சிக்கலில் போன் பே.. காரணம் யெஸ் பேங்க்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யெஸ் பேங்க் என்கிற தனியார் வங்கி ஆர்பிஐயின் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்து இருப்பது தெரியும்.

 

இந்த கட்டுப்பாடுகளில் மிக முக்கியமான விஷயம், யெஸ் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்கள், 50,000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும் என்பது தான்.

இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, வேறு சில பிரச்சனைகளால், போன் பே நிறுவனமும் சிக்கலில் தவித்துக் கொண்டு இருக்கிறது. என்ன காரணம், விரிவாகப் பார்ப்போம்.

பொருளாதாரத்துடன் மல்யுத்தம் செய்யும் கொரோனா.. ஒப்புக் கொண்ட டொனால்டு டிரம்ப்..!

யெஸ் பேங்க் + போன் பே

யெஸ் பேங்க் + போன் பே


போன் பே அப்ளிகேஷனில் உள்ளே சென்றதும், நம் Profile-ஐ க்ளிக் செய்யவும்.
நம் ஃப்ரோஃபைலுக்குள் My BHIM UPI ID என்பதை க்ளிக் செய்யவும்.
அப்படி உள்ளே போனால் நம்முடைய போன் நம்பர் அல்லது மெயில் ஐடி அல்லது ஒரு யூசர் நேம் உடன் @ybl என்பதைப் பார்க்க முடியும்.
ஆக யெஸ் பேங்கை நம்பித் தான் போன் பே தன் பணப் பரிவர்த்தனைகளை நடத்திக் கொண்டு இருக்கிறது.

வங்கி தான்

வங்கி தான்

போன் பே இந்தியாவின் மிகப் பெரிய பேமெண்ட் நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தின் அப்ளிகேஷன் வழியாக பரிமாற்றப்படும் பணம் எல்லாமே, யெஸ் பேங்கைத் தான் நம்பி இருக்கிறது. இப்போது போன் பே நிறுவனத்தின் செயலியைப் பயன்படுத்துபவர்கள் எல்லாம், தங்கள் பணப் பரிமாற்றங்களைச் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

காரணம்
 

காரணம்

போன் பே நிறுவனத்தின் பணப் பரிமாற்றங்களை எல்லாம் ஒரு பக்கம் வைத்துவிடுங்கள், யெஸ் பேங்கின் வாடிக்கையாளர்களாலேயே, நேற்று மாலை முதல், தங்களின் நெட் பேங்கிங் சேவையைப் பயன்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே போன் பே நிறுவனத்தின் பணப் பரிமாற்றங்களும் க்ளியர் ஆகாமல் தேங்கி நிற்கிறது. இதற்கு பதில் கொடுக்கும் விதத்தில் போன் பே நிறுவனம் ஒரு ட்விட் செய்து இருக்கிறது

போன் பே

"நாங்கள் ஒரு திட்டமிடாத பராமரிப்பு வேலையைச் செய்து கொண்டு இருக்கிறோம். இந்த பராமரிப்பு பணிகளினால், உங்களுக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டால் அதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். விரைவில் எங்கள் சேவை தொடங்கும்" என போன் பே நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

அரசே உதவி ப்ளீஸ்

அரசே உதவி ப்ளீஸ்

ஒற்றை வங்கியின் பிரச்சனை இன்று பல நிறுவனங்களை பாதித்துக் கொண்டு இருக்கிறதே. இன்னும் இப்படி யெஸ் பேங்கால் என்ன மாதிரியான எதிர் விளைவுகளை, நாமும், இந்தியப் பொருளாதாரமும் சந்திக்க இருக்கிறது என்று தெரியவில்லை. இதையும் அரசு தான் கவனத்தில் எடுத்துக் கொண்டு எதையாவது செய்ய வேண்டும்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Yes Bank issue impact on digital partner Phone Pe

Phone pe digital payment company depends on Yes Bank to settle their transactions. yes bank net banking hit affect the phone pay operations.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X