SBI விளக்கம்! ஜன் தன் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு யாருக்கு எப்போது ரூ. 500 கிடைக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸை மக்கள் அவதிப் படக் கூடாது என்பதற்காக, மத்திய அரசு, ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு திறந்து இருக்கும் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் என 3 தவணைகளைக் கொடுக்க இருப்பதாக, மத்திய அரசு சொல்லி இருந்தது.

 

ஏப்ரல் மாதத்தில், ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்கள், பணத்தை எடுத்துக் கொள்வதில் சில குழப்பங்கள் எல்லாம் ஏற்பட்டன.

ஆனால் இந்த முறை சமூக விலகளையும் கடை பிடிக்க வேண்டும், பணம் எடுக்கும் போது கொரோனா பரவி விடக் கூடாது என்பதற்காக, ஒரு திட்டத்தை வகுத்து இருக்கிறார்களாம்.

நிதி அமைச்சகம்

நிதி அமைச்சகம்

வங்கிகளில் மக்கள் 500 ரூபாய் பணத்தை எடுக்கப் போவதாகச் சொல்லி, கூட்டம் கூடி விடக் கூடாது என்பதற்காகவும், சமூக இடைவெளியை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், 500 ரூபாய் பணத்தை பிரித்து பிரித்து பயனாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த இருப்பதாக, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதி சேவைகள் செயலர் தேபாசிஷ் பண்டா சொல்லி இருந்தார்.

எஸ்பிஐ

எஸ்பிஐ

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தன் ட்விட்டர் பக்கத்தில், யாருக்கு, எந்த தேதியில், மத்திய அரசின் இந்த 500 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் (வங்கிக் கணக்கில் பணம் போடுவார்கள்) என விரிவாக விளக்கி இருக்கிறது. ட்விட்டைக் காண க்ளிக் செய்யவும்:

கடைசி எண்
 

கடைசி எண்

ஜன் தன் திட்டத்தின் கீழ், வங்கிக் கணக்கு தொடங்கி இருக்கும் பெண்களின் வங்கிக் கணக்கு எண்ணின் கடை எண் 0 அல்லது 1-ல் முடிந்தால் அவர்களுக்கு மே 04 அன்றே 500 ரூபாய் கணக்கில் போடுவார்கள். எனவே மே 04-ம் தேதியில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

2 முதல் 5 வரை

2 முதல் 5 வரை

பயனர்களின், வங்கிக் கணக்கில் கடைசி எண் 2 அல்லது 3 என்றால் அவர்கள் வங்கிக் கணக்கில் மே 05-ம் தேதி தான் பணத்தைப் போடுவார்கள். எனவே மே 05-க்குப் பிறகு பணத்தை எடுத்துக்கொள்ளலாம். வங்கிக் கணக்கில் கடைசி எண் 4 அல்லது 5 என்றால் அவர்களுக்கு மே 06 அன்று வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

கடைசி எண் 6 - 9

கடைசி எண் 6 - 9

6 அல்லது 7 தான் பயனர்கள் வங்கிக் கணக்கின் கடைசி எண் என்றால் மே 8-ம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுமாம். 8 அல்லது 9-ஐ வங்கிக் கணக்கின் கடைசி எண்ணாக இருப்பவர்களுக்கு மே 11-ம் தேதி தான் வங்கிக் கணக்கில் பணம் வரும்.

எண்ணைப் பாருங்கள்

எண்ணைப் பாருங்கள்

எனவே ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்கள், தங்கள் வங்கிக் கணக்கின் கடைசி எண்ணைப் பார்த்துக் கொண்டு, அந்தந்த தேதிகளில் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைத்த பின் வங்கி ஏடிஎம், வங்கி மித்ரா அல்லது வங்கி கிளைகளுக்குச் சென்று பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

எல்லா வங்கிகளும்

எல்லா வங்கிகளும்

இந்த விதிகள், வெறுமனே எஸ்பிஐக்கு மட்டும் அல்ல. ஜன் தன் திட்டத்தின் கீழ் பெண்களுக்காக தொடங்கப்பட்டு, 500 ரூபாய் மத்திய அரசின் நிதி உதவித் தொகை பெறும் எல்லாம் பெண்களுக்கும் இந்த விதி பொருந்துமாம். எனவே மக்களே சமூக விலகளோடு, உங்கள் 500 ரூபாயை எடுத்துக் கொள்ளவும். தேதியை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI explain the Rs 500 withdrawal plan for Women Jan Dhan accounts

The state bank of India has explained the Rs 500 withdrawal plan for women jan dhan accounts. So as per the schedule amounts would be credited to the beneficiaries.
Story first published: Monday, May 4, 2020, 12:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X