கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல் விலை குறையவில்லை.. ஏன் தெரியுமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய மக்கள் தொடர்ந்து பிரச்சனைகளுக்கு மத்தியிலேயே வைத்திருக்கும் மோசமான சூழ்நிலை தானாக உருவாகிறதா.. இல்லை உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வி தற்போது எல்லோருக்குள்ளும் எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு CAA, NRC அறிவிப்புகள், அதன் பின்பு அதை எதிர்த்து மாணவர்கள் மற்றும் மக்கள் போராட்டம், அதன் பின்பு டெல்லி கலவரங்கள், அதன் பின்பு யெஸ் வங்கி பிரச்சனை, அதன் பின்பு கொரோனா வைரஸ் இப்போது பெட்ரோல், டீசல் விலை..!

சர்வதேச சந்தையில் சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா இடையேயான போட்டியில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து அதன் விலையைச் சுமார் 20 வருட சரிவிற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தபட்சம் லீட்டருக்கு 8 ரூபாய்க் குறைக்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மத்திய அரசு கச்சா எண்ணெய் மீதான கலால் வரியை திடீரென உயர்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு அறிவிப்பு

இந்திய மக்கள் ஒரு பக்கம் கொரோனா பாதிப்புகள் குறித்துப் பயந்து ஒருபக்கம் புலம்பிக்கொண்டு இருக்க, மறுபுறம் நம்முடைய இளைஞர்கள் Work From Home கொடுத்த கொண்டாட்டத்தில் இருந்த நேரத்தில் தான் புதிய தலைப்புச் செய்தியாக மாறியது பெட்ரோல், டீசல் விலை உயர்வு.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மளமளவெனச் சரிந்துகொண்டிருக்க மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிகரித்து லீட்டருக்கும் சுமார் 3 ரூபாய் வரையில் உயர்த்தப்படும் என்ற அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டு நாட்டு மக்களின் மகிழ்ச்சியை ஒட்டுமொத்தமாகச் சீர்குலைத்தது.

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே மோசமாக இருந்த நிலையில், தற்போது கொரோனா மற்றும் யெஸ் வங்கி பிரச்சனை பங்குச்சந்தை முதலீட்டைப் பாதித்தது மட்டும் அல்லாமல் ரூபாய் மதிப்பையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதுவொரு பக்கம் இருக்க மறுபுறம் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு இல்லாமல் வர்த்தக வளர்ச்சிக்கு வாய்ப்பு இல்லாமல் மத்திய அரசின் வரி வசூல் அளவு அதிகளவில் குறைந்தது.

எரிபொருள் விற்பனை

எரிபொருள் விற்பனை

மேலும் மத்திய அரசுக்கு அதிகளவிலான வருவாய் ஈட்டித்தரும் எரிபொருள் விற்பனையும் தற்போது கொரோனாவின் தாக்கத்தால் பாதித்துள்ளது. தற்போது பல மாநிலங்களில் பொது இடங்கள் அனைத்தும் முடக்கப்பட்டும், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும், பல பெரு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் சலுகையும் கொடுக்கப்பட்டுள்ள காரணத்தால் பெட்ரோல், டீசல் தேவை அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் அரசின் வருமானமும் பாதித்துள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்


இந்தச் சூழ்நிலையில் தான் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகளவில் குறைந்தது, இந்தப் பலனை மக்களுக்கு அப்படியே கொடுத்துவிட்டால் பெட்ரோல், டீசல் விலை குறையும். கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் விலையைக் குறைத்தாலும் பெரிய அளவிலான வர்த்தகமும் கிடைக்காது.

இதை உணர்ந்த மத்திய அரசு வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள இந்த நிலையிலும், கலால் வரியை உயர்த்திப் பெட்ரோல், டீசல் விற்பனையின் மூலம் கூடுதல் வருமானத்தைப் பெற திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.

கச்சா எண்ணெய் விலை இந்த அளவிற்குச் சரிய என்ன காரணம் தெரியுமா..? தெரிந்துகொள்ள இதைக் கிளிக் பண்ணுங்க.

அடிப்படை காரணம்

அடிப்படை காரணம்

கச்சா எண்ணெய் விலை குறைய என்ன காரணம் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூலம் உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் தேவை மற்றும் பயன்பாடு அதிகளவில் குறைந்து, அதன் விலையும் 69 டாலரில் இருந்து 50 டாலராகக் குறைந்தது. இந்தச் சூழ்நிலையில் விலையை மேம்படுத்த சவுதி அரேபியா, ரஷ்யா மற்றும் OPEC அமைப்புகள் இணைந்து 2.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை மார்ச் மாதம் வரையில் குறைத்தது.

இந்நிலையில் OPEC அமைப்பு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டுக் கூடுதலாக 1.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு ரஷ்யா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உற்பத்தியைக் குறைக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

யாருக்கு யார் எதிரி..? தெரிந்துகொள்ள இதைக் கிளிக் பண்ணுங்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why Petrol, Diesel price is not decreased in india, even Crude oil on decade low price

Why Petrol, Diesel price is not decreased in india, even Crude oil on decade low price - an economical reason behind
Story first published: Sunday, March 15, 2020, 18:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X