யெஸ் வங்கியின் வீழ்ச்சியை முன் கூட்டியே கணித்த வாடிக்கையாளர்கள்.. எப்படி தெரியுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி கிட்டதட்ட திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும் தற்போது அதன் வாடிக்கையாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி தனது நேரடி கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளது.

 

எனினும் யெஸ் வங்கியின் மோசமான நிலையை, அதன் வாடிக்கையாளர்கள் முன்னரே கணித்துள்ளனர் என்று தான் கூற வேண்டும்.

அதெப்படி அவ்வளவு உறுதியாக வாடிக்கையாளார்கள் கணித்துள்ளனர் என்று கேட்கிறீர்களா? வாருங்கள் அதை பற்றித்தான் பார்க்க போகிறோம்.

டெபாசிட் வீழ்ச்சி

டெபாசிட் வீழ்ச்சி

கடந்த சனிக்கிழமையன்று வெளியான அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் மார்ச் 5 வரையில் அதன் டெபாசிட் தளம் 34% வீழ்ச்சி கண்டு, 1.37 டிரில்லியன் ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சேமிப்பு கணக்கு மற்றும் டெர்ம் டெபாசிட்டுகள் கணிசமான வீழ்ச்சி கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சேமிப்பு கணக்கிலும் வீழ்ச்சி

சேமிப்பு கணக்கிலும் வீழ்ச்சி

இந்த சமயத்தில் சேமிப்பு கணக்குகளின் டிசம்பர் காலாண்டில் சேமிப்பானது 25% வீழ்ச்சி கண்டு, 29,764 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதே போல டெர்ம் டெபாசிட்கள் 22% வீழ்ச்சி கண்டு 1.12 டிரில்லியன் ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே கரண்ட் அக்கவுண்ட் மூலம் சேமிப்பானது 6% வீழ்ச்சி கண்டு 23,440 கோடி ரூபாயாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.

கடனும் குறைந்துள்ளது
 

கடனும் குறைந்துள்ளது

அதே நேரம் இந்த தனியார் வங்கியின் கடன் வழங்குனரின் முன்னேற்றம் 1.86 டிரில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இதே போல டெபாசிட் தொகையானது செப்டம்பர் காலாண்டில் 2.09 டிரில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 1.65 டிரில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது.

ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு

ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு

இந்த நிலையில் கடந்த மார்ச் 5ம் தேதி யெஸ் வங்கியை முழுவதுமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ள ரிசர்வ் வங்கி, அதன் வாராக் கடன்களைப் போக்கவும், முதலீடுகளைத் திரட்டும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சொல்லப்போனால் இவ்வங்கியின் 49% பங்குகளை எஸ்பிஐ வாங்கப் போவதாக அறிவித்துள்ளது.

யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் கணிப்பு

யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் கணிப்பு

மேலும் யெஸ் வங்கியின் இந்த நெருக்கடியான நிலை குறித்து ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் முன்கூட்டியே தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால் இந்த நடவடிக்கையினை இவ்வளவு தாமதமாக எடுத்துள்ளது. இதனால் தான் யெஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்து வைத்த வாடிக்கையாளர்கள் வங்கியின் வீழ்ச்சியை முன்கூட்டியே கணித்திருப்பார்கள் போலும். ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே தங்களது டெபாசிட் தொகையை வெளியே எடுக்க தொடங்கி விட்டனர்.

இவ்வளவு தான் டெபாசிட்

இவ்வளவு தான் டெபாசிட்

இதை தெளிவாகச் சொல்லப்போனால் 2019 மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் ரூ.18,110 கோடியை வாடிக்கையாளர்கள் வங்கியிலிருந்து எடுத்துள்ளனர்.2019 மார்ச் மாத நிறைவில் யெஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்த தொகை 2.27 கோடி ரூபாயாகும். அதைத் தொடர்ந்து ஏப்ரல் - ஜூன் மாதங்களின் முடிவில் இவ்வங்கியின் டெபாசிட் தொகை 2.25 கோடி ரூபாயாவும் இருந்துள்ளது.

யெஸ் வங்கியில் முதலீடு

யெஸ் வங்கியில் முதலீடு

ஆக இடைப்பட்ட ஆறு மாதங்களில் மட்டும் டெபாசிட் தொகையில் 18,110 கோடி ரூபாய் டெபாசிட் குறைந்துள்ளது. இந்த நிலையில் தான் ரிசர்வ் வங்கியின் கண்கானிப்பில் வந்து, தற்போது ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுபாட்டினுள் உள்ளது. இந்த நிலையில் தனியார் வங்கிகளாக ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகளும், பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யும் முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஆக இனியேனும் இந்த நிலை மாறுமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Yes bank deposit decline 34 percent as customers pulled out in panic

due to panic yes bank deposits saw 34 percent declined
Story first published: Sunday, March 15, 2020, 19:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X