PVR பாப்கார்ன் விலை ஏன் அதிகமாக உள்ளது.. அஜய் பிஜ்லி பதில் என்ன தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்களுக்கு உணவு, சினிமா இரண்டும் இரு கண்கள் போல, இவை இரண்டும் ஓரே இடத்தில் கிடைக்கும் இடம் தான் தியேட்டர். ஆனால் அந்தத் தியேட்டரிலும் பாப்கார்ன் உட்பட அனைத்துமே காஸ்ட்லியாக இருப்பது சாமானிய மக்களுக்குக் கடுப்பை ஏற்றும் விஷயமாக உள்ளது.

சமுக வலைத்தளத்தில் இருந்து டிவி விவாதம் வரையில் தியேட்டர்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பாப்கார்ன் ஸ்னாக்ஸ் குறித்த விவாதம் நடந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டர் நிறுவனமான PVR நிர்வாகத் தலைவர் அஜய் பிஜ்லி பாப்கார்ன் விலை ஏன் அதிகமாக உள்ளது என்பதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

சுதந்திரத்திற்கு முன் உருவாகிய மாபெரும் வர்த்தக 7 சாம்ராஜியங்கள்..! சுதந்திரத்திற்கு முன் உருவாகிய மாபெரும் வர்த்தக 7 சாம்ராஜியங்கள்..!

 PVR அஜய் பிஜ்லி

PVR அஜய் பிஜ்லி

PVR நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஜய் பிஜ்லி கூறுகையில் இந்திய மக்களுக்கு ஒவ்வொரு விலை புள்ளியிலும் மேம்பட்ட மல்டிபிளக்ஸ் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகக் கூறுகிறார்.

சினிமா கலாச்சாரம்

சினிமா கலாச்சாரம்


இந்தியா-வில் சினிமா கலாச்சாரம் மிகப்பெரியதாக இருந்தாலும், இன்னும் under-screened நிலையில் தான் உள்ளது. இத்துறை வணிகத்திற்கு அபரிமிதமாக வளர்ச்சி அடைய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அஜய் பிஜ்லி கூறுகிறார். மேலும் எஃப் அண்ட் பி பிசினஸ் அதாவது food and beverage வர்த்தகம் இப்போது ரூ.1,500 கோடியாக உள்ளது.

செலவுகள்

செலவுகள்

இந்தியாவில் இருக்கும் சிங்கிள் ஸ்கிரீன் கொண்ட தியேட்டர்கள் இன்னும் மல்டிபிளக்ஸ் ஆக மாறிக்கொண்டு இருக்கும் பயணத்தில் தான் உள்ளது. இதற்கு அதிகப்படியான செலவுகள் ஆகும், இதேபோல் மல்டிபிளக்ஸ்-களை இயக்கவும் அதிகப்படியான செலவாகிறது என்பதால் இதற்கான நிதியை திரட்ட விலைகள் அதிகமாக உள்ளது என அஜய் பிஜ்லி விளக்கம் கொடுக்கிறார்.

பல தடைகள்

பல தடைகள்

பொதுவாக மல்டிபிளக்ஸ் சிறிய இடத்தில் பல திரைகளில் அழுத்துவது மற்றும் அவற்றை இயக்க தேவையான உள்கட்டமைப்பை நிறுவுவதற்கான செலவு மற்றும் மால்களில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட இடத்திற்கு வாடகை, தர மேம்பாடு எனப் பல விஷயங்கள் உள்ளது.

சேவை மற்றும் தரம்

சேவை மற்றும் தரம்

இதனால் மக்கள் பிவிஆர் சினிமா தியேட்டர்களில் உணவு விலை அதிகமாக இருப்பது குறித்துக் குறை கூறுவதில் தவறு இல்லை என அஜய் பிஜ்லி தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் எங்களுடை சேவை மற்றும் அதன் தரத்தை விரும்புவதால் தான் அதிகப்படியான வருமானத்தை எஃப் அண்ட் பி பிசினஸ்-ல் பெற்றுள்ளோம் என அஜய் பிஜ்லி விளக்கம் கொடுக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

why your popcorns are expensive in multiplex - PVR boss Ajay Bijli explains

பிவிஆர் பாப்கார்ன் why your popcorns are expensive in multiplex - PVR boss Ajay Bijli explains PVR பாப்கார்ன் விலை ஏன் அதிகமாக உள்ளது.. அஜய் பிஜ்லி பதில் என்ன தெரியுமா..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X