சீனாவுக்கு இது பெருத்த அடியாகத் தான் இருக்கும்.. பிரச்சனையில் சீன வங்கிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கத்தினால், இன்று உலகமே அரண்டு போய்க் கிடக்கும் நிலையில், சீனா மட்டும் அதற்கு விதிவிலக்க என்ன?

சொல்லப்போனால் சீனா பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த கொரோனாவிற்கு பின்பு.

கொரோனாவின் தாக்கம் அங்கு இல்லை என்றாலும், தொழிற்சாலைகள் வழக்கம் போல செயல்பட ஆரம்பித்து இருந்தாலும், அவற்றை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறது.

சீனாவுக்கு அதிகரித்து வரும் பிரச்சனை

சீனாவுக்கு அதிகரித்து வரும் பிரச்சனை

ஆரம்பத்தில் கொரோனாவால் ஸ்தம்பித்து போன தொழில்கள், தொழில் சாலைகள், நிறுவனங்கள், இதனால் வீழ்ச்சி கண்ட பொருளாதாரம், உற்பத்தி வீழ்ச்சி, இதற்கிடையில் வேலையின்மை அதிகரிப்பு, தற்போது இதையெல்லாம் தூண்டும் விதமாக விநியோக சங்கிலி பாதிப்பு, லாகிஸ்டிக்ஸ் பிரச்சனை, அமெரிக்கா சீனா இடையே அதிகரித்து வரும் பதற்றம் இப்படி பல பிரச்சனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

நிறுவனங்களின் கடன் அபாயம் அதிகரிக்கும்

நிறுவனங்களின் கடன் அபாயம் அதிகரிக்கும்

இதற்கிடையில் சீன வங்கிகளில் மோசமான கடன்களின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்வதாக சீனாவின் வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளது. இதனால் சிறிய வங்கிகளின் சொத்து தரம் அழுத்ததிற்கு உள்ளாகலாம். மேலும் சில நிறுவனங்களில் கடன் அபாயங்கள் தொடர்ந்து குவிந்து கொண்டே இருக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாராக்கடன் மதிப்பு

வாராக்கடன் மதிப்பு

சீனா கடன் வழங்குனர்கள் நீண்டகால தொற்று நோயால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தின் மத்தியில், வங்கிகளின் அதிகரித்து வரும் கடனையும், வட்டி விகிதத்தினையும் குறைத்து மதிப்பிட்டுள்ளனர். இது லாபத்தின் அளவினை அதிகரிக்கும் விதமாக இப்படி அளவீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சீனாவின் மிகப்பெரிய கடன் வழங்குனர்கள், வைரஸின் தாக்கத்தையும் மீறி நிலையான முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டனர்.

பெரும் அழுத்தம்

பெரும் அழுத்தம்

ஆனால் சிறிய கடன் வழங்குனர்கள் குறைந்த அளவு மூலதன இருப்புகளைக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக இவர்கள் பெரும் அழுத்ததினை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் கடனினை கட்ட தாமதமாகும் போது அவர்கள் பெரும் அழுத்ததிற்கு ஆளாக கூடும்.

வாராக்கடன் அளவு அதிகரிப்பு

வாராக்கடன் அளவு அதிகரிப்பு

இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக நாட்டின் 134 நகர வணிக வங்கிகளின் செயல்படாத கடன் விகிதமானது மார்ச் மாத இறுதியில் 2.49 சதவீதமாக இருந்தது. இதே கிராமப்புறங்களில் 4.9 சதவீதமாக இருந்தது என்றும் CBIRC அறிக்கை கூறுகிறது. இது முதல் காலாண்டின் முடிவில் தொழில் துறை அளவிலான வாரக்கடன் சராசரி 2.04 சதவீததினை விட அதிகமாக இருந்தது.

மோசமான கடன் அளவு

மோசமான கடன் அளவு

இதற்கிடையில் வங்கிக் புத்தகங்களில் உள்ள மோசமான அளவு கடனின் உண்மையான அளவு அறிக்கையிடப்பட்டதை விட, இது அதிகம் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஆக சீனாவுக்கு இதுவும் அடுத்த பிரச்சனையாக மாறலாம். இது சீனாவில் மட்டும் அல்ல, கொரோனா பாதிக்கப்பட்ட எல்லா நாடுகளிலும் தலைதூக்கும் ஒரு பிரச்சனை தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chinese banks under pressure due to bad loans growing

Chinese banks under pressure due to bad loans growing, analysts believe the real amount of bad loans on banks books in much higher than reported.
Story first published: Tuesday, May 26, 2020, 16:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X