மலேசியாவில் ஜிஎஸ்டி தோல்வி.. இந்தியாவில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மலேசியாவின் புதிய பிரதமர் மகாதிர் முகமது தேர்தலில் தான் அளித்த வாக்குறிதியை நிறைவேற்றும் படி சென்ற வாரம் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி-ஐ ஜூன் 1 முதல் 0% ஆக்குவதாக அறிவித்தார். ஜிஎஸ்டி-க்கு பதிலாக மலேசியாவில் விரைவில் விற்பனை மற்றும் சேவை வரி எனப்படும் எஸ்எஸ்டி முறை அமலுக்கு வர வாய்ப்புள்ளது.

எனவே மலேசியாவில் தோல்வி அடைந்த ஜிஎஸ்டி வரி முறையில் இருந்து இந்திய கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன என்று இங்குப் பார்க்கலாம்.

இந்தியாவிற்கும், மலேசியாவிற்கும் ஜிஎஸ்டி-இல் என்ன வித்தியாசம்?

இந்தியாவிற்கும், மலேசியாவிற்கும் ஜிஎஸ்டி-இல் என்ன வித்தியாசம்?

மலேசியாவில் பெயருக்கு ஏற்றார் போல ஒரே விகித ஜிஎஸ்டி ஆகும். இந்தியாவைப் போன்று பல விகிதங்கள் அல்ல. ஆனால் தென் கிழக்கு ஆசிய மக்கள் அதனை வரவேற்கவில்லை. ஜிஎஸ்டி-ஐ அமல்படுத்தியது முன்னால் முதல்வரான நஜிப் ரசாக்கால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கான ஒரு முக்கியக் காரணம் ஆகும். அன்மையில் முதல்வராகப் பொறுப்பேற்ற மகாதிர் முகமது தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது போன்று ஜிஎஸ்டி-ஐ நீக்கியுள்ளார். இந்தியாவிலும் வணிகர்கள் & நிறுவனர்கள் பலர் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு அரசு மீது மிகவும் கோபமாக உள்ளனர்.

மலேசியா ஜிஎஸ்டி-ல் என்ன தவறு?

மலேசியா ஜிஎஸ்டி-ல் என்ன தவறு?

வரிகளுக்கான கிரெடிட்டினை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு இறுதியில் அதனைத் திருப்பி அளிப்பது என்பது மலேசியர்களுக்குப் பிதிய முறையாகும். இது சிறிய வரி செலுத்துனர்களின் குழப்பத்தினை ஏற்படுத்தியது. அது மட்டும் இல்லாமல் 2015-ம் ஆண்டு ஜிஎஸ்டி அமலுக்கு வந்த நிறகு எண்ணெய் விலை சரிவு மற்றும் கரன்சி மதிப்புச் சரிவு போன்றவை அரசுக்கு பெரும் தலைவலியாக்க மாறியது.

மறைமுக வரியில் இந்தியா எப்படி மாறுபடுகிறது?

மறைமுக வரியில் இந்தியா எப்படி மாறுபடுகிறது?

மலேசியாவில் ஒரே வரி விகிதம் என 6 சதவீதம் ஜிஎஸ்டி ஆக உள்ளது. ஆனால் இந்தியாவில் 4 வரி விகிதங்கள், அதாவது அதிகம் நுகரப்படும் பொருட்களுக்கு 5%, பின்னர் 12%, 18% மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு 28 சதவீதம் என்பது ஜிஎஸ்டி ஆக வசூலிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி-ல் இந்தியாவின் நிலை என்ன?

ஜிஎஸ்டி-ல் இந்தியாவின் நிலை என்ன?

இந்தியாவில் அதிகம் நுகரும் பொருட்களுக்கு வாட் போன்றே 5% அல்லது அதற்கும் குறைவான அளவில் வரி விதிக்கப்பட்டதால் பெரிதாக எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் மலேசியாவில் விதிக்கப்பட்டுள்ளது போன்ற ஒற்றை வரி ஜிஎஸ்டி முறையானது இந்தியா அல்லது மலேசியா போன்ற விவசாய வருவாய்க் கொண்ட நாடுகளுக்கு ஒத்துப்போகாது. சிங்கப்பூர் போன்று விவசாய வருவாய் இல்லாத சேவை துறையினை நம்பி உள்ள நாடுகளுக்குத் தான் ஜிஎஸ்டி ஏற்றதாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மலேசியாவில் இருந்து என்ன பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்?

மலேசியாவில் இருந்து என்ன பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்?

இந்தியாவில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, அது நிலையாகும் வரை காத்திருக்க வேண்டும். சிறு வணிகங்களில் உள்ள 70 சதவீத ஜிஎஸ்டி சிக்கல்கள் நீங்கியுள்ளது, இன்னும் நிறைய மாற்றங்கள் நடைபெற உள்ளது. ஐடி நெட்வொர்க் சேவையினை மெறுகேற்றுவதன் மூலமாகவும், எளிமையாக வரி தாக்கல் செய்யக் கூடிய புதிய படிவங்கள் அறிமுகம் செய்வதன் மூலமாகவும், வேகமாக வரிப் பணத்தைத் திருப்பி அளிப்பதன் மூலமாகவும் இந்தியாவில் ஜிஎஸ்டி-ஐ வெற்றிபெற வைக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் ஜிஎஸ்டி

இந்தியாவில் ஜிஎஸ்டி

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி பிரதமர் மோடி தலைமையிலான அரசால் இந்தியாவில் 2017 ஜூலை 1 முதல் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி வரி இந்திய வணிகர்கள் பலரின் எதிர்ப்பைச் சந்தித்துள்ள நிலையில் சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் அதிரடி.. ஜ..." data-gal-src="http:///img/600x100/2018/05/malaysia2-1526560202.jpg">
ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..!

ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..!

மலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..!
மலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..!

ரூ. 1,999-..." data-gal-src="http:///img/600x100/2018/05/herocycles-1526884764.jpg">
ரூ. 1,999-க்கு குறைந்த விலை சைக்கிள்.

ரூ. 1,999-க்கு குறைந்த விலை சைக்கிள்.

ரூ. 1,999-க்கு குறைந்த விலை சைக்கிள்.. ஹீரோ அதிரடி..!
ரூ. 1,999-க்கு குறைந்த விலை சைக்கிள்.. ஹீரோ அதிரடி..!

பெட்ரோல், டீசல் ..." data-gal-src="http:///img/600x100/2018/05/petrolpump1-1526884235.jpg">
பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு..!
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு..!

மோடிக்..." data-gal-src="http:///img/600x100/2018/05/modiandmanmohansingh1-1526627677.jpg">
மோடி,மன்மோகன் சிங்

மோடி,மன்மோகன் சிங்

மோடிக்கும், மன்மோகன் சிங்-க்கும் வித்தியாசம் இதுதான்..!
மோடிக்கும், மன்மோகன் சிங்-க்கும் வித்தியாசம் இதுதான்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What India can learn from Malaysia’s GST failure?

What India can learn from Malaysia’s GST failure?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X