Zomato, swiggy, Ola, Uber: ஜனவரி 1 முதல் 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு.. மக்களுக்குப் பாதிப்பா..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புத்தாண்டு பல மகிழ்ச்சியான அனுபவங்களை நமக்குக் கொடுத்தாலும், தொடர்ந்து நடுத்தர மக்களைப் பாதிக்கும், பர்ஸை பதம் பார்க்கும் பல முக்கியமான பிரச்சனைகளைத் தன்னுடன் கொண்டு வருகிறது.

தூள் கிளப்பிய ரிலையன்ஸ், டிசிஎஸ்.. 10ல் 5 நிறுவனம் ஏற்றம்.. ! தூள் கிளப்பிய ரிலையன்ஸ், டிசிஎஸ்.. 10ல் 5 நிறுவனம் ஏற்றம்.. !

இன்று இந்தியா முழுவதும் டிஜிட்டல் சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதைப் பயன்படுத்த முடியாமல் இருக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளோம்.

 ஸ்விக்கி, சோமேட்டோ, ஓலா, உபர்

ஸ்விக்கி, சோமேட்டோ, ஓலா, உபர்

இப்படி நம்முடைய வாழ்க்கையின் அங்கமாக மாறியுள்ள ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சோமேட்டோ ஆன்லைன் டாக்ஸி சேலையான ஓலா, உபர் சேவைகளின் மீது மத்திய அரசு புதிதாக 5 சதவீத ஜஎஸ்டி வரி விதித்துள்ளது.

 ஜனவரி 1 முதல்

ஜனவரி 1 முதல்

இந்த வரி ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருவதால் மக்கள் இனி ஸ்விக்கி, சோமேட்டோ, ஓலா, உபர் சேவைகளுக்கு அதிகப் பணத்தைச் செலவழிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அப்படி எந்தச் சேவைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளது..? இதனால் மக்களுக்கு எந்த அளவிற்கு நஷ்டம் தெரியுமா.

 

 ஆன்லைன் உணவு டெலிவரி
 

ஆன்லைன் உணவு டெலிவரி

மத்திய அரசு ஆன்லைன் உணவு டெலிவரி துறையில் இருக்கும் டெக் நிறுவனங்களும், இத்தளத்தில் இருக்கும் உணவகங்களும் வரி ஏய்ப்புச் செய்து வருவதைக் கண்டுபிடித்த நிலையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.

 5 சதவீத வரி

5 சதவீத வரி

அதாவது ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் இதுநாள் வரையில் உணவகங்களில் இருந்து வசூலித்து வந்த 5 சதவீத வரியை தற்போது வாடிக்கையாளர்களின் மொத்த உணவுக்கான விலையில் இருந்து 5 சதவீத வரியை வசூலிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

 18 சதவீதம் ஜிஎஸ்டி

18 சதவீதம் ஜிஎஸ்டி

இதேபோல் டெலிவரி சார்ஜ், டிப்ஸ், பேக்கிங் சார்ஜ் ஆகியவற்றுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க உள்ளது உணவு டெலிவரி நிறுவனங்கள். இதனால் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவின் விலை பெரிய அளவில் உயர போகிறது.

 பதிவு செய்யப்படாத உணவகங்கள்

பதிவு செய்யப்படாத உணவகங்கள்

ஆன்லைன் தளத்தில் பல லட்சம் பதிவு செய்யப்படாத சிறிய மற்றும் பெரிய உணவகங்கள் உள்ளது, இதேபோல் பதிவு செய்யப்பட்ட உணவகங்கள் ஆன்லைன் ஆர்டர் கணக்குக் காட்டுவதன் மூலம் ஜிஎஸ்டி வரியைச் செலுத்தாத காரணத்தால் கடந்த 2 வருடம் மட்டும் சுமார் 2000 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம்.

 வரி ஏய்ப்பு

வரி ஏய்ப்பு

இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகவே வாடிக்கையாளரிடம் இருந்து வரியை வசூல் செய்யும் வழக்கத்தைக் கொண்டு வந்தால் வரி ஏய்ப்பை குறைக்க முடியும் என அரசு நம்புகிறது. ஆனால் இதிலும் சில பிரச்சனைகள் உள்ளது.

 டாமினோஸ், பிட்சா ஹட்

டாமினோஸ், பிட்சா ஹட்

உதாரணமாக டாமினோஸ், பிட்சா ஹட் போன்ற நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை தாங்களாகவே டெலிவரி செய்வது வழக்கம். இதற்கு 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இப்புதிய மாற்றத்தால் சொந்தமாக டெலிவரி செய்யும் ஆர்டர்களையும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தின் வாயிலாக டெலிவரி செய்தோம் என்று கணக்கு காட்ட முடியும்.

 ஓலா, உபர்

ஓலா, உபர்

இதேபோல் ஓலா, உபர் போன்ற அனைத்து ஆன்லைன் தளத்தில் புக் செய்யப்படும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் சேவைக்கு இதுநாள் வரையில் எவ்விதமான வரியும் விதிக்கப்படாத நிலையில் தற்போது மத்திய அரசு 5 சதவீத ஜிஎஸ்டி வரியை விதிக்க முடிவு செய்துள்ளது.

 பைக் - ஆட்டோ டாக்ஸி

பைக் - ஆட்டோ டாக்ஸி

அதன் மூலம் பைக் டாக்ஸி மற்றும் ஆட்டோ டாக்ஸி பயன்படுத்துவோர் அனைவருக்கும் அதிகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஆன்லைன் தளம் அல்லாமல் வெளியில் கிடைக்கும் ஆட்டோ-வை வாடகைக்கு எடுத்தால் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி கிடையாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zomato, swiggy, Ola, Uber: GST changes coming in from January 1 affects middle class people

Zomato, swiggy, Ola, Uber: GST changes coming in from January 1 affects middle class people ஜனவரி 1 முதல் 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு.. மக்களுக்குப் பாதிப்பா..!!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X