கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக அரசு கடந்த மார்ச் இறுதியில், நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. இதற்கிடையில் கடந்த மார்ச் 23 அன்று, மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 25,981 புள்ளிகளாக முடிவுற்றது.
ஆனால் இது தற்போது கடந்த மார்ச் மாதத்தினை விட ஒப்பிடும்போது, கொரோனாவின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதற்கிடைப்பட்ட காலகட்டத்தில் கடுமையான லாக்டவுன், பலத்த பொருளாதார சரிவு என வரிசையாக சந்தைக்கு பாதகமாக செய்திகளே உள்ளன.
ஆனாலும் கடந்த மார்ச் 23ல் 25,981 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், நேற்று ( நவம்பர் 9) 42,597.43 புள்ளிகளாக புதிய உச்சத்தினை தொட்டது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 197 புள்ளிகள் அதிகரித்து 12,461 ஆக புதிய உச்சத்தினை தொட்டது.

கொரோனாவுக்கு முன்.. கொரோனாவுக்கு பின்
மேலும் குறியீடுகள் அனைத்தும், கொரோனாவுக்கு முன்பு, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்த அளவை எட்டின. இது உண்மையில் ஒரு நல்ல திருப்பு முனையாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்து நிபுணர்கள் ஒரு வேளை மார்ச் மாதத்தில் இந்த பிரச்சனை மிகைப்படுத்தியிருக்கலாம். ஆனால் இப்போது அது மோசமானதல்ல என்பதை நாங்கள் காண்கிறோம் என்று ஹீலியோஸ் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிதி மேலாளாளர் சமீர் அரோரா கூறியுள்ளார்.

பொருளாதாரத்தினை மீட்டெடுக்க ஊக்கத் தொகை
கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தினை மேம்படுத்த, உலக நாடுகள் முழுவதும் ஊக்கத் தொகையினை அறிவித்து வருகின்றன. இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பங்கு சந்தையை ஊக்குவிக்க உதவியது. இது பங்குசந்தைகள் புதிய உச்சத்தினை தொட உதவியது என்று கேஆர் சோக்ஸி இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் தேவன் சோக்ஸே கூறியுள்ளார்.

இந்தியா ஒரு சாதகமான இடம்
கடந்த மார்ச் மாதம் முதல், கடந்த ஆறு - ஏழு மாதங்களில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வு என்னவெனில், உலகப் பொருளாதாரம் 8 டிரில்லியன் டாலர் அளவுக்கு ஒரு ஊக்கத்தினை அளித்துள்ளது என்று சோக்ஸி தி பிரிண்ட்டிடம் கூறியுள்ளார். இந்த பணம் ஒவ்வொரு பொருளாதாரத்திலும், ஒவ்வொரு சொத்து வகுப்பிலும் நுழைந்துள்ளது. அதே நேரம் உலகின் பெரும்பாலான மக்களுக்கு, இந்தியா ஒரு சாதகமான இடமாக இருந்து வருகின்றது.

பல பங்குகள் சரிவு
நாடு மேற்கொண்டுள்ள பல்வேறு சீர்திருத்தங்களுடன் இந்தியா, சீனாவை விட சாதகமான இடமாக மாறியுள்ளது. இதனால் இந்திய நிறுவனங்கள் பல பயனடைந்துள்ளன. கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைந்து விட்டன. அதே நேரத்தில் பயனடைந்தவர்களின் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது. பெரும்பாலான வங்கிகள் குறைந்துள்ளன. இதே பிவிஆர் போன்ற பங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வட்டி விகிதமும் முக்கிய காரணம்
பணப்புழக்கம் தவிர, சந்தையின் ஏற்றத்திற்கு மற்றொரு முக்கிய காரணி வட்டி விகிதம் சரிவு என்கின்றனர் நிபுணர்கள். இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் மாதத்தில் ரெப்போ விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகளையும், இதே மே மாதத்தில் 40 அடிப்படை புள்ளிகளையும் குறைத்தது. இது கடந்த பிப்ரவரி 2019 முதல் 250 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் குறைந்த வட்டி விகிதங்கள் கடன் வழங்குனர்களுக்கு ஆதரவளித்தது. அவர்களின் செலவினை குறைத்தது. இது அவர்களின் ஆரோக்கியத்தினை மேம்பட வழிவகுத்தது.

விவசாய உற்பத்தியும் அதிகரிப்பு
இதே போல குறைந்த எண்ணெய் விலைகள் அடிப்படையில் இறக்குமதிக்கு செலவிடும் தொகையை குறைத்துள்ளது. இது நடப்பு கணக்கில் உபரியை கொண்டுவர உதவின. இதற்கிடையில் சரியான பருவமழை காரணமாக இந்த காலகட்டத்தில் விவசாய உற்பத்தியும் அதிகரித்துள்ளது. ஆக இதுவும் மக்கள் கையில் பணப்புழக்கத்தினை அதிகரித்தது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பினைக் கொடுத்தது.

தற்போதைக்கு வரியை அதிகரிக்க முடியாது
அமெரிக்காவின் புதிய அதிபராக தற்போது தேர்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன், தற்போது அவர் நினைததை செய்ய முடியாது. அவர் மூலதன ஆதாய வரியை அதிகரிக்க விரும்பினார். அதோடு பெரு நிறுவன வரிகளையும் அதிகரிக்க விரும்பினார். இதனால் சந்தை வீழ்ச்சி கண்டிருக்க வேண்டும். ஏனெனில் அவரால் தற்போது அதனை செய்ய முடியாது. இதனால் இதுவும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.

கார் விற்பனை வளர்ச்சி நீடிக்காது
மேலும் முதலீட்டாளர்கள் அதிகரித்து வரும் கார் விற்பனை அதிகர்ப்பு நீடிக்காது என்று அச்சம் கொண்டுள்ளனர். ஏனெனில் பொருளாதாரம் அந்தளவுக்கு மீண்டு வரவில்லை. இது பண்டிகை காலம். அதனால் தேவை அதிகரிக்கும். எனவே டிசம்பரில் வாகன விற்பனை அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று அரோரா கூறியுள்ளார். அதோடு கொரோனா பரவலின் இரண்டாம் கட்ட அச்சமும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்.

சர்வதேச பாணியில் பங்கு சந்தை
எப்படி இருப்பினும குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களின் உணர்வு சற்று நன்றாக இருக்கும். கடந்த திங்கட்கிழமையன்று பிப்சர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசியானது 90% மேல் வெற்றி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் உலகளாவிய சந்தைகள் வளர்ச்சியுடன் உயர்ந்தன. ஆக இந்திய சந்தையும் இதே பாணியில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.