உலகிலேயே பணக்கார பெண் இவர் தான்.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று கேட்ட காலம் மலையேறி, அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

உலகின் பல்வேறு நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளை அலங்கரித்தும் வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் செல்வ செழிப்புமிக்கப் பெண்களின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், உலகின் முதல் 20 பணக்கார பெண்களின் பட்டியல் இதோ.

ப்ரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் மீயர்ஸ்

ப்ரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் மீயர்ஸ்

இவர் மற்றும் இவரின் குடும்பம் லோரியால் நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கு பங்குகளை வைத்துள்ளது. கடந்த ஆண்டு ப்ரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் மீயர்ஸ்-ன் தாயார் லிலியன்ஸ் பெட்டன்கோர்ட் தனது 94வது வயதில் உயிரிழந்தபின்பு, ப்ரான்காய்ஸ் உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்ணாக ஆனார். இவர் லோரியால் நிறுவனத்தின் நிறுவனர் இஜின் ஸ்சுல்லர்-ன் பேத்தி ஆவார்.

எலைஸ் வால்டன்

எலைஸ் வால்டன்

40.7பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், வால்மார்ட் நிறுவனர் சாம் வால்ட்டனின் மகளான இவர், உலகின் 2வது பெரிய பணக்கார பெண்மணியாகத் திகழ்கிறார். அவரின் உடன்பிறந்தவர்களான ஜிம் மற்றும் ராப்-ஐ போலில்லாமல், எலைஸ் வால்டன் தனது குடும்பத் தொழிலை விடுத்து கலைகளின் மீது ஆர்வம் செலுத்தினார். இவர் அர்கான்சிஸ் கிரிஸ்டல் பிரிட்ஜஸ் மியூசியம் ஆப் அமெரிக்கன் ஆர்ட்-ன் நிறுவனர் ஆவார்.

ஃபேட்டி ஹீஸ்டர்

ஃபேட்டி ஹீஸ்டர்

இவர் ஜெர்மன் டிஸ்கவுண்ட் சூப்பர்மார்க்கெட் ஆல்டி-ன் நிறுவனரான கார்ல் ஆல்ப்ரிச்ட் அவர்களின் மகள். அவரின் குடும்பச் சாம்ராஜ்யமான ஐரோப்பிய வால்மார்ட் எனப் பெயர்பெற்ற இந் நிறுவனத்தின் வாரிசுகளான இவர் மற்றும் இவரின் சகோதரர் கார்ல் ஆல்ப்ரிச்ட்-ன் சொத்து மதிப்பு 29.8பில்லியன் டாலர்.

யாங் ஹூயான்

யாங் ஹூயான்

இவர் தான் உலகின் மிக இளைய பெண் பில்லியனர். 37 வயதான இவரின் மொத்த சொத்து மதிப்பு 26.1பில்லியன் டாலர். சீன தொழிலதிபரான இவருக்கு, 2005ல் இவரின் தந்தை யூங் க்வாக் கியூங் தனது ரியல் எஸ்டேட் நிறுவனமான கன்ட்ரி கார்டன் ஹோல்டிங் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை அளித்தார்.

 சூசன் க்ளேட்டன்

சூசன் க்ளேட்டன்

உலகின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ-ன் 19.2% பங்குகளைச் சூசன் வைத்துள்ளார். இவரின் தந்தையான ஹர்பர்ட் குவாண்ட் திவாலான இந்நிறுவனத்தை மீட்டெடுத்தார். சூசன் அவரின் தாத்தா நிறுவிய அட்லாண்டா மருத்து நிறுவனத்தின் தலைமை பொறுப்பையும் வகிக்கிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 25.3பில்லியன் டாலர்.

 ஜாக்கீலின் மார்ஸ்

ஜாக்கீலின் மார்ஸ்

இவரின் தாத்தா ப்ராக்ளின் மார்ஸ் நிறுவிய கேன்டி மேக்கர் மார்ஸ் நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கு பங்குகளை வைத்துள்ளார். தற்போது ஜாக்கீலினின் மொத்த சொத்து மதிப்பு 23.9 பில்லியன் டாலர். தொண்டு நிறுவனத்தைத் துவங்கும் முன்பாக இவர் சுமார் 20 ஆண்டுகள் தனது குடும்ப நிறுவனத்தைக் கவனித்து வந்தார்.

லாரின் பாவெல் ஜாப்ஸ்

லாரின் பாவெல் ஜாப்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் மனைவியான இவர், பின்தங்கிய பின்புலத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் செயல்படும் எமர்சன் கலெக்டீவ் மற்றும் காலேஜ் டிராக் நிறுவனங்களின் நிறுவனத்தலைவர் ஆவார்.கடந்த ஆண்டு இவர், அட்லாண்டிக் மேகஸீனின் பெரும்பாலான பங்குகளைக் கைப்பற்றினார்.

 ஐரிஸ் பான்ட்போனா

ஐரிஸ் பான்ட்போனா

சுரங்கத்தொழிலில் புகழ்பெற்ற சீன தொழிலதிபரான மறைந்த ஆண்ட்ரோனிகோ லுக்சிக் அபராவ்-ன் மனைவி இவர். பான்ட்போனா மற்றும் அவரின் மூன்று மகன்களும் தற்போது ஆண்டோபாகஸ்டா என்ற சுரங்க நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பாங்கோ டி சைல் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்துள்ளனர். இக்குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 17.3 பில்லியன் டாலர்.

ஜினா ரைன்ஹார்ட்

ஜினா ரைன்ஹார்ட்

ஆஸ்திரேலியாவின் பணக்கார பெண்மணியான இவர் ,தனது தந்தையின் திவாலான எஸ்டேட்டை மீட்டெடுத்துத் தற்போது 17.5பில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியாக உள்ளார். ஹான்காக் ப்ராஸ்பெக்டிங் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தைக் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வளர்ச்சியடையச் செய்துள்ளார். தற்போது இவரிடம் ஹோப் டவுன்ஸ் மைன் நிறுவனத்தின் 50% பங்குகள் உள்ளன.

சார்லின் டி கார்வெல்ஹோ ஹய்னிகீன்

சார்லின் டி கார்வெல்ஹோ ஹய்னிகீன்

ஹய்னிகீன் பியர் நிறுவனத்தின் 23% பங்குகளை,அவரின் தந்தையான ப்ரெடி ஹய்னிகீன் 2002ல் மறைந்த பின்பு பெற்றார். ஹய்னிகீன் இன்டர்நேசனல் நிறுவனத்தை நிறுவி, 1864ல் அம்ஸ்டர்டாம் ப்ரீவெரி நிறுவனத்தை நிறுவிய கிராட் அட்ரியன் ஹய்னிகீன் அவர்களின் கொள்ளு பேத்தி இவர். இவரின் தற்போதையைச் சொத்து மதிப்பு 15.9 பில்லியன் டாலர்.

அபிகைல் ஜான்சன்

அபிகைல் ஜான்சன்

பெடிலிட்டி இன்வெல்ட்மெண்ட் நிறுவன நிறுவனர் எட்வர்ட் ஜான்சன்2 அவர்களின் பேத்தியான இவரின் மொத்த சொத்து மதிப்பு 15.2பில்லியன் டாலர். இவரின் தந்தையான எட்வர்ட் ஜான்சன்3 க்கு பிறகு 2014ல், இந்நிறுவனத்தின் சி.ஈ.ஓ வாகப் பொறுப்பேற்றார். இவரிடம் 24.5% பங்குகள் இருக்கும் நிலையில், உடன்பிறந்தவர்களான எலிசபெத் மற்றும் எட்வர்ட்4 இருவரிடமும் சேர்த்து 5% பங்குகள் உள்ளன.

ப்ளையர் ஃபேரி ஓகேடன்

ப்ளையர் ஃபேரி ஓகேடன்

இவரின் தாயார் 2007ல் இறக்கும் போது காக்ஸ் என்டர்பைரஸின் 25%பங்குகளைப் பெற்றார். மீடியா துறையில் உள்ள இந்த அமெரிக்க நிறுவனம், தானியங்கி துறையிலும் முக்கியப் பங்காற்றுகின்றது. இவரின் சொத்து மதிப்பு 11.9பில்லியன் டாலர் எனப் போர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது.

ரபெல்லா அபோன்டே

ரபெல்லா அபோன்டே

1970ல் சுவிஸில் பிறந்த இவரின் கணவர் ,தற்போது உலகிலேயே 2வது பெரிய கண்டெய்னர் ஷப்பிங் நிறுவனமான -எம்.எஸ்.சி யை துவங்கினார். இந்த ஜோடியின் மொத்த சொத்து மதிப்பு 9.1பில்லியன் டாலர்.

ஊ யாஜுன்

ஊ யாஜுன்

முன்னாள் பத்திரிக்கையாளரான இவர் ஹாங்காங்கில் செயல்படும் ரியல்எஸ்டேட் நிறுவனமான லாங்பார்-ன் தலைமை அதிகாரியாகச் செயல்படுகிறார். இவர் தனது முன்னாள் கணவருடன் இணைந்து விவாகரத்து பெறும் முன்பு இந்நிறுவனத்தைத் துவங்கினார். இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 8.4பில்லியன் டாலர்.

சாவித்திரி ஜிண்டால்

சாவித்திரி ஜிண்டால்

ஓபி ஜிண்டால் குழுமத்ததின் தலைமை பொறுப்பு வகிக்கும் இவர், 2005ல் தனது கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பின்னர் இப்பொறுப்பிற்கு வந்தார். இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார பெண்மணியான இவரின் சொத்து மதிப்பு 8.2 பில்லியன் டாலர்.

தேத்ரீன் ரெய்னர்

தேத்ரீன் ரெய்னர்

ப்ளையர் ஃபேரி ஓகேடன்-ன் உறவினரான இவர், தாயார் 2007ல் இறக்கும் போது காக்ஸ் என்டர்பைரஸின் 17%பங்குகளைப் பெற்றார்.இவரின் மொத்த சொத்துமதிப்பு 8பில்லியன் டாலர்.

மார்கெரெட்டா டெய்லர்

மார்கெரெட்டா டெய்லர்

காக்ஸ் சாம்ராஜ்யத்தின் மற்றொரு உறுப்பினரான இவர், அன்னே காக்ஸின் மகள் மற்றும் கேத்ரீன் ரெய்னரின் சகோதரி. மற்றவர்களைப் போலவே இவரும் தனது குடும்ப நிறுவனத்திடம் இருந்து 17% பங்குகளைப் பெற்றார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 7.9பில்லியன் டாலர்.

 ஜோயூ குவான்பை

ஜோயூ குவான்பை

ஹாங்காங்கை சேர்ந்த இவர் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான லென்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர். இந்தத் தொழிலை 1993ல் துவங்குவதற்கு முன்பு, சீனாவில் கடிகார லென்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாளராக இருந்தார். தற்போது இவரின் நிறுவனம் ஆப்பிள், சாம்சாங் போன்ற நிறுவனங்களுக்கு லென்ஸ்களை வழங்குகிறது. இவரின் மொத்த சொத்து மதிப்பு 7.1பில்லியன் டாலர்.

மாஸிமிலியானா லான்டினி ஏலியோடி

மாஸிமிலியானா லான்டினி ஏலியோடி

இவர் மெனாரினி என்னும் மருந்து நிறுவனத்தின் தலைமை பொறுப்பை அவரது கணவர் 2014ல் இறந்த பின்னர்ப் பெற்றுக்கொண்டார். இத்தாலியை சேர்ந்த பில்லயனரான இவரின் பிள்ளைகள் தற்போது 16000 பணியாளர்கள் உள்ள அந்நிறுவனத்தைக் கவனித்து வருகின்றனர். இவர் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்புப் போர்ப்ஸ் மதிப்பீடுகளின் படி 7.4பில்லியன் டாலர்கள்.

 கேரி பெரோடா

கேரி பெரோடா

சிங்கப்பூரில் பிறந்த இவர் பெரென்கோ என்னும் எண்ணெய் நிறுவன அதிபரான ஹபெர்ட் பெரோடாவை திருமணம் செய்து பிரென்ச் குடியுரிமை பெற்றார். 2006ல் அவரின் கணவர் மறைவுக்குப் பின் தனது மகனை அந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்குப் பரிந்துரைத்தார். கேரி மற்றும் அவரின் மூன்று பிள்ளைகளின் மொத்த சொத்து மதிப்பு 8.3பில்லியன் டாலர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The World’s Wealthiest Women

The World’s Wealthiest Women
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X