ஆண்களை விட பெண்கள் ஏன் முக்கியமாக இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண விஷயம் என்று வரும் போது பெண்கள் இயற்கையிலேயே ஆண்களை விட சிறப்பாக செயல்படுவார்கள். இன்று, பெண்கள் பல நிதி மற்றும் வங்கி பிரிவுகளில் முன்னிலை பதவிகளை வகிக்கின்றனர்.

இந்தியாவில் ஐந்தில் நான்கு முன்னணி வங்கிகள் பெண்களால் தலைமையேற்று நடத்தப்படுகின்றன. ஃபோர்ப்ஸ் பத்திரிகை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கிக்கு தலைவராக சேவையாற்றிய முதல் பெண்மணியான அருந்ததி பட்டாச்சார்யாவை உலகின் மிக சக்தி வாய்ந்த பெண்களின் வரிசையில் 25 வது இடத்தில் வைத்துள்ளது.

சந்தா கோச்சார்

சந்தா கோச்சார்

இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு தனியார் வங்கிகளை தலைமையேற்று நடத்தும் சந்தா கோச்சார் மற்றும் ஷிகா ஷர்மா, இந்திய வங்கியியல் துறையின் செல்வாக்கு மிகுந்த பெண்களாவர்.

பயப்படும் பெண்கள்

பயப்படும் பெண்கள்

முரண்பாடாக, தனக்கென்று சுயமாக முதலீடு செய்வது என்கிற விஷயத்துக்கு வரும் போது பெண்கள் பயப்படுகிறார்கள். பெரும்பாலான பெண்கள் அவர்களுடைய அன்றாட வரவு செலவுகளை நிர்வகிப்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் ஆனால், பண விஷயங்களைப் பற்றி குடும்பத்தினருடன் விவாதிப்பதில் அதிக சௌகரியாக உணர்வதில்லை.

ஆய்வு அறிக்கை

ஆய்வு அறிக்கை

முதலீட்டு நிறுவனமான ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் பெரும்பான்மையான பெண்கள் பணத்தைப் பற்றி பேச வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது பின்வாங்குகிறார்கள் என்று கூறுகிறது. ஒரு ஆய்வில் பத்தில் எட்டு பெண்கள் தங்கள் நிதி சார்ந்த விஷயங்களைப் பற்றி தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கூட விவாதம் செய்வதிலிருந்து விலகி இருப்பதாக ஒப்புதலளித்திருக்கிறார்கள். ஆய்வில் பதிலளித்தவர்களில் சுமார் 56 சதவிகிதம் பேர் இது விவாதம் செய்யக்கூடாத மிகவும் தனிப்பட்ட விஷயம் என்று சொன்னார்கள்.

சுமார் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் அவர்களுடைய முதலீடுகள் தொடர்பான தகவல்களை வெளியே சொல்ல விரும்பவில்லை என்று கூறினர்.
மேலும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பெண்கள், அவர்கள் நிதிகளைப் பற்றிப் பேசும் அளவிற்கு வளரவில்லை என்று கூறினர். ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நடத்திய 2015 ஆம் ஆண்டு எஃப்ஐடி பெண்கள் ஆய்வின் படி, சில சமயங்களில், பெண்கள் அவர்களது நிதியியல் முடிவுகைளப் பற்றி பேச போதுமான அளவு தன்னம்பிக்கையுடன் உணரவில்லை என்று தெரிவிக்கிறது.

 

காலாச்சாரம் அல்ல

காலாச்சாரம் அல்ல

குடும்பத்தினருடன் பணத்தைப் பற்றி விவாதிப்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி அல்ல. இந்தியாவில் பெண்கள் அவர்களுடைய வேலையில் நல்ல பதவியில் இருக்கலாம். ஆனால் பாதுகாப்பைப் பொறுத்தவரை அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் தந்தையையோ கணவரையோ தான் தேடுகிறார்கள். சமூக பாதுகாப்பு மிக முக்கியமாக திருமணத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. பெறறோர் அவர்களுடைய மகளின் திருமண நாளுக்காக செலவு செய்கிறார்களேயன்றி அவளுடைய எதிர்காலத்திற்காக அத்தியாவசியமாக செலவு செய்வதில்லை. பெண்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே ஒட்டுமொத்த வீட்டுப் பொறுப்பையும் எடுத்துக் கொள்ளக் கற்றுக் கொடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பணத்தைப் பற்றி பேசுவது குறித்த இந்த தயக்கம் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் தாண்டி நீட்டிக்கிறது.

விளம்பரங்கள்

விளம்பரங்கள்

வர்த்தக விளம்பரங்கள் கூட வீட்டுப் பெண்களையே சுற்றிச் சுழல்கிறது. கொசு விரட்டிகள் முதல் கை கழுவும் திரவம் மற்றும் பற்பசை வரை அனைத்தும் பெண்களுக்கு மட்டுமே உரிய கவலைகளாக காட்டப்படுகிறது. ஆண் என்பவன் அவன் உயிரோடிருக்கும் போதே அவன் அமைத்த இலக்குகளை அடைய மனைவி குழந்தைகளுக்காக சம்பாதித்து ஆயுள் காப்பீட்டை வாங்குபவனாக சித்தரிக்கப்படுகிறான்.

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள்

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள்

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஆண்களை விட பெண்களை அதிக உடல் அபாயங்களைக் கொண்டவர்களாகக் கருதுகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு அதிக நாட்பட்ட நோய்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். அவர்கள் அடிக்கடி மருத்துவரைப் பார்க்க வருகிறார்கள், நீண்ட காலம் உயிர் வாழ்கிறார்கள் மற்றும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

தயங்கும் பெண்கள்

தயங்கும் பெண்கள்

பெண்கள் பொதுவாக நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும் போது தயங்கும் மனப்போக்கைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வீட்டையும் அலுவலகத்தையும் நிர்வாகம் செய்து கொண்டு மும்முரமாக இயங்குகிறார்கள்.

பெண்களுக்கான முதலீடு திட்டங்கள்

பெண்களுக்கான முதலீடு திட்டங்கள்

இந்தியாவில் பெண்களுக்கு ஒரு சில சமூக நலத் திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. அவை பெரும்பாலும் மகப்பேறு நலன்களுடன் தொடர்புடையவை. தனியார் மருத்துவ சுகாதாரத் திட்டங்களைப் பொறுத்தவரை பெண்கள் அதிகப் பணம் செலுத்த வேண்டியிருக்கிறது.

குறைவான சம்பளம்

குறைவான சம்பளம்

இதிலுள்ள ஒரு முரண்பாட்டைப் பாருங்கள். இந்தியப் பெண்கள் ஆண்களை விட 25 சதவிகிதம் குறைவாக சம்பாதிக்கிறார்கள். மான்ஸ்டர் நடத்திய சமீபத்திய ஒரு பகுப்பாய்வில் உற்பத்தித் துறையில் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு ஊதியம் செலுத்தும் இடைவெளி மிக அதிகமாக உள்ளது. இதையே ஐடி, வங்கி மற்றும் நிதியியல், மற்றும் கல்வி மற்றும் ஆய்வுத் துறைகளும் பின்பற்றுகின்றன. முரண்பாடுகளுக்கு எதிர்மாறாக, பெண்கள் வாழ்க்கையின் அனைத்து பாதைகளிலும் எல்லா நேரங்களிலும் பல்வேறு பணிகளை ஒரே சமயத்தில் செய்யும் ஆக்கத்திறனை கொண்டிருக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக அவர்கள் தங்களது உடல்நலத்தைப் பற்றி மிகுந்த கவனமுடன் இருப்பதில்லை.

நோய்கள்

நோய்கள்

அதிகரித்து வரும் இதயம் தொடர்பான நோய்கள், கர்ப்ப கால நீரிழிவு நோய், புற்றுநோய், இனப்பெருக்க ஆரோக்கியம், மன அழுத்தம் ஆகியவை இந்தியப் பெண்கள் ஆரம்பத்திலேயே ஆரோக்கிய காப்பீட்டை தேர்ந்தெடுக்க வேண்டிய தேவைக்கான காரணங்களாகும். மாசுபாடு, கலப்படம் மற்றும் வாழ்க்கை முறை நோய்கள் அதிகரித்து வரும் போக்கை காட்டுகிறது. குழந்தையின்மைக்கான சிகிச்சை மிகப் பொதுவானதாக ஆகிவிட்டது. இவை எந்தவொரு குடும்பத்தின் நிதி சார்ந்த ஆரோக்கியத்திலும் வடுவை ஏற்படுத்துகின்றது.

ஆரோக்கிய காப்பீட்டை திட்டமிடுதலையும் புறந்தள்ள முடியாது. அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுப்பது நல்லது. ஆரோக்கிய கவனிப்புத் தேவைகள் வேலைக்கு செல்லும் மற்றும் வேலைக்குச் செல்லாத பெண்கள் ஆகிய இருபாலருக்கும் ஒரே மாதிரியானவையாகும். ஆனால் யதார்த்தம் முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது.

 

மருத்துவ காப்பீடு திட்டங்கள்

மருத்துவ காப்பீடு திட்டங்கள்

"ஆரோக்கியக் காப்பீட்டுத் திட்டங்கள் பெண்களுக்கிடையே பிரசித்திப் பெற்றதாக இல்லை. பெண்கள் பெரும்பாலும் கணவர் வைத்துள்ள குடும்ப மிதவைத் திட்டத்தில் காப்புறுதி பெறுகிறார்கள். மிக அரிதாக, விவாகரத்து பெற்ற மற்றும் தனித்த தாய்மார்கள் தனிப்பட்ட மெடிக்ளைம் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்," என்கிறார் லேண்ட் மார்க் காப்பீட்டு நிறுவனத்தின் ஈவிபி மற்றும் தேசிய தலைவர் வினய் தலுஜா.

மிதவை திட்டங்கள்

மிதவை திட்டங்கள்

பொதுவாக மிதவைத் திட்டங்கள் 21 வயது வரை நம்மை சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு காப்புறுதி அளிக்கிறது. பெண் பணிக்கு செல்ல முடிவெடுத்தால், அவர் சார்ந்த நிறுவனத்திடமிருந்து காப்பீட்டுக் காப்புறுதியை பெறுகிறார். ஆனால், அவள் தனக்கு பொருத்தமான இணை கிடைக்கும் வரை வீட்டிலேயே இருந்தால், அவளுடைய பெற்றோர் ஆரோக்கியம் தொடர்பான செலவுகளை அவளது வருங்கால கணவனிடம் விட்டுவிடுகிறார்கள்.

காப்பீட்டு தொகை

காப்பீட்டு தொகை

காப்பீட்டுத் தொகையைப் பொறுத்த வரை அதே காப்பீட்டுத் தொகைக்கு பெண்கள் அதிக முனைமத் தொகையை கொடுக்க வேண்டி இருக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. "பெண்கள் அதிக ஆயுளையும் அதே சமயம் அதிக அபாயங்களையும் கொண்டுள்ளனர். ஆரோக்கிய காப்பீட்டு நிறுவனங்கள் அவர்களின் பழைய தாக்கல் தீர்வு விகிதங்களின் அடிப்படையில் முனைமத் தொகையை கணக்கிடுகின்றன. சமீபத்தில், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களின் முனைம விலைகள் தாக்கல் மறுதரவுகளின் காரணமாக 20% உயர்ந்துள்ளது." என்கிறார் எல்ஜே வரத்தக கல்வி நிறுவனத்தின் நிதியியல் வல்லுநரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பூனம் ரூங்தா.

பாலிசி விற்பனை

பாலிசி விற்பனை

ஆயுள் காப்பீட்டைப் பற்றி பேசுவதென்றால், நிறுவனங்கள் இல்லத்தரசிகளுக்கும் மற்றும் சுய வேலைவாய்ப்பில் உள்ள பெண்களுக்கும் பாலிசியை விற்பதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. காப்பீட்டாளர்களுக்கு தனிநபர் அபாயம் என்பது நிதி உதவியின் அடிப்படையில் மனித உயிரின் மதிப்பு (ஹெச்எல்வி) என்கிற கருத்தின் வழியாகப் பெறப்படுகிறது.

அபாயம்

அபாயம்

"அபாயம் குடும்பத்தின் வருமானம் ஈட்டுபவருக்குத் தான் அதிகபட்சமாக இருக்கிறது. வருமானம் ஈட்டுபவரின் ஹெச்எல்வி வரைகோடு வயது அதிகரிக்கும் போது சரிகிறது, அவர் ஓய்வடையும் போது அது பூஜ்ஜியமாகிறது. அவரது குடும்பத்திற்கு அவருடைய நிதி சார்ந்த பங்களிப்பு குறைந்தபட்சமாகிவிடுகிறது. எனவே, முனைமம் என்ற வடிவத்தில் ஒரு தொகையை அவரது அபாய காப்புறுதியை நோக்கி செலுத்த வேண்டியிருக்கிறது," என்கிறார் பூனம் ருங்தா.

பெண்களுக்கு ஏற்ற காப்பீடு திட்டங்கள்

பெண்களுக்கு ஏற்ற காப்பீடு திட்டங்கள்

ஆயுள் காப்பீடு பாலிசிதாரரின் வயது மற்றும் வருமானத்துடன் நேரடி தொடர்புடையது. இது ஒரு இல்லத்தரசிக்கு அதை பெற முடியாததாக்குகிறது. "ஒரு இல்லத்தரசி ஒப்பீட்டளவில் அவரது குடும்பத்திற்கான நிதி பங்களிப்பில் குறைந்த மனித உயிர் மதிப்பைக் கொண்டிருக்கிறார். ஒரு நிதியியல் திட்டமீட்டாளராக, நான் நீண்ட கால வரையறை கொண்ட உயர் தொகை காப்புறுதி திட்டங்களை பரிந்துரைக்க மாட்டேன். ஒரு இல்லத்தரசிக்கு சொந்தமாக வருமானம் இல்லையென்றால், ஐஆர்டிஏ வால் அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச காப்பீடு அல்லது அவருடைய கணவரின் காப்பீட்டிற்கு சமமான காப்பீடு அனுமதிக்கப்படும். நீண்ட கால வரையறை கொண்ட ஒரு வழக்கமான திட்டம் இல்லத்தரசிகளுக்கு சிறந்தது மேலும் அது ஓய்வுகால தேவைகளையும் பூர்த்தி செய்யும்," என்று பரிந்துரைக்கிறார் பூனம் ருங்தா.

பெண்ணின் இழப்பு

பெண்ணின் இழப்பு

ஆனால் ஒரு குடும்பத்திற்கு பெண்ணின் இழப்பு நிதி இழப்பை விட மிக அதிகமானது. ஒரு பெண் உறுப்பினரின் இல்லாமை வெற்றிடத்தை விளைவிக்கும் அது எளிதில் நிரப்ப முடியாததாகும். கணவர் வீட்டு உதவி, கல்வி கட்டணம், பகல் பொழுதுகளில் குழந்தைகளை பராமரிக்கும் மையம் மற்றும் பல செலவுகளுக்காக தனி நிதி ஒதுக்க வேண்டியிருக்கும். ஒருவேளை அவர் இரண்டாவது முறையாக திருமணம் செய்தால், அவர் அதிக செலவுகளுக்கு ஆட்பட வேண்டியிருக்கும்.

பாலிசி வாங்க முன்வராரத பெண்கள்

பாலிசி வாங்க முன்வராரத பெண்கள்

"பல பெண்மணிகள் முன்வந்து அவர்களுக்கென்று காப்பீட்டை வாங்குவதில்லை. பெண்கள் வேலைக்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் இருவருக்கும் ஒரு உத்தேச மனித உயிரின் மதிப்பு இருக்கிறது," என்று கருதுகிறார் வினய் தலுஜா.

இந்தப் பிரச்சனை வெறும் விழிப்புணர்வு நிலைகளைப் பற்றி மட்டும் அல்ல. நாம் வளர்க்கப்படும் விதத்தையும் பொறுத்தது. ஐடி தகவல் தொழில்நுட்ப பணியாளரான ப்ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான்கு வயது குழந்தையின் தாயாவார். அவர் தான் வேலை பார்க்கும் போது ஆயுள் காப்பீட்டை வாங்குவது பற்றி ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை என்று கூறுகிறார். அவர் இப்போது ஓய்வு கால விடுமுறையில் இருக்கிறார். இருந்தாலும், அவர் ஒரு தனிக்குடும்பத்தை உள்ளடக்கிய ஆரோக்கிய காப்பீட்டையும் கொண்டிருக்கிறார்.

 

பணம் சார்ந்த முடிவுகள்

பணம் சார்ந்த முடிவுகள்

"பணம் சார்ந்த முடிவுகள் என்று வரும்போது உண்மையில் அதில் பெண்கள் பங்கேற்பதில்லை. அவர்கள் பண விஷயங்கள் அனைத்தையும் அவர்களுடைய கணவரிடமே விட்டுவிடுகிறார்கள். காப்பீட்டு நிறுவனங்கள் கூட அவர்களுடைய அனைத்து விளம்பரங்களிலும் ஆண்களைத் தான் வருமானம் ஈட்டுபவராக சித்தரிக்கின்றன," என்று புலம்புகிறார் அவர்.

பெண்கள் கண்டிப்பாக காப்பீடு எடுக்க வேண்டும்

பெண்கள் கண்டிப்பாக காப்பீடு எடுக்க வேண்டும்

தனியார் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக இருக்கும் தனித்த பெண்மணியான கரிஷ்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒவ்வொரு பெண்ணும் தனக்கென்று ஆயுள் காப்பீட்டை வாங்க வேண்டுமென்று நினைக்கிறார். "உங்கள் திருமண நிலையுடன் காப்பீட்டிற்கு எந்தத் தொடர்பும் இல்லை. நீங்கள் சம்பாதிப்பவராக இருந்தால் நீண்ட கால வரையறை கொண்ட டெர்ம் திட்டங்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். முதலாளிகளால் வழங்கப்படும் ஆரோக்கிய காப்பீட்டு திட்டங்கள் கூட தனிப்பட்ட முறையில் தனிநபர்களுக்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டவையல்ல. குழு திட்டங்களை நம்பியிருத்தல் சில சமயங்களில் தீங்கு விளைவிப்பதாக முடியும். எனவே உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப மெடிக்ளைம் திட்டங்களை வாங்குவது சிறந்தது," என்று அவர் கருதுகிறார்.

பெண்களின் கவனத்திற்கு

பெண்களின் கவனத்திற்கு

பெண்கள் எச்சரிக்கை மணி ஒலிப்பதற்கு முன் தங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் குடும்பத்தை பல வழிகளில் இயக்குகிறார்கள். ஆண்களோடு ஒப்பிடும் போது பெண்களின் உடல்நலப் பிரச்சனைகள் வித்தியாசமானவை. மேலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டியவை. ஆனால் வருந்தத்தக்க வகையில் மிகச் சிலப் பெண்களே அவர்களுடைய சொந்த ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அவர்களின் பெரும்பான்மையான வாழ்நாளில் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், சார்ந்து வாழ்கிறார்கள், அல்லது வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையே கண்ணாமூச்சி விளையாடுவதில் மும்முரமாக இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why women should by insurance more than men

Why women should by insurance more than men
Story first published: Sunday, October 29, 2017, 20:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X