கோபர்தன் திட்டம் ஏன் முக்கியம்.. விவசாயம், கிராமங்களுக்கு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018 ஆம் ஆண்டில் ஸ்வச் பாரத் மிஷன் கிராமீன்-கட்ட II திட்டத்தின் கீழ் தேசிய முன்னுரிமை திட்டமாகக் கோபர்தன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது, அனைவருக்கும் நினைவிருக்கும். இத்திட்டம் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோபர்தன் திட்டத்தின் கீழ் 500 புதிய waste-to-wealth திட்டங்களை அறிமுகம் செய்து வட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டதாக அறிவித்தார்.

இந்தியாவில் பெரு நகரங்களைக் காட்டிலும் கிராமப்புறத்தில் வர்த்தகம், பொருளாதாரம், மக்களின் வருமானத்தை மேம்படுத்த மத்திய அரசு கையில் எடுத்த திட்டம் தான் இந்தக் கோபர்தன் திட்டம்.

Budget 2023: இது தேர்தல் பட்ஜெட் அல்ல.. ஒரு சமநிலையான பட்ஜெட்.. இலவசங்கள் கிடையாது..! Budget 2023: இது தேர்தல் பட்ஜெட் அல்ல.. ஒரு சமநிலையான பட்ஜெட்.. இலவசங்கள் கிடையாது..!

கோபர்தன் திட்டம்

கோபர்தன் திட்டம்

கோபர்தன் திட்டத்தின் வாயிலாகக் கால்நடைகளின் சாணம் மற்றும் பண்ணைகளில் உள்ள திடக்கழிவுகளைச் சரியான முறையில் நிர்வாகம் செய்து உரம், பயோ கேஸ் மற்றும் பயோ-சிஎன்ஜி வாயுவாக மாற்றுவதில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்துகிறது.

151 மாவட்டம்

151 மாவட்டம்

இதுவரையில் கோபர்தன் திட்டத்தின் வாயிலாக 151 மாவட்டத்தில் சுமார் 583 பயோ கேஸ் மற்றும் CBG பிளாண்ட்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் 175 பயோ கேஸ் மற்றும் CBG பிளாண்ட்கள் கட்டப்பட்டு வருகிறது.

கூடுதல் வருமானம்
 

கூடுதல் வருமானம்

இத்தகைய திட்டம் மூலம் கிராமத்தைத் தூய்மையாக வைத்திருப்பது மட்டும் அல்லாமல் விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும் வழி உருவாக்கப்படுகிறது. இதேவேளையில் இந்தியாவின் கிரீன் எனர்ஜி-க்கு அதிகப்படியாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

வேஸ்ட் டூ எனர்ஜி கான்செப்ட்

வேஸ்ட் டூ எனர்ஜி கான்செப்ட்

இந்த வேஸ்ட் டூ எனர்ஜி கான்செப்ட் கொண்ட கோபர்தன் திட்டத்தின் வாயிலாக விவசாயிகள் யாருடைய துணை மற்றும் உதவியும் இல்லாமல் தன்னம்பிக்கையை உருவாக்குவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.

50 லட்சம் வரை நிதியுதவி

50 லட்சம் வரை நிதியுதவி

ஒவ்வொரு மாவட்டத்திற்கும், கால்நடைகள் மற்றும் இயற்கை கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றுவதற்கு இந்திய அரசு தொழில்நுட்ப உதவி மற்றும் 50 லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது.

கழிவுகள் நிர்வாகம்

கழிவுகள் நிர்வாகம்

கோபர்தன் திட்டத்தின் வாயிலாக நீண்ட கால நோக்கில், கிராமங்களில் மக்கள் தங்களின் கால்நடைக் கழிவுகள், விவசாயக் கழிவுகள் மற்றும் இயற்கை கழிவுகளைப் பாதுகாப்பாக நிர்வகிக்க உதவுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

கழிவுகளில் இருந்து வருமானம்

கழிவுகளில் இருந்து வருமானம்

கோபர்தன் திட்டத்தின் வாயிலாகக் கால்நடைகள் மற்றும் இயற்கை கழிவுகளைப் பணமாக மாற்றும் அமைப்புகளை ஒரே இடத்தில் உருவாக்குவதற்குப் பதிலாக decentralized முறையில் உருவாக்கப்பட வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

நோய் தொற்றுக் குறைப்பு

நோய் தொற்றுக் குறைப்பு

கிராமப்புறங்களில் கழிவுகளைத் திறம்பட அகற்றுவது மூலம் நோய்க் கிருமிகளால் பரவும் நோய்களைக் குறைப்பதும், சுற்றுப்புறச் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும். இயற்கை கழிவுகளை, குறிப்பாகக் கால்நடைக் கழிவுகளைப் பயோ கேஸ் மற்றும் உரமாக மாற்றுவது கிராமப்புறங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் இது அனைத்தும் கோபர்தன் திட்டத்தின் வாயிலாகச் சாத்தியப்படுத்த முடியும்.

தொழில்முனைவோர்

தொழில்முனைவோர்

கிராமப்புற தொழில்முனைவோருக்கு வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புகளைக் கோபர்தன் திட்டத்தின் வாயிலாக மேம்படுத்த முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: village கிராமம்
English summary

What is GOBARdhan scheme? How it benefits indian village and villagers to earn extra money

What is GOBARdhan scheme? How it benefits indian village and villagers to earn extra money
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X