நம் வாழ்க்கையில் வொர்க் லைப் பேலென்ஸ் கொண்டு வருவது எப்படி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு மனிதனுக்கு இருக்கும் மிகப்பெரிய வளம் என்றால் நேரம். ஆகவே அதை இயன்ற வரை, வேலை மற்றும் குடும்பத்திற்கான நேரத்தைச் சமமாகச் செலவழிக்க வேண்டும், இதைத் தான் வொர்க் லைப் பேலென்ஸ் என்று கூறப்படுகிறது. நேரத்தை நாம் எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதை விட, செலவழிக்கும் நேரத்தின் தரம் எப்படியானது என்பது தான் முக்கியம். இன்றைய நவீன வாழ்க்கை முறைக்கு மிகவும் முக்கியமானது work-life balance.

 

நாம் வீட்டில் இருக்கும் போது, நம்முடைய முழுக் கவனமும், நம்மீதும் நம் குடும்பத்தினர் மீது மட்டுமே இருக்கும் வேண்டும், அதேபோல் வேலை நேரத்தில் நம்முடைய கவனம் வேலை மீது தான் இருக்க வேண்டும்.

திடமான மனிதன்

திடமான மனிதன்

காலையில் ஓட்டபயிற்சி மற்றும் ஜிம் செல்வதும் வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைப்பதுடன் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது

அதிக ஆற்றல் மற்றும் சந்தோசம்

அதிக ஆற்றல் மற்றும் சந்தோசம்

எதிர்மறை எண்ணங்கள் மற்றும் எதிர்மறை சிந்தனை கொண்ட மனிதர்களை நான் அருகில் வைத்துக் கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். வேலையை அதிகம் நேசிப்போர், எவ்வளவு வேலை வந்தாலும் அது சுகமாக இருக்கும். என்னால் முடியும் என்ற உணர்வும், கனவுகளை நோக்கிய உழைப்பும் நமக்கு எப்போதும் ஆற்றலைக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

ரிஸ்க் எடுப்பவர் அல்லது திட்டம் தீட்டுபவர் ?
 

ரிஸ்க் எடுப்பவர் அல்லது திட்டம் தீட்டுபவர் ?

சரியான சிந்திக்கும் மனிதர் எப்போதும் இரண்டையும் செய்ய வேண்டும். நான் நிச்சயமாக ரிஸ்க் எடுப்பவர்கள், யாருமே செல்லாத ஒரு இடத்தை நோக்கிப் பயணிப்பவர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில், செயல்படுத்தப்படாத எந்த ஒரு கனவும், வெறும் கனவு தான்.

எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன், ஒரு சிறு திட்டமிடுதல் மிகவும் அவசியம்.

 

ஆன்மீக உணவு

ஆன்மீக உணவு

ஆன்மிகம், உளவியல் சார்ந்த விஷயங்களை நான் அதிக நேரம் படிப்பது, தெரிந்துகொள்வதன் மூலம் மனதில் தெளிவும் அமைதியும் இருக்கும். இதற்கு மதம், கொள்கைகளை என எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.

வெற்றி தோல்வியைக் கையாளுதல்:

வெற்றி தோல்வியைக் கையாளுதல்:

பொதுவாக நாம் தோல்விகளைக் கொண்டாடவேண்டும், யாரும் சொல்லிக்கொடுக்காத விஷயங்களையும், கற்பதற்குக் கடினமான விஷயத்தையும் தோல்வி நமக்குக் கற்று தரும்.

இது நமது வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. ஒருவன் ஒரு முறை தவறு செய்யலாம். ஆனால் ஒரு முறை செய்த தவறை மறுமுறை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்.

 

நெருக்கடி மேலாண்மை :

நெருக்கடி மேலாண்மை :

தொழிலிலும், பணி வாழ்கையில் பிரச்சனை ஏற்பட்டால், பிறரின் உதவியை நாடுவதை விடவும் நீங்கள் களத்தில் இறங்கி முயற்சி செய்யுங்கள். இது உங்களுக்கு வரும் காலத்திலும் பெரிய அளவில் உதவும். குறிப்பாகப் பிஸ்னஸ் செய்பவர்களுக்கு அதிகம் பயன்படும்.

அதேபோல் கலவரமான சூழ்நிலையில் முகத்தை அமைதியாக வைத்துக் கொள்ளதன் மூலம் எதிர்களுக்குப் பயத்தையும், நம்முடன் இருப்பவர்களுக்கு நம்பிக்கையும் அளிக்க முடியும்.

 

மன அழுத்தத்தைக் குறைக்கும் மந்திரம் :

மன அழுத்தத்தைக் குறைக்கும் மந்திரம் :

தொழிலதிபர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள் என்று இல்லாமல் இன்றளவில் அனைவருக்கும் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதனைக் குறைக்கக் கண்டிப்பாக நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

உங்களுக்குப் பாடுவது ரொம்பப் பிடிக்கும் என்றால் பாடுங்கள், புதிய இசையைக் கற்றுக்கொள்ளுங்கள், கிட்டாரும், டிரம்ஸ் போன்றவற்றை வாசிக்கத் தெரிந்தால் மன அழுத்தம் நிறைந்த தருணத்தில் வாசியுங்கள்.

 

குழந்தைகள்

குழந்தைகள்

உங்களுக்குத் திருமணமாகி குழந்தைகள் இருந்தால் மன அழுத்தத்தைக் குறைக்கக் குழந்தைகளை விடவும் பெரிய இடம் கிடையாது.

புத்தகம்

புத்தகம்

நீங்கள் யாராக இருந்தாலும் சரி தொடர்ந்து எதையாவது படித்துக்கொண்டே இருங்கள், இது உங்களுக்குப் பல படிப்பினையைக் கொடுக்கும்.

சில புத்தகங்கள் உங்கள் வாழ்க்கையைக் கூட மாற்றலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to bring Work Life balance to your life?

How to bring Work Life balance to your life? - Tamil Goodreturns | நம் வாழ்க்கையில் வொர்க் லைப் பேலென்ஸ் கொண்டு வருவது எப்படி..? - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X