5 வார்த்தைகள் கொண்ட ஒரு டிவீட் 2.9 மில்லியன் டாலருக்கு விற்பனை.. அப்படி என்ன ஸ்பெஷல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனரான ஜாக் டோர்சியின் முதல் டிவீட்டான "just setting up my twitter" என்ற டீவிட்டை non fungible tokenஆக விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் உலகளவில் பலர் இந்த டீவிட்டை கைப்பற்றப் போட்டிப்போட்டனர்.

 

உலகளவில் தற்போது NFT மிகவும் பிரபலமாகி வரும் நிலையில் ஜாக் டோர்சியின் முதல் டிவீட்-ஐ வாங்கியது யார்..?!

 NFT விற்பனை

NFT விற்பனை

சென்ட் இன்னும் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்கும் 'Valuables' platformல் சமீபத்தில் பிரபலங்களின் டிவீட்களை NFT எனப்படும் non fungible tokenஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 முதல் டிவீட்

முதல் டிவீட்

இந்த நிலையில் ஜாக் டோர்சியின் முதல் டிவீட்டான "just setting up my twitter" என்ற டீவிட்டை சுமார் 2.9 மில்லியன் டாலருக்கு மலேசியத் தொழிலதிபரான சினா எஸ்டவி என்பவர் ஏதர் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி வாங்கியுள்ளார்.

மலேசியாவின் சினா எஸ்டவி

இதுகுறித்து பிரிட்ஜ் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சினா எஸ்டவி தனது டிவிட்டரில், ஜாக் டோர்சியின் முதல் டிவீட் அல்ல இது ஒரு மோனலிசா ஓவியம் போன்றது எனத் தெரிவித்துள்ளார்.

 NFT என்றால் என்ன..?
 

NFT என்றால் என்ன..?

மேலும் NFT என்பது ஒரு கிரிப்டோகிராபிக் சொத்து, இதை யாராலும் மறு உருவாக்கம் செய்ய முடியாது. மேலும் இதை யாராலும் வர்த்தகமோ அல்லது எக்ஸ்சேஞ் செய்யவோ முடியாது. தற்போது உலகளவில் இந்த NFT டெக் தலைவர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 ஜாக் டோர்சி நன்கொடை

ஜாக் டோர்சி நன்கொடை

மேலும் இந்த டீவிட் மூலம் கிடைத்த 2.9 மில்லியன் டாலர் தொகையை ஜாக் டோர்சி பிட்காயினாக மாற்றிவிட்டு அப்படியே அந்தத் தொகையை Give Directly எனப்படும் ஆப்பிரிக்க ரெஸ்பான்ஸ் பன்ட் அமைப்பிற்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

2.9 மில்லியன் டாலர் பிட்காயின்

இந்த விற்பனையில் கிடைத்த 2.9 மில்லியன் டாலர் தொகையை 5 சதவீதத்தைக் கமிஷன் தொகையாக 'Valuables' தளம் பெறும் மீதமுள்ள 95 சதவீத தொகை மூலம் ஜாக் டோர்சி சுமார் 50.8751669 பிட்காயின் பெற்றுள்ளார். இதை அப்படியே ஆப்பிரிக்க அமைப்பிற்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter CEO Jack Dorsey sold first tweet NFT for $2.9 million

Twitter CEO Jack Dorsey sold first tweet ‘just setting up my twttr’ NFT for $2.9 million
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X