லட்சுமி விலாஸ் வங்கியுடன் இணைந்தால் DBS வங்கிக்கு என்ன லாபம்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏற்கனவே பல நிர்வாகம் மற்றும் வராக்கடன் சிக்கில் சிக்கித்தவிக்கும் லட்சுமி விலாஸ் வங்கி மீது மத்திய நிதியமைச்சகம் நவம்பர் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரையில் moratorium கட்டுப்பாடுகளை விதித்து, இவ்வங்கிக்கு 25000 ரூபாய் என்ற பணப் பரிமாற்ற கட்டுப்பாட்டை விதித்தது.

Recommended Video

1000 ருபாய் கூட எடுக்க முடியல | LAKSHMI VILAS BANK | PUBLIC OPINION | ONEINIDA TAMIL

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரத்தில் ரிசர்வ் வங்கி LVB வங்கியைக் காப்பாற்ற DBS வங்கியுடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்து மக்களைப் பயத்தில் இருந்து மீட்டுள்ளது.

இந்நிலையில் DBS வங்கி, லட்சுமி விலாஸ் வங்கியை மொத்தமாகக் கைப்பற்றுவதன் மூலம் என்ன கிடைக்கும்.

DBS பேங்க் இந்தியா

DBS பேங்க் இந்தியா

சிங்கப்பூர் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் DBS பேங்க் லிமிடெட் -ன் இந்தியக் கிளை நிறுவனம் தான் இந்த DBS பேங்க் இந்தியா. இந்தியாவில் சுமார் 25 நகரங்களில் வெறும் 35 வங்கி கிளைகளைக் கொண்டு வர்த்தகம் செய்து வருகிறது DBS பேங்க் இந்தியா.

2,500 கோடி ரூபாய் மூலதனம்

2,500 கோடி ரூபாய் மூலதனம்

முதல் DBS பேங்க் இந்தியா உடன் லட்சுமி விலாஸ் வங்கியைக் கைப்பற்றிய பின்பும் வர்த்தக இணைப்புச் செய்யப்பட்ட பிறகு இக்கூட்டணி நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிக்காகச் சுமார் 2,500 கோடி ரூபாய் அளவிலான மூலதன நிதியை DBS வங்கி கொண்டு வரும் எனத் தெரிவித்துள்ளது.

566 வங்கி கிளை

566 வங்கி கிளை

லட்சுமி விலாஸ் வங்கி இந்தியா முழுவதும் சுமார் 566 வங்கி கிளைகளை வைத்து பெரிய அளவிலான வர்த்தகச் சந்தையும் வாடிக்கையாளர்களையும் வைத்துள்ளது. குறிப்பாக இந்திய வங்கி சேவையில் மிகவும் முக்கியமான வலிமையான தென் இந்திய வர்த்தகச் சந்தையில் லட்சுமி விலாஸ் வங்கி அதிகளவிலான வர்த்தகத்தை வைத்துள்ளது DBS வங்கிக்கு ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும்.

4000 ஊழியர்கள்

4000 ஊழியர்கள்

இதேபோல் லட்சுமி விலாஸ் வங்கியில் சுமார் 4000 ஊழியர்கள் உள்ளனர், ஓரே நேரத்தில் 566 வங்கி கிளைகள், 4000 ஊழியர்கள் வர்த்தகம் எனப் பெரிய அளவிலான வார்த்தக வாய்ப்பை கொடுக்க உள்ளது.

இதேபோல் லட்சுமி விலாஸ் வங்கி இரண்டு முறை வர்த்தகம் இணைப்பிற்காக முயற்சி செய்து தோல்வி அடைந்த நிலையில் DBS வங்கி ஒரு ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும்.

 

வலிமையான டிபிஎஸ்

வலிமையான டிபிஎஸ்

ஜூன்30, 2020 அறிக்கையின் படி DBS பேங்க் இந்தியாவின் மூலதனம் 7,109 கோடி ரூபாய், இதேபோல் இவ்வங்கியின் நகர வராக்கடன் அளவு 2.7 சதவீதம், நெட் வராக்கடன் அளவு 0.5 சதவீதம். இதேபோல் Capital to Risk அளவீடு 15.99% மட்டுமே என்பதன் காரணமாகவே ரிசர்வ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கியுடன் இணைக்கப் பரிந்துரை செய்துள்ளது.

மோசமான LVB

மோசமான LVB

கடந்த 3 வருடத்தில் லட்சுமி விலாஸ் வங்கியின் நிதி நிலைமை தொடர் சரிவில் உள்ளது. பொதுவாக ஒரு வங்கியின் CAR அளவு 9 சதவீதம் இருக்க வேண்டும், ஆனால் லட்சுமி விலாஸ் வங்கியின் CAR அளவு வெறும் 0.17 சதவீதம்.

மேலும் இவ்வங்கி 2017-18ஆம் ஆண்டில் 585 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்த நிலையில், 2019-20ஆம் ஆண்டில் 836 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது.

 

வராக்கடன்

வராக்கடன்

இந்த 94 வருடப் பழமையான லட்சுமி விலாஸ் வங்கி சுமார் 12,827 கோடி ரூபாய் அளவிலான கடன் வர்த்தகம் செய்து வரும் நிலையில் இதில் வராக்கடன் அளவு 25.39 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: lvb lakshmi vilas bank
English summary

What DBS Bank will get from Lakshmi Vilas Bank merger

What DBS Bank will get from Lakshmi Vilas Bank merger
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X