அட்சய திருதியை: நொடியில் தங்கத்தை வாங்கலாம்.. எப்படித் தெரியுமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் மீதான காதல் இந்தியர்களுக்கு எப்போதும் மாறாது, ஆனால் தங்கத்தை வாங்கும் முறை தற்போது பெரிய அளவில் மாறியுள்ளது.

குறிப்பாக அக்ஷய திரிதியை பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வீட்டில் இருந்தபடியே தங்கத்தை வாங்குவதும் விற்பனை செய்வதும் எப்படி எனத் தெரிந்துகொள்வது பெரிய அளவில் உதவும்.

 இல்லதரசிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை இன்றும் சரிவு.. சர்வதேச நிலவரம் என்ன? இல்லதரசிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை இன்றும் சரிவு.. சர்வதேச நிலவரம் என்ன?

அக்ஷய திரிதியை

அக்ஷய திரிதியை

அக்ஷய திரிதியை வருகிற மே 3ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், தங்கம் மீது விருப்பம் இல்லாதவர்களும் சரி, சாமானிய நடுத்தர மக்களும் சரி.. அதிர்ஷ்டமும், செல்வமும் சேரும் என்பதைப் பெரிய அளவில் நம்பும் காரணத்தால் அக்ஷய திரிதியை தினத்தில் ஒரு குண்டு மணி தங்கத்தையாவது வாங்க வேண்டும் என நினைப்பார்கள்.

மக்கள் கூட்டம்

மக்கள் கூட்டம்

இதனாலேயே அக்ஷய திரிதியை தினத்தில் நகைக்கடையில் கூட்டம் அலைமோதும். இந்தக் கூட்டத்தில் சிக்கிக்கொள்ளாமல் வீட்டில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தங்கத்தைக் கூகுள் பே மூலம் வாங்கலாம். எப்படித் தெரியுமா வாங்க பார்ப்போம்.

கூகுள் பே

கூகுள் பே

கூகுள் பே இந்த அக்ஷய திரிதியை தினத்தில் மக்கள் தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்கவும், விற்கவும், சேமிக்கவும் உதவுகிறது. கூகுள் பே மூலம் தங்கத்தை வாங்கும் போது நாம் MMTC-PAMP அமைப்பில் இருந்து 99.99 சதவீதம் தூய்மையான 24 கேரட் தங்கத்தை வாங்க முடியும்.

MMTC-PAMP பாதுகாப்பு

MMTC-PAMP பாதுகாப்பு

மேலும் கூகுள் பே மூலம் வாங்கிய தங்கத்தைத் தங்கக் குவிப்புத் திட்டத்தில் (ஜிஏபி) சேமிக்கப்படுகிறது, இது எம்எம்டிசி-பிஏஎம்பி அமைப்பு நிர்வகிக்கும் என்பதால் 100% பாதுகாப்பானது. இந்த டிஜிட்டல் கணக்கில் நீங்கள் தங்கம் வைத்திருக்கும் வரையில் பாதுகாவலராக உங்கள் தங்கத்தை MMTC-PAMP பாதுகாக்கும்.

MMTC-PAMP என்றால் என்ன?

MMTC-PAMP என்றால் என்ன?

MMTC-PAMP என்பது இந்தியாவில் டிஜிட்டல் முறையில் தங்கத்தை விற்பனை செய்ய மத்திய அரசின் MMTC அமைப்பும் (இது இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச வர்த்தக நிறுவனமாகும்), சுவிஸ் நாட்டின் தங்க வர்த்தக நிறுவனமான PAMP SA இணைத்து உருவாக்கிய கூட்டணி. இதனால் எவ்விதமான பயமும் இல்லாமல் MMTC-PAMP வாயிலாக இயங்கும் நம்பிக்கையான தளத்தில் தங்கத்தைத் தாராளமாக வாங்கலாம்.

 கூகுள் பே மூலம் தங்கம் வாங்குவது எப்படி..?

கூகுள் பே மூலம் தங்கம் வாங்குவது எப்படி..?

கூகுள் பே-வில் தங்கம் வாங்க, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

படி 1: முதலில் கூகுள் பே-வை திறந்திடுங்கள்

படி 2: தேடல் பெட்டியில் "கோல்ட் லாக்கர்" என்பதை டைப் செய்யவும்

படி 3: கோல்ட் லாக்கரில் கிளிக் செய்து Buy Gold என்பதைக் கிளிக் செய்யவும்.

தங்கத்தின் தற்போதைய சந்தை விலை (வரி உட்பட) மில்லி கிராம் கணக்கீட்டில் காட்டப்படும். தங்கம் விலை நாள் முழுவதும் மாறக்கூடும் என்பதால், நீங்கள் தங்கம் வாங்குவதைத் தொடங்கிய பிறகு, குறித்த விலை 5 நிமிடங்களுக்கு எவ்விதமான மாற்றமும் செய்யப்படாமல் வைக்கப்பட்டு இருக்கும்.

குறிப்பு: உங்கள் அஞ்சல் குறியீட்டின் அடிப்படையில் வெவ்வேறு பகுதிகளில் தங்கம் மீதான வரி மாறுபடலாம்

படி 4: நீங்கள் வாங்க விரும்பும் தங்கத்தின் அளவை ரூபாய் மதிப்பில் உள்ளிட்டு சரிபார்ப்பு குறியைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 5: உங்களுக்கு விருப்பமான கட்டண முறையைத் தேர்ந்தெடுத்துப் பணம் செலுத்தத் தொடரவும்.

இந்த முறையில் தங்கத்தை எப்போது எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் ஒரே நாளில் அதிகப்படியாக ரூ.50,000 மேல் வாங்க முடியாது. இதேபோல தங்கம் வாங்குவதற்குக் குறைந்தபட்ச அளவு ஒரு மில்லி கிராம்.

 

கூகுள் பே மூலம் தங்கத்தை விற்பனை செய்வது எப்படி..?

கூகுள் பே மூலம் தங்கத்தை விற்பனை செய்வது எப்படி..?

உங்கள் ஜிஏபி கணக்கில் தங்கம் இருந்தால் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய முடியும். Google Payயில் தங்கத்தை விற்க, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

படி 1: முதலில் கூகுள் பே-வை திறந்திடுங்கள்

படி 2: தேடல் பெட்டியில் "கோல்ட் லாக்கர்" என்பதை டைப் செய்யவும்

படி 3: கீழ் இருக்கும் விற்பனை விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

திரையில், தற்போதைய தங்க சந்தை விற்பனை விலை காட்டப்படும். நீங்கள் விற்பனை பரிவர்த்தனையைத் தொடங்கிய 8 நிமிடங்களுக்கு இந்த விலையில் மாற்றம் இருக்காது.

படி 4: நீங்கள் விற்க விரும்பும் தங்கத்தின் எடையை மில்லி கிராமில் உள்ளிடவும். தங்கத்தின் அளவின் கீழ், தற்போதைய சந்தை மதிப்பு ரூபாய் மதிப்பில் காட்டப்படும். டிக் மார்க் உடன் பெட்டியை குறியிடவும்.

உங்கள் விற்பனை உறுதிசெய்யப்பட்ட பிறகு, சில நிமிடங்களில் உங்கள் கணக்கில் பணம் கிடைக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Akshaya Tritiya: How to buy, sell gold via Google Pay? - complete guide

Akshaya Tritiya: How to buy, sell gold via Google Pay? - complete guide அக்ஷய திரிதியை: நொடியில் தங்கத்தை வாங்கலாம்.. எப்படித் தெரியுமா..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X