல நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான 1.47 லட்சம் கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. 14 வருட போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தான் ஒரு முற்றுபுள்ளி வைத்தது.
வங்கிகள் கிரெடிட் ஸ்கோரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் ..!
ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னரே பெரிது நஷ்டம் கண்டுள்ள இந்த நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் பெரிதும் நிலைகுலைந்து போயின. அதிலும் வோடபோன் நிறுவனம் ஏற்கனவே பல ஆயிரம் கோடி நஷ்டம் கண்ட நிலையில், இது பெருத்த அடியாகவே உள்ளது.
தொலைத் தொடர்பு துறையின் அறிக்கையின் படி, வோடபோனுக்கு சுமார் 53,000 கோடி ரூபாய் நிலுவை உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வோடபோன் நிறுவனமோ 23 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் வோடபோன் ஐடியா தனக்குள்ள ஜிஎஸ்டி நிலுவை தொகை 8,000 கோடி ரூபாயை கழித்துக் கொள்ள வேண்டும் எனவும் வோடபோன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மொத்த வருவாயில்; 8% ஆக உள்ள உரிமக் கட்டணத்தை 3% ஆகக் குறைக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.