இலங்கை அரசு செம ஹேப்பி.. மக்களுக்கு நன்றி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்கள் போராட்டம், பிரதமர் - கவர்னர் நாட்டை விட்டு ஓடினர், புதிய ஆட்சி, மக்கள் பசி பட்டினி, எரிபொருள் பற்றாக்குறை, பள்ளி கல்லூரிகள் மூடல், அரசி, காய்கறி விலை உயர்வு என அனைத்து உணவு பொருட்களும் விலை உயர்வு எனப் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இலங்கை அரசும், இலங்கை மக்களும் வாழ்ந்து வரும் நிலையில் தற்போது மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

 

இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து பல்வேறு நிதியுதவிகள், உலக நாடுகளின் உதவி மற்றும் முதலீடுகள் மூலம் இந்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக மீண்டு வர துவங்கியுள்ளது.

இந்த வளர்ச்சியின் முதல் பலனாக இலங்கை பொருளாதாரத்தின் அடித்தளமான சுற்றுலா துறையில் அதிகப்படியான வருமானம் குவிந்துள்ளது.

இலங்கை

இலங்கை

2022 ஆம் ஆண்டின் 11 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கை அரசுக்கான வருமானம் சுமார் 1,129 மில்லியன் டாலர் அளவை தொட்டு உள்ளது. நிதி நெருக்கடியால் மாட்டிக்கொண்டு இருக்கும் இலங்கைக்கு இந்த வளர்ச்சி மற்றும் வருமானம் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

சர்வதேச விமானச் சேவை

சர்வதேச விமானச் சேவை


சர்வதேச விமானங்கள் சேவை இலங்கையிலும், உலக நாடுகளிலும் கொரோனா தொற்றுக்குப் பின்பும் இலங்கைக்குச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக மக்கள் போராட்டம் குறைந்து, புதிய ஆட்சி நாட்டின் செயல்பாடுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்த பின்பு உலக நாடுகளில் இருந்து மக்கள் இலங்கைக்கு வர துவங்கியுள்ளனர்.

அந்நியச் செலாவணி
 

அந்நியச் செலாவணி

இலங்கை நாட்டின் அந்நியச் செலாவணி வருமானத்தின் முக்கிய ஆதாரமாக விளங்குவது சுற்றுலாத் துறை. 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோயின் காரணமாக இலங்கை சுற்றுலா துறையைக் கடுமையாகப் பாதித்து முடங்கியது. இது இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.

59,759 சுற்றுலாப் பயணிகள்

59,759 சுற்றுலாப் பயணிகள்

நவம்பர் மாதம் மட்டும் இலங்கை நாட்டிற்குச் சுமார் 59,759 சுற்றுலாப் பயணிகளை வந்துள்ளனர். இது அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 42 சதவீத அதிகமாகும் என இலங்கை மத்திய வங்கி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

107.5 பில்லியன் டாலர்

107.5 பில்லியன் டாலர்

இதன் விளைவாக, நவம்பர் மாதத்திற்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கை நாட்டின் வருமானம் 107.5 மில்லியன் டாலரை தொட்டு உள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மொத்த வருமானம் 1,129.4 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

தினசரி சுற்றுலா பயணிகள் வருகை

தினசரி சுற்றுலா பயணிகள் வருகை

2022 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் மட்டும் இலங்கை, தனது சுற்றுலாத் துறை மூலம் சுமார் 75.6 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 6,28,017 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அக்டோபர் மாதத்தில் தினமும் சராசரியாக 1355 சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், நவம்பர் மாதம் 1991 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sri Lanka back in race to attract tourist; earns $1,129 million in 2022 revenue

Sri Lanka back in race to attract tourist; earns $1,129 million in 2022 revenue
Story first published: Monday, December 5, 2022, 19:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X