விர்ஜின் குழுமத்தின் புதிய பிசினஸ் "விர்ஜின் க்ரூய்ஸ்"

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன்: இந்தியாவில் பலதுறை நிறுவனங்களான ரிலையன்ஸ், டாடா குழுமத்தை போல, லண்டனில் விர்ஜின் குழுமம் தொலைதொடர்பு முதல் விமான போக்குவரத்து துறை முதல் பல துறைகளில் இந்நிறுவனம் வர்த்தகம் செய்து வருகிறது.

 

இந்நிலையில் விர்ஜின் குழுமத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் புதிதாக இந்நிறுவனம் க்ரூய்ஸ் கப்பல் (சொகுசு கப்பல்) தொழிலில் நுழையப் போவதாக வியாழக்கிழமை அறிவித்தார்.

அசத்தலான சேவைகள்

அசத்தலான சேவைகள்

"புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விர்ஜின் குரூஸ் நிறுவனத்தின் மூலம், " விருந்தாளிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் புதிதாக, மற்றும் அர்த்தமுள்ள ஒன்றை அளித்திடும்" என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனித்துவம்

தனித்துவம்

விர்ஜின் விமான சேவையை போன்றே, விர்ஜின் குரூஸ் நிறுவனமும் மனநிலைக்கு ஏற்ப வெளிச்சங்கள் மற்றும் விவியன் வெஸ்ட்வுட் வடிவத்திலான சீருடைகள் போன்ற சில விஷயங்களுக்காக தனித்தும் பெறும்.

ஆகாயம் முதல் கடல் வரை

ஆகாயம் முதல் கடல் வரை

இப்போது அந்த ஸ்டைலை ஆகாயத்தில் மட்டும் அல்லாமல், கடலிலும் கொண்டு வரவும் இந்நிறுவனம் விரும்புகிறது.

ரிச்சர்ட் பிரான்சன்
 

ரிச்சர்ட் பிரான்சன்

"க்ரூய்ஸ் தொழிலில் முற்றிலும் மாற்றி அமைக்கவும், வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக விரும்பும் விடுமுறையை அளித்திடவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்," என விர்ஜின் குழுமத்தின் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன் கூறியுள்ளார்.

சீஇஓ

சீஇஓ

விர்ஜின் குரூஸ் நிறுவனத்தின் சீஇஓ-வாக டாம் மெக்ஆல்பின் விளங்குவார். இவர் ஏற்கனவே தி வேர்ல்ட் மற்றும் ரெசிடென்ட் அட் சீ ஆகிய நிறுனவங்களுக்கு CEO-வாகவும், டிஸ்னீ க்ரூய்ஸ் லைன் நிறுவனத்திற்கு தலைவராகவும் இருந்துள்ளார்.

மெக்-ஆல்பின்

மெக்-ஆல்பின்

"இது போன்ற வாய்ப்புகள் அடிக்கடி வருவதில்லை. அதனால் இந்த தொழிலை வழிநடத்தவும், தங்கள் செயல்களின் மூலமாக வாடிக்கையாளர்களின் மனதில் இடம் பிடித்துள்ள விர்ஜின் ப்ராண்ட்டை க்ரூய்ஸ் தொழிலுக்கு அறிமுகப்படுத்தவும் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்," என மெக்-ஆல்பின் தெரிவித்துள்ளார்.

போட்டி

போட்டி

2012-ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் 2 கோடிக்கு மேலான பயணிகள் க்ரூஸில் சென்றுள்ளனர் என தொழில் துறை சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தேதிக்கு கார்னிவல் மற்றும் ராயல் கரிபியன் ஆகிய இரண்டும் தான் மிகப்பெரிய க்ரூய்ஸ் நிறுவனங்களாகும்.

விர்ஜின் ஹோட்டல்

விர்ஜின் ஹோட்டல்

ஜனவரி 15-ல் சிகாகோவில் விர்ஜின் ஹோட்டலை திறப்பதற்கு ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Richard Branson gets into the cruise business

Richard Branson's Virgin Group announced Thursday that it is entering into the cruise business.
Story first published: Monday, December 8, 2014, 18:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X