எல்ஐசி பாலிசிகளை வாங்க ஏஜென்ட்களின் உதவி அவசியமா..?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சில காலங்களுக்கு முன் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் என்று எதுவும் இருந்ததில்லை. அதேபோல் இணையதளம் மூலம் காப்பீட்டு பாலிசிகளை விற்கும் வசதிகளும் இல்லை.

எனவே உங்களுக்குப் பாலிசி தேவையென்றால் ஒரு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி) முகவரையே (ஏஜென்ட்) நம்பியிருக்க வேண்டியி நிலை இருந்தது.

ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த நிலை மிகவும் மாறிவிட்டது. இணைய வர்த்தக வளர்ச்சி மற்றும் காப்பீட்டுத் துறை தனியார்மயம் ஆகியவற்றின் மூலம் இந்தத் துறை இயங்கும் விதம் முற்றிலும் மாற்றம் கண்டுள்ளது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க எல்ஐசி முகவர் அவசியமா என்பது தான்.

இணையதள வர்த்தக வசதிகள்
 

இணையதள வர்த்தக வசதிகள்

ஆச்சரியமாகப் பல எல்ஐசி பாலிசிகளுக்கு இன்னமும் கூட அவற்றை வாங்க உங்களுக்கு முகவரின் உதவி தேவைப்படுகிறது. உதாரணமாக இணையத் தளத்தில் நீங்கள் ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசியை (குறிப்பிட்ட கால அளவுடைய காப்பீட்டுத் திட்டம்) வாங்க முடியும். மேலும் ஒரு பென்சன் பாலிசியை வாங்கவும் நீங்கள் எல்ஐசி இணையத் தளத்தை நாடலாம். ஆனால் இன்ன பிற பாலிசிகளுக்கு நீங்கள் முகவரை நாடவேண்டியது அவசியம்.

ஆனால் இன்ன பிற பாலிசிகளுக்கு நீங்கள் முகவரை நாடவேண்டியது அவசியம்.

தனியார் நிறுவனங்கள்

தனியார் நிறுவனங்கள்

அதே வேளையில் ஹெச்டிஎஃப்சி லைஃப் மற்றும் ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் அல்லது அவிவா லைஃ போன்ற தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் நீங்கள் பாலிசி எடுக்க வேண்டுமென்றால் நீங்கள் ஏறக்குறைய அனைத்து பாலிசிகளையுமே ஆன்லைனில் வாங்க முடியும்.

யுலிப்

யுலிப்

உண்மையில் தனியார் நிறுவனங்கள் யுலி போன்ற திட்டங்களைக் கூடக் குறைந்த விலையில் இடைத்தரகு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களைத் தவிர்த்து வாங்குமளவிற்கு அனுமதிக்கின்றன.

அதிக லாபம் தரும் பங்கிணைந்தக் காப்பீட்டுத் திட்டம் (ULIP)!!

அனைவருக்கும் பொருந்தும் முதலீட்டுத் திட்டம்..!

விரிவான விளக்கம்
 

விரிவான விளக்கம்

எல்ஐசி பாலிசிகளை ஏஜென்டுகள் மூலம் வாங்குவதற்குப் பல்வேறு சாதகங்கள் இருக்கின்றன. உதாரணமாக அவர் பாலிசி குறித்த விவரங்கள் மற்றும் பயன்கள் குறித்து விளக்குவார்.

அவரிடம் இருந்து நாம் முழுமையான நடைமுறை விளக்கத்தைப் பெறலாம்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

ஆனால் அதேவேளையில் உங்களை அவர் தவறாக வழி நடத்திவிடவும் வாய்ப்புள்ளதால் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியம். பாலிசி விவரங்களை முழுமையாகப் படித்துப் புரிந்து கொண்டு அதனை வாங்குவது சிறந்தது.

ஏஜென்ட்

ஏஜென்ட்

ஆன்லைன் மூலம் பாலிசி வாங்கும்போது குறிப்பாக டெர்ம் பாலிசிகளை வாங்கும்போது அதனைக் குறித்த பல விவரங்களை அறியாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. உதாரணமாக உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உடனடியாக விளக்கம் கிடைக்காது.

எனவே பாலிசி வாங்கும்போது ஒரு ஏஜென்ட் மூலம் செல்வது சிறந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do You Need An LIC Agent To Buy An LIC Policy?

There was a time when there were no private insurance companies and there were also no online plans to buy an insurance policy. You had to depend on the Life insurance Corporation (LIC) Agent, if you needed an LIC policy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X