பிட்காயின் முதலீட்டில் கிடைக்கும் லாபத்திற்கு வரி உண்டா..? எவ்வளவு..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிட்காயின் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 892 சதவீதம் அபார வருவாய்க் கொடுத்தது. இத்தகைய அசாதாரணமான வருவாய் காரணமான நாணயமானது இந்தியாவில் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் ஒரு சிக்கல் உள்ளது. நாணயம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாதது மற்றும் எந்த அதிகாரத்தின் கீழும் வரவில்லை.

 

எளிமையாகச் சொல்வதானால் கிரிப்டோ நாணயங்களுக்கு ஒழுங்குமுறை அமைப்பு இல்லை. அத்தகைய ஒரு சூழ்நிலையில் பிட்காயின் வருவாயிலிருந்து வரும் லாபத்திற்கு வரி உண்டா?

 சொத்து

சொத்து

பிட்காயின்கள் பற்றிக் குறிப்பாக வருமான வரிச் சட்டம் குறிப்பிடப்படவில்லை என்றாலும், பிட்காயின்கள் சொந்தமாக வைத்திருக்கும் நபரது சொத்தாகக் கருதப்பட்டு அதன் மதிப்பு அதிகரிப்பில் இருந்து லாபம் பெற முடியும்.

அதன்படி, அவர்கள் மூலதன ஆதாயங்களின் வரையறையைப் பெறுகின்றனர். இது வருமான வரிச் சட்டத்தின் படி ஒரு பரந்த வரையறை ஆகும்.

இரண்டு வகை வரி

இரண்டு வகை வரி

எனவே 3 வருடங்களுக்கும் குறைவாக வைத்திருந்த பிட்காயின்கள் குறுகிய காலம் என்றும் 3 வருடங்களுக்கும் அதிகமாக வைத்திருந்த பிட்காயின்கள் நீண்டகாலம் என்றும் வகைப்படுத்தப்படலாம்.

 வரி வித்தியாசம்
 

வரி வித்தியாசம்

நீண்ட கால லாபங்கள் 20 சதவிகிதம் வரி விதிக்கப்பட வேண்டும். குறுகிய கால ஆதாயங்கள் 30 சதவீதத்திற்கு வரி விதிக்கப்படும். ஒருவர் பிட்காயினில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி செலுத்த வேண்டும். வரித் தாக்கல் செய்யும் போது வருமானத்தை அறிவிக்க வேண்டும்.

வியாபாரி

வியாபாரி

பிட்காயின்கள் வரிவிதிப்பைப் பற்றிய பிரச்சினை மிகவும் எளிமையானது அல்ல. க்ரிப்டோ நாணயத்தின் வருமானம் எந்த விகிதத்தின் கீழ் வரவேண்டும் என ஒரு விவாதம் உள்ளது.

பிட்காயின்களில் ஏராளமான வர்த்தகங்கள் உள்ளதால் உரிமையாளர் ஒரு வியாபாரியாக வகைப்படுத்தப்பட்டு, வருமானம் ஒரு வியாபாரத்திலிருந்து வந்ததாக அறிவிக்கப்பட வேண்டும்.

 வருமான அறிக்கை

வருமான அறிக்கை

இந்த விஷயத்தில் குறிப்பிட்ட வழிகாட்டுதலின்றி இருப்பதால் சில வரி செலுத்துவோர் இந்த வருவாயை ஐந்தாம் தலைமையில் 'பிற ஆதாரங்களில் இருந்து வருமானம்' என்று அறிக்கை தாக்கல் செய்யக்கூடும்.

இது சம்பளம், வீட்டு சொத்து, மூலதன ஆதாயங்கள், வியாபாரம் மற்றும் தொழில் ஆகியவற்றின் கீழ் அறிக்கையிடப்படாத எஞ்சிய வருமானம் என வகைப்படுத்தலாம்.

 வாரியம்

வாரியம்

சட்டத்தைப் பொறுத்த வரை யாரேனும் ஒருவர் பணம் சம்பாதிக்கிறார் என்றால் அது வருமான வரி விதிப்புக்கு உட்பட்டது. கிரிப்டோ நாணயங்களின் வளர்ந்து வரும் புகழை உணர்ந்த அரசாங்கம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் கிரிப்டோ நாணயச் சந்தையை ஒழுங்குபடுத்தவும் மற்றும் பரிந்துரைகளை அளிக்கவும் ஒரு வாரியத்தை அமைத்துள்ளது. அதன் அறிக்கை இனிமேல் தான் வரவிருக்கிறது.

உறுதி செய்துகொள்ளவும்

உறுதி செய்துகொள்ளவும்

மெய்நிகர் நாணயங்களை இந்தியாவில் அகழ்தல், வாங்குவது மற்றும் விற்பது சட்டத்திற்குப் புறம்பானது என்று சொல்லப்படுகிறது. மேலும் இது சட்டத்தினாலும் அங்கீகரிக்கப்பட்டது அல்ல. வரி விதிப்பு அம்சமும் கூடக் கேள்விக்குறியாக உள்ளது. எனவே நீங்கள் இதில் வர்த்தகம் செய்வதாகவோ அல்லது முதலீடு செய்வதாகவோ இருந்தால், பிட்காயின்களில் விற்பதால் கிடைக்கும் லாபங்கள் உங்கள் வருமான வரித்தாக்கலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Are Bitcoin Gains taxable?

Are Bitcoin Gains taxable?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X