இன்வெஸ்ட்மென்ட் தெரியும், அது என்ன Contra Investing..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்கள் கூட்டம், வர்த்தகர்கள் கூட்டம் மற்றும் முதலீட்டாளர்கள் கூட்டம், செய்திகளில் அடிக்கடி வரும் ஒன்றை நோக்கி தான் ஓடுவோம்.

 

அப்படி ஒரு பங்கைக் குறித்து நல்ல செய்திகள் வரும் போது அந்த பங்குகளில் முதலீடு செய்வார்கள். மாறாக ஒரு நல்ல நிறுவனத்தைப் பற்றி வரும் சில கெட்ட செய்திகளின் போது அந்த பங்குகளில் செய்திருக்கும் முதலீடுகளை விற்று வெளியேறுவார்கள். இது தான் சாதாரணமாக முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் செய்வது. இதைத் தான் மார்க்கெட் சென்டிமெண்ட் என்று சொல்வோம். இன்று சந்தை இந்த மார்க்கெட் செண்டிமெண்டால் தான் தரை தட்டி நல்ல நிறுவன பங்குகள் கூட 50 - 60 சதவிகித தள்ளுபடி விலைக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் தான் contra investing உள்ளே வருகிறது.

Contra Investing

Contra Investing

ஒரு பேச்சுக்கு மார்க்கெட் சென்டிமென்டுக்கு எதிர் திசையில் முதலீடு செய்தால், அதற்கு பெயர்தான் Contra Investing. இது ஏற்றம் மற்றும் இறக்கம் என இரண்டு ரக சந்தை சூழ்நிலைகளுக்கும் பொருந்தும். சந்தை கவனிக்கத் தவறிய பங்குகளிலும் மற்றும் சந்தை எதிர்மறையாக நினைக்கும் பங்குகளிலும் முதலீடு செய்வதும் "கான்ட்ரா இன்வெஸ்டிங்" பதத்தில் பொருந்தும். இது தனிப்பட்ட பங்குக்கும் பொருந்தும், துறைக்கும் பொருந்தும்.

யார் எல்லாம்

யார் எல்லாம்

10,000 ரூபாய் டீமேட் கணக்கில் வைத்து பங்குகளில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்கள் தொடங்கி 10,000 கோடி முதலீட்டாளர்கள் பணத்தை நிர்வகிக்கும் ஃபண்ட் மேனேஜர்கள் வரை Contra Investing செய்து வருகிறார்கள். Contra Investing செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பார்த்துவிட்டு போங்களேன்.

1. Contra Investing - Fundamentals
 

1. Contra Investing - Fundamentals

Contra Investing செய்வதாக இருந்தாலும், நாம் முதலீடு செய்யும் பணம் பெருக நல்ல நிறுவனத்தில் தான் முதலீடு செய்ய வேண்டும். அதற்கு நிறுவனம் ஈட்டும் லாபம், நிர்வாகத் திறன், கார்ப்பரேட் கவர்னன்ஸ், சந்தையில் புதுமையைப் புகுத்துவது, சந்தையை நிலையாக தக்கவைத்துக் கொள்வது, சரியாக வரி கட்டுவது, கடன் குறைவான அளவில் வைத்திருப்பது போன்ற அடிப்படை விஷயங்களை கவனிக்க வேண்டும். குறிப்பாக வெளிப்படையாக செயல்படும் நிறுவனமாக இருக்க வேண்டும்

2. Short வேண்டாமே!

2. Short வேண்டாமே!

Contra Investing-ல் எப்போதும் ஷார்ட் எடுப்பது, தற்கொலைக்கு சமம். லாங் எடுத்தால் போட்ட காசு தான் போகும், இதுவே ஷார்ட் எடுத்து நஷ்டமானால்... எவ்வளவு நஷ்டம் எனப்தைக் கணிக்கவே நல்ல நேரம் பிடிக்கும். எனவே Contra Investing-ல் நோ ஷார்ட் ப்ளீஸ்

3. டிவில வந்துருச்சா ?

3. டிவில வந்துருச்சா ?

உங்களுக்குள் இருக்கும் ஒரு அனலிஸ்ட் ஒரு துறையைப் பற்றியோ அல்லது ஒரு பங்கைப் பற்றியோ ஒரு உண்மையைக் கண்டு பிடிக்கிறார் என்றால், அதை செய்தித் தாள்களும், டிவி சேனல்களும் உறுதி செய்யும் வரை காத்திருக்க வேண்டாம். உதாரணமாக, 1998-99-ம் ஆண்டுகளில், இந்தியாவில் ஐடி துறையின் வளர்ச்சி விண்ணை தொடும் வேகத்தில் இருந்தது. அப்போது இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐடி நிறுவனங்களில் முதலீடு செய்யத் தயங்கியவர்கள் பலர். ஆனால், அந்தப் பங்குகளில் துணிந்து முதலீடு செய்து லாபம் கண்டபின், அவற்றை பத்திரிகைகள் எழுதின. அதன் பிறகு அந்தப் பங்குகள் எல்லோருக்கும் தெரிய வந்தன. ஆக, உங்களுக்கு தெரிந்த ஒரு உண்மையை உங்களின் ஷேர் புரோக்கரும் ஆமோதிக்கிறார். தவிர, அந்தப் பங்கின் ஃபண்டமென்டல் ஸ்ட்ராங்காக இருக்கிறது என்றால் தைரியமாக முதலீடு செய்யலாம்.

 4. எதனால் ஏற்றம், எதனால் இறக்கம்?

4. எதனால் ஏற்றம், எதனால் இறக்கம்?

Contra Investing நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயம், மார்க்கெட் சென்டிமென்ட். அமெரிக்காவில் இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டபோது இந்தியச் சந்தைகள் ஏகமாக இறங்கியது. இப்படி சம்பந்தமில்லாத காரணத்தினால் பங்கு விலை இறங்கினால் அது Contra Investing செய்பவர்களுக்கான ஜாக்பாட். கையில் இருக்கும் மொத்த காசையும் இறக்குடா என முதலீடு செய்யலாம்.

5. அந்த விலை மொமென்டம்!

5. அந்த விலை மொமென்டம்!

உங்களுக்குள் இருக்கும் அனலிஸ்ட் ஏதோ ஒரு பங்கின் விலை சில நெகட்டிவ் செய்திகளால் மிக அதிகமாக இறங்குவதைப் பார்த்து, ‘‘இப்ப இந்தப் பங்கை வாங்கினால் லாபம் பார்க்கலாம்'' என்று நினைத்தால், உங்கள் அறிவை நீங்களே மெச்சிக் கொண்டு அந்தப் பங்கை வாங்கலாம். அதேபோல், ஒரு பங்கு தொடர்பாக வந்த பாசிட்டிவ் செய்திக்கு கிடைக்க வேண்டிய மொமென்டத்தைவிட கூடுதலாக அந்தப் பங்கின் விலை ஏறுகிறது; ஒரு சிறிய நெகட்டிவ் செய்தி வந்தால் கூட பங்கின் விலை பெரிய இறக்கத்தை சந்திக்கலாம் என்கிறபோது, கிடைத்த லாபத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்புவது நல்லது.

6. கண்டுபிடி... கண்டுபிடி!

6. கண்டுபிடி... கண்டுபிடி!

பங்கின் விலை அதன் மதிப்பைவிட கூடுதலாக இருக்கிறது என்றால் ‘ஓவர் வேல்யூ ஸ்டாக்' என்பார்கள். இதுவே மதிப்பைவிட சந்தை விலை குறைவாக இருந்தால் ‘அண்டர் வேல்யூ' என்பார்கள். இதில் நல்ல ஃபண்டமென்டல்களை கொண்ட அண்டர் வேல்யூ பங்குகளில் தைரியமாக முதலீட்டை மேற்கொள்வதும் Contra Investing தான். நீங்கள் முதலீடு செய்த பங்கை சந்தை கண்டு கொண்ட பின் அதன் விலை ஏற்றத்தில் மகிழ்ச்சிக் கூத்தாடுவீர்கள்.

7. டிரெண்டப் பாரு!

7. டிரெண்டப் பாரு!

பொருளாதார வளர்ச்சியையும், எந்தத் துறை வளர்கிறது என்பதையும் காட்டும் ஒரு கண்ணாடி தான் பங்குச் சந்தை. ஒவ்வொரு காலத்தில் ஒரு துறை கோலேச்சும். ஒரு காலத்தில் உற்பத்தித் துறை சார்ந்த பங்குகள் என்றால், இன்னொரு காலத்தில் ஐ.டி அல்லது பார்மா பட்டையைக் கிளப்பும். ஆக, இனி வரும் நாட்களில் எந்தத் துறை கலக்கும் என்பதை முடிவு செய்யும் திறன் வேண்டும். உதாரணமாக, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியா முழுக்க பரவி வருகின்றன. இந்த நிறுவனங்கள் ஐபிஓ வந்து பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படாமலே, இவற்றில் முதலீடு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, கூடிய விரைவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்குச் சந்தையை ஆக்கிரமிக்கலாம். அப்படி வந்தாள் எதில் முதலீடு செய்வது என பகுத்து அறியுங்கள்.

8. எல்லா இறக்கங்களும் ஏற்றத்துக்கு அல்ல

8. எல்லா இறக்கங்களும் ஏற்றத்துக்கு அல்ல

ஒரு பங்கின் விலை கணிசமாகக் குறைந்துவிட்டது. யாருமே சீண்டத் தயங்கும் இந்தப் பங்கை நான் ஒரு Contra Investing செய்பவன் என வாங்கக் கூடாது. 2008-ல் பங்குச் சந்தை சரிவில் விலை இறங்கிய சில பங்குகள் இன்னும் விலை உயரவில்லை. உதாரணமாக, 2008-ல் மொனத் இஸ்பாத் பங்கின் விலை ரூ.710-ஆக வர்த்தகமானது. தற்போது இந்தப் பங்கு விலை ரூ.37. விலை குறைந்த இந்தப் பங்கை வாங்குவது கான்ட்ரா இன்வெஸ்ட்டிங் அல்ல.

9. பூவா, நாரா?

9. பூவா, நாரா?

Contra Investing அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் பங்குகள் டிரெண்டை உருவாக்கும் பங்குகளா அல்லது வேறு நிறுவனங்கள் உருவாக்கிய டிரெண்டில் பயணிக்கும் பங்குகளா என பாருங்கள். உதாரணமாக, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் தான் இந்தியாவில் ஐடி டிரெண்டை தொடங்கி வைத்தது. அதன்பிறகு தான் மைண்ட் ட்ரீ, வக்ராங்கி, டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி இன்ஃபோடெக் போன்ற நிறுவனங்கள் எல்லாம் அவர்கள் பாதையில் நடக்கும் நிறுவனங்கள். அப்படி தொடங்கிய நிறுவனங்களில் இன்று எத்தனை நிறுவனங்கள் நல்ல விலையில் வர்த்தகமாகி வருகிறது என்பதை பார்க்க வேண்டும். டிரெண்ட் இருக்கும் வரை நல்ல விலைக்கு வர்த்தகமாகும். டிரெண்ட் மாறியவுடன், மொத்தமாக கம்பெனிகளே காணாமல் போவதற்குகூட வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, நாம் முதலீடு செய்யும் பங்கு பூவா (டிரெண்ட் செட்டரா) அல்லது நாரா (டிரெண்டினால் விலை ஏறும் பங்குகளா) என்பதை ஆராய்ந்து முதலீடு செய்யுங்கள்.

 10. எவ்வளவு லாபம் வேண்டும்?

10. எவ்வளவு லாபம் வேண்டும்?

கான்ட்ரா இன்வெஸ்டிங் முறையில் மிகவும் முக்கியமானது, ஒரு டிரெண்ட் நாம் நினைப்பது போல் நடந்தால் எவ்வளவு லாபம் பார்க்க முடியும், அதாவது எவ்வளவு விலை ஏறும் அல்லது இறங்கும் என்பதை முடிவு செய்வது. அதைப் பொறுத்து, ஸ்டாப் லாஸ் போட்டு வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும். நாம் எதிர்பார்த்த விஷயம் நடக்கவில்லை எனில் சரியாக வெளியேறத் தெரிந்திருக்க வேண்டும். எல்லாம் பணம்ங்க... பணம்...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

important things to see before doing Contra Investing

important things to see before doing Contra Investing
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X