சென்னை: உங்கள் எல்.ஐ.சி பாலிசியை வைத்து கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால், அதற்கு நீங்கள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேலாக எல்.ஐ.சி. பாலிசியை வைத்திருப்பவர்கள் மட்டுமே கடன் பெறும் தகுதியை பெறுவார்கள்.
பாலிசியின் தொகை மற்றும் காலத்தை பொறுத்து கடன் தொகை மாறுபடும். இது பாதுகாக்கப்பட்ட கடன் என்பதால் மற்ற கடன்களை காட்டிலும் வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும்.
எல்.ஐ.சி. பாலிசியை வைத்து கடன் பெறுவதற்கு ஒருவர் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த விண்ணப்பம் எல்.ஐ.சி.யின் வலைத்தளத்தில் அல்லது ஏஜென்ட் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த பாரத்தை எல்.ஐ.சி கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். பாலிசியை வைத்து வாங்கப்படும் கடனின் வரையறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் அந்த கடனுக்கான விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் இந்த பாலிசி நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்படும்; அதாவது உங்கள் அசல் எல்.ஐ.சி. பாலிசியை ஒப்படைக்க வேண்டும். இந்த கடன்களுக்கு, வட்டி விகிதமாக 9-10 சதவீதம் வரை வசூலிக்கப்படும். இதனை அறையாண்டிற்கு ஒரு முறை கட்ட வேண்டும். இந்த பாலிசியின் கீழ் அதிகபட்ச கடன் தொகையாக, ஒப்படைத்த பாலிசியின் மதிப்பில் (போனஸின் ரொக்க மதிப்பு உட்பட) இருந்து 90% (பேய்ட் அப் பாலிசி என்றால் 85%) அளிக்கப்படும். கடன் தொகை வழங்கிய நாளில் இருந்து 6 மாதங்களே குறைந்தபட்ச கடன் காலமாகும். இந்த காலத்திற்குள் கடனை அடைக்க விரும்பினால், 6 மாத காலத்திற்கான குறைந்தபட்ச வட்டியை கட்டியாக வேண்டும். ஒரு வேளை, கடன் வாங்கிய 6 மாத காலத்திற்குள், பாலிசி முதிர்வு பெற்றதால் அல்லது பாலிசிதாரர் மரணம் அடைந்ததால் பாலிசி கோரப்பட்டு விட்டால், முதிர்வு / மரணம் ஏற்பட்ட தேதி வரைக்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். காப்பீடு பாலிசியின் காலம் அல்லது விரைவான கோரிக்கையின் போது வட்டி கட்ட தவறினால், கோரிக்கை தொகையில் இருந்து கடன் தொகையும் வட்டியும் கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை உரிமை கேட்போரிடம் அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் வழிமுறையும் நேரத்தை விரையம் செய்யாது. ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டால், உங்கள் கணக்கில் பணம் வரவாக 2-3 நாட்களாகும். தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம். கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
எப்படி விண்ணப்பிப்பது?
பெயர் மாற்றம்
வட்டி விகிதங்கள்
கடன் தொகை
கடன் காலம்
முதிர்வு / மரணம்
பாலிசி லேப்ஸ்
3 நாட்களில் பணம்...
ஆதார் கார்டு முதல் பான் கார்டு வரை..
ஆப்பிளை கடுப்பேற்றிய சாம்சங்
எண்ணெய்-யால் வந்த வினை..!
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
சமுக வலைத்தள இணைப்புகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications