ஆர்பிஐ சொன்ன நல்ல செய்தி! ரூ. 50,000 மேல் பணம் எடுக்கலாம்! எப்போதில் இருந்து தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யெஸ் பேங்க் கடந்த மார்ச் 05, 2020 அன்று சில கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது.

 

அந்த கட்டுப்பாடுகள் படி, யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் தங்கள் பணத்தை டெபாசிட் செய்து இருப்பவர்கள், 50,000 ரூபாய்க்கு மேல் பணத்தை எடுக்கக் கூடாது எனச் சொன்னார்கள்.

இந்த அறிவிப்பு, யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, பொது மக்களுக்கும் பெரிய அதிர்ச்சி கொடுத்தது.

விரைந்த நடவடிக்கை

விரைந்த நடவடிக்கை

ஏப்ரல் 03, 2020 வரை இந்த கட்டுபாடுகள் இருக்கலாம் எனச் சொன்னார்கள். ஆனால் தற்போது சில வாரங்களுக்கு முன்பே, இந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் விதத்தில் அதி விரைவாக நடவடிக்கை எடுத்து இருக்கிறது மத்திய நிதி அமைச்சகம் மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி. அதற்கு முதலில் வாழ்த்துக்களைச் சொல்லி விடுவோம்.

யெஸ் பேங்க் அறிவிப்பு

யெஸ் பேங்க் அறிவிப்பு

வரும் மார்ச் 18, 2020 மாலை 6 மணி முதல் யெஸ் பேங்க் தன் முழு வங்கிறார்களாம். மார்ச் 19 முதல் 1,132 வங்கிக் கிளைகளும் வழக்கம் போலச் செயல்படத் தொடங்கும் எனச் சொல்லி இருக்கிறது யெஸ் பேங்க் தரப்பு. குறிப்பாக யெஸ் பேங்கின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தத் தொடங்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

கட்டுப்பாடுகள்
 

கட்டுப்பாடுகள்

மத்திய அரசு மற்றும் ஆர்பிஐ விதித்து இருக்கும் கட்டுபாடுகள், இந்த மறுகட்டமைக்கப்பட்ட வங்கி திட்டம் (Reconstruction Scheme) செயல்படத் தொடங்கி மூன்றாவது வேலை நாள் முதல் கட்டுப்பாடுகள் நீங்கும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆக வரும் மார்ச் 18 மாலை 6 மணிக்கு மேல் 50,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கத் தொடங்கலாம் என யெஸ் பேங்க் வலைதளத்திலேயே சொல்லி இருக்கிறார்கள்.

எவ்வளவு பெரிய வங்கி

எவ்வளவு பெரிய வங்கி

யெஸ் பேங்கை நம்பி பல லட்சக் கணக்கான வாடிக்கையாளர்கள் சுமாராக 2.09 லட்சம் கோடி ரூபாயை டெபாசிட் செய்து இருக்கிறார்கள். சுமார் 2.25 லட்சம் கோடி கடன் கொடுத்து இருக்கிறார்கள். வாராக் கடன் 17,134 கோடி ரூபாய் இருக்கிறது. 1,337 ஏடிஎம்களும் 1,122 வங்கிக் கிளைகளும் இருக்கின்றன. சுமாராக 28.6 லட்சம் டெபிட் கம் ஏடிஎம் கார்ட்கள் பயன்பாட்டில் இருக்கிறதாம். சுருக்கமாக இந்தியாவின் ஐந்தாவது பெரிய தனியார் வங்கி இது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

கண்டவர்களுக்கு எல்லாம் கடன் கொடுத்தது யெஸ் பேங்க். எனவே யெஸ் பேங்கில் ஒரு பக்கம் வாரா கடன்கள் அதிகரித்துவிட்டது. மறு பக்கம் புதிதாக கடன் கொடுக்க போதுமான நிதி இல்லை. புதிதாக கடன் கொடுக்க பணத்தை திரட்டச் சொன்னது ஆர்பிஐ. ஆனால் குறித்த நேரத்தில் யெஸ் பேங்கால் பணத்தை திரட்ட முடியவில்லை. நிறைய டெபாசிட் பணம் தொடர்ந்து வெளியெறிக் கொண்டு இருந்தது. அதனால் தான் 50,000 ரூபாய் மட்டுமே டெபாசிட்டர்கள் பணத்தை எடுக்கலாம் எனச் சொன்னது ஆர்பிஐ.

ஆர்பிஐ

ஆர்பிஐ

யெஸ் பேங்கில் இருந்து, வரும் மார்ச் 18, 2020 மாலை 6 மணி முதல் 50,000 ரூபாய்க்கு மேல் பணத்தை எடுக்கலாம் என்பதை ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ் அவர்களே வாயைத் திறந்து சொல்லி இருக்கிறார். அதோடு யெஸ் பேங்கில் இருந்து பணத்தை பயத்தில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Yes bank: from March 18, evening 6 pm withdraw more than 50000 from yes bank

From march 18th evening 6.00 pm. we can withdraw more than 50000 from yes bank. The debt laden and worst managed yes bank is going to resume its service
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X