யெஸ் பேங்க். தற்போது அதிகம் மக்களால் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம். நேற்று முதல் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள், வங்கியில் இருந்து 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் எனச் செய்திகள் வெளியானது.
அதன் பின் யெஸ் பேங்க் என்ன ஆனது. இந்த வங்கியில் என்ன பிரச்சனை, ஏன் இந்த கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள் என பல செய்திகள் வந்து குவியத் தொடங்கிவிட்டன.
இந்த நேரத்தில் யெஸ் பேங்கின் பங்கு விலை குறித்தும் செய்திகள் வெளியாகத் தொடங்கி இருக்கின்றன. யெஸ் பேங்க் பங்கின் விலை போக்கைத் தான் கட்டுரையில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
முதல் விலை ஏற்றம்
கடந்த 12 ஜூலை 2005 அன்று சந்தையில் பட்டியலிடப்பட்டது யெஸ் பேங்க் பங்குகள். முதல் நாளே யெஸ் பேங்க் 13 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கியது. பட்டியலிடப்பட்டதில் இருந்து சென்செக்ஸின் குறைந்தபட்சப் புள்ளி என்றால் அது 11.25 தான். 15-07-2005 அன்று யெஸ் பேங்க் 11.25 என்கிற குறைந்தபட்ச விலையைத் தொட்டது.
எதுவரை விலை ஏற்றம்
கடந்த 10-01-2006 அன்று யெஸ் பேங்க் பங்கு விலை 55 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. இதை முதல் நல்ல விலை ஏற்றம் என்று சொல்லலாம். ஆனால் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் யெஸ் பேங்க் பங்கு சரியத் தொடங்கிவிட்டது. எதுவரை சரிந்தது என்று கேட்டால் 09-03-2009-ம் தேதி 8.16 ரூபாய் வரை சரிந்தது. இதில் 2008 பொருளாதார நெருக்கடியும் வந்து போனது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது விலை ஏற்றம்
அதன் பின் மீண்டும் விலை ஏறத் தொடங்கியது. 01-11-2010 அன்று இரண்டாவது விலை உச்சமாக 77.60 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் மீண்டும் யெஸ் பேங்குக்கு போதாத காலம் வந்தது. 02-01-2012 அன்று சென்செக்ஸ் 46.11 ரூபாயைத் தொட்டது. இது தான் யெஸ் பேங்கின் இரண்டாவது விலை ஏற்றம் மற்றும் இறக்கம்.
3-வது ஏற்றம்
17-05-2013 அன்று 109 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது யெஸ் பேங்க். 28-08-2013 அன்று 43.22 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. இந்த சிறிய ஏற்ற இறக்கத்துக்குப் பின், தான் யெஸ் பேங்க், தன் விஸ்வரூபத்தை எடுக்கத் தொடங்கியது. 2013-க்குப் பிறகு பெரிய இறக்கங்கள் இல்லை என்றே சொல்லலாம். மெல்ல விலை ஏற்றம் காணத் தொடங்கியது. 20-08-2018 அன்று யெஸ் பேங்க், தன் வாழ் நாள் உச்சமான 404 ரூபாயைத் தொட்டது.
பெரும் சரிவு
அதன் பிறகு தான் சனிச் சரிவு ஆரம்பித்தது. மேலே சொன்ன 20-08-2018-க்குப் பின், அத்தனை நல்ல ஏற்றத்தை யெஸ் பேங்க் தன் வாழ் நாளில் பார்க்கவில்லை. இன்று 06-03-2020 குறைந்தபட்சமாக 5.5 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. ஆனால் இன்றைய குளோசிங் நேரத்தில் எப்படியோ அடித்துப் பிடித்து யெஸ் பேங்க் பங்கு விலை 16.20 ரூபாயில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
96 சதவிகிதம்
ஆக கடந்த 20-08-2018 அன்று 404 ரூபாய்க்கு யாராவது யெஸ் பேங்க் பங்கை வாங்கி, இன்று வரை அதை விற்காமல் வைத்து இருந்தால், சுமாராக 96 சதவிகிதம் நஷ்டம் அடைந்து இருப்பார்கள். இதையே இன்றைய குறைந்தபட்ச விலையான 5.5 ரூபாயை வைத்து நஷ்டத்தை கணக்கிட்டால், நஷ்டம் சுமாராக 98.6 சதவிகிதத்தைத் தொடும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications