3 மாத கால அவகாசம் நீட்டிப்பு.. KYC அப்டேட் மார்ச் 31 வரை செய்யலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கி வாடிக்கையாளர்கள் KYC அப்டேஷனை செய்யாவிட்டால், ஜனவரி 1ல் இருந்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் உங்கள் கணக்குகளை முடக்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் டிசம்பர் 31க்குள் கட்டாயம் அப்டேட் செய்து விட வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது.

ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய ரீலிப்பினை அளிக்கும் விதமாக, மூன்று மாத காலத்திற்கு அவகாசத்தினை நீட்டித்துள்ளது.

 Zomato, swiggy, Ola, Uber: ஜனவரி 1 முதல் 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு.. மக்களுக்குப் பாதிப்பா..!! Zomato, swiggy, Ola, Uber: ஜனவரி 1 முதல் 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு.. மக்களுக்குப் பாதிப்பா..!!

ஆக உங்களது வங்கி கணக்கில் KYC அப்டேட் செய்யாவிடில் அதனை மார்ச் 31, 2022 வரையில் செய்து கொள்ளலாம்.

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

தொடர்ந்து நாட்டில் கொரோனாவின் தாக்கம், ஓமிக்ரான் என மக்களை பாடாய்படுத்தி வருகின்றன. இதனால் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், முகக் கவசம் அணியுங்கள் இப்படி பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு கூறி வருகின்றது. எனினும் இந்தியாவில் நாளுக்கு நாள் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கி இப்படி ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது.

காலக்கெடு

காலக்கெடு

KYC ஆப்சன் என்பது முழுமையாக இருந்தால் தான் தற்போது வங்கிகளில் கணக்கு தொடங்க முடிகின்றது. எனினும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை வங்கிகளில் கேஓய்சியினை அப்டேட் செய்ய ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகின்றது. ஆக இதனை அப்டேட் செய்ய டிசம்பர் 31,2021 காலக்கெடுவாக நிர்ணயித்திருந்தது.

போதிய கால அவகாசம்

போதிய கால அவகாசம்


எனினும் பரவி வரும் ஓமிக்ரான், கொரோனா காரணமாக, தற்போது 90 நாட்கள் மீண்டும் கால அவகாசம் கொடுத்துள்ளது. இதன் காரணமாக மார்ச் 31க்கு முன்னதாக KYC அப்டேஷனை செய்து கொள்ளலாம். அப்படி செய்யாவிடில் உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்படலாம். இது குறித்து அரசு பலமுறை எச்சரித்தும், கால அவகாசமும் கொடுத்துள்ளது.

எப்படி செய்வது?

எப்படி செய்வது?

ஏற்கனவே வங்கிகள் இது குறித்து அலர்ட் செய்திருக்கலாம். ஆக இதனை பல முறையிலும் அப்டேட் செய்யலாம். குறிப்பாக வங்கிகளுக்கு நேரிடையாக சென்றும் அப்டேட் செய்யலாம். பல வங்கிகளும் ஆன்லைனிலேயே அப்டேட் செய்து கொள்ளும் வசதியை கொடுத்துள்ளன. சில வங்கிகள் வீடியோ மூலமாக கூட கே ஓய்சியை அப்டேட் செய்து கொள்ளும் வசதியை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 பாதுகாப்பு கருதி நடவடிக்கை

பாதுகாப்பு கருதி நடவடிக்கை

கே.ஒய்.சி ஆவணங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் பணப் பரிமாற்ற மோசடிகளை தவிர்க்க முடியும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவது மிக அவசியமாகிறது.

எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்டேட்

எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்டேட்

வாடிக்கையாளர்களின் பணப் பரிமாற்ற முறை மற்றும் இதர தன்மைகளின் அடிப்படையில், இந்த கே.ஒய்.சி புதுப்பிப்பதற்கான கால அளவு மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2 ஆண்டுகள் மற்றும் எட்டு ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எனவும் இந்த கே.ஒய்.சியானது புதுப்பிக்கப்பட வேண்டும்.

இபிஎஃப் நாமினேஷன்

இபிஎஃப் நாமினேஷன்

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சந்தாதாரர்கள், அவர்களின் குடும்பத்தின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இ-நாமினேஷனை (E-Nomination) கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும், இதற்கும் டிசம்பர் 31, 2021 கடைசி தேதியாக அறிவித்திருந்தது. ஆனால் தற்போது டிசம்பர் 31க்கு பிறகும் சேர்த்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது. எனினும் இதனை விரைவில் அப்டேட் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

KYC update: RBI extends deadline for periodic KYC update by march 31, 2022 due to Omicron

KYC update: RBI extends deadline for periodic KYC update by march 31, 2022 due to Omicron/3 மாத கால அவகாசம் நீட்டிப்பு.. KYC அப்டேட் மார்ச் 31 வரை செய்யலாம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X