'டாடி' வழியில் ஜோராக கிளம்பும் கோடீஸ்வர வாரிசு...!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: அடிப்படையில் இந்தியா ஏழை நாடு என்ற பெயரைப் பெற்றிருந்தாலும், இங்கு கோடீஸ்வரர்களுக்கும் பஞ்சமில்லை. டாடா, அம்பானி, மிட்டல், பிர்லா என பல்வேறு கோடீஸ்வரர்கள் உலகின் டாப் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளனர். இவர்கள் பரம்பரை பரம்பரையாக செல்வத்தை வளர்த்தெடுக்கும் எண்ணத்துடன் தங்களுடைய வாரிசுகளுக்கும் தொழில்களையும், அதன் நுணுக்கங்களையும் கற்றுக் கொடுக்கின்றனர்.

அந்த வகையில் ஜாம்ஷெட்பூர் டாடாஜியின் வழியில் ரத்தன் டாடாவும், திருபாய் அம்பானியின் வாரிசுகளான அனில் மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரும் தந்தையின் வழியில் சென்ற வாரிசுகளாக இருந்தனர்.

இதைப் போல, இப்போதைய கோடீஸ்வரர்களின் வாரிசுகள் தங்களுடைய தந்தையின் வெற்றிக் பாதையை பின்பற்றிக் கொண்டு செல்லத் தயாராகி விட்டனர். மேலும் இவர்கள் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்திற்கு பெரு தூண்களாக இருப்பார்கள்.. யார் இந்த இளமை பட்டாளம்?? வாங்களேன் ஒரு ரவுன்டு பார்போம்..

ஆகாஷ் அம்பானி
 

ஆகாஷ் அம்பானி

இந்தியாவின் டாப் பணக்காரர் மற்றும் உலகின் முதல் 50 கோடீஸ்வரர்களில் ஒருவர் என்று புகழ் பெற்றுள்ள முகேஷ் அம்பானி, தன்னுடைய மூத்த மகன் ஆகாஷ் அம்பானியை, தன்னுடைய வியாபார சாம்ராஜ்யத்தை ஆள வைக்கும் நோக்கத்துடன் நிறுவன பணிகளில் இறக்கியுள்ளார். பிரௌன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்கும் ஆகாஷ் அம்பானி, தன்னுடைய இன்டர்ன்ஷிப் பயிற்சியை குடும்ப வியாபாரம் மூலமாகப் பெறும் நோக்கத்துடன் இந்தியா திரும்பியுள்ளார். அண்மையில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் டெலிகாம் பிரிவின் முடிவெடுக்கும் குழுவில் ஒருவராக ரிலையன்ஸ் ஜியோவில் சேர்ந்துள்ளார்.

ஈஷா அம்பானி

ஈஷா அம்பானி

ஈஷா அம்பானி சவுத் ஆசியன் ஸ்டெடீஸ் மற்றும் உளவியல் துறையில் அமெரிக்காவின் யேல் பல்கலைக்களகத்தில் பட்டம் பெற்றுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தில் மிகவும் முக்கிய பொறுப்பில் அமர இருக்கும் இவருக்கு சில முக்கிய பயிற்சிகள் தேவையின் காரணமாக மெக்கென்சி நிறுவனத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

ஆதித்யா மிட்டல்

ஆதித்யா மிட்டல்

உலகளவல் இரும்பு விற்பனையில் கலக்கும் லட்சுமி மிட்டலின் மகனான ஆதித்யா மிட்டல், தன் தந்தையின் குடும்ப வியாபாரத்தில் 1997-ல் இணைந்தார். அவருடைய சொந்த திறமையைக் கொண்டு, இரும்புத் தொழிலில் மிகப்பெரிய IPO-வை நிர்வகித்து வந்த ஆதித்யா, 775 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக மிட்டல் இன்டஸ்ட்ரீஸுக்கு சம்பாதித்துக் கொடுத்துள்ளார். 1999-ம் ஆண்டில் இவர் இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் பிரிவின் தலைவராக பதவியேற்றம் பெற்றுள்ளார்.

ரிசாத் பிரேம்ஜி
 

ரிசாத் பிரேம்ஜி

விப்ரோ நிறுவனத்தின் தலைவரான ஆசிம் பிரேம்ஜியின் மகனான ரிசாத், விப்ரோ என்டர்பிரைசஸின் போர்டு உறுப்பினராகவும், முதன்மை திட்ட அலுவலராகவும் உள்ளார். அமெரிக்காவிலுள்ள வேஸ்லேயான் பல்கலைக்கழத்திலிருந்த பி.ஏ.பொருளாதார படிப்பையும், ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூலிலிருந்து எம்.பி.ஏ பட்டத்தையும் மற்றும் இலண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் ஒரு வருட படிப்பையும் முடித்துள்ள இவர், விப்ரோ நிறுவனத்தில் 2007-ம் ஆண்டு சேர்ந்தார். வங்கி தொடர்பான நிதி சேவைகள் பிரிவின் சிறப்பு திட்டங்களுக்கான வியாபாரத் தலைவராக இவர் இருந்தார்.

ரிவான்ட் ருயா

ரிவான்ட் ருயா

எஸ்ஸார் நிறுவனத்தின் துணைத்தலைவரான ரவி ருயாவின் கடைசி மகன் என்ற தகுதியைப் பெற்றிருக்கும் ரிவான்ட், இந்த குழுமத்தை டெலிகாம் துறையில் வழிநடத்திச் செல்பவராக உள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சில்லறை வணிக சங்கிலி நிறுவனமாக தி மொபைல் ஸ்டோர் இவருடைய உருவாக்கம் தான். 2005-ம் ஆண்டின் நடுவில் எஸ்ஸார் குழுமத்தில் சேர்ந்த ரிவான்ட், முன்னதாக அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள பென்டெலி கல்லூரியில் வணிக மேலாண்மை படிப்பையும் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிப்பையும் முடித்திருந்தார்.

சித்தார்த் மல்லையா

சித்தார்த் மல்லையா

தான் வைத்திருக்கும் நிதி வளத்திற்கு பொறுப்பேற்கும் வகையில் தன்னுடைய மகன் சித்தார்த் மல்லையாவை இளம் வயதிலிருந்து தயார்படுத்தி வந்திருக்கிறார் விஜய் மல்லையா. பள்ளி படிப்பை முடித்த உடன் யூபி குரூப் ஹோல்டிங் கம்பெனி, யுனைடெட் பிரெவெரிஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்-ற்கு இயக்குநராக நியமிக்கப்பட்டார் சித்தார்த் மல்லையா. வெலிங்டன் கல்லூரி மற்றும் குயின் மேரி கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், இராயல் சேலஞ்சர்ஸ் ஆஃப் பெங்களூர் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் உரிமையாளராகவும் உள்ளார்.

ரோஹன் மூர்த்தி

ரோஹன் மூர்த்தி

இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயனமூர்த்தி அவர்களின் மகன் ரோஹன் மூர்த்தி தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கிய பொருப்புகளில் இருக்கிறார்.

ரோஷினி நாடார்

ரோஷினி நாடார்

எச்.சி.எல் நிறுவனத்தின் உரிமையாளரான ஷவ் நாடார் அவர்களின் ஒரே மகளான ரோஷினி நாடார் எச்.சி.எல் கார்ப்ரேஷனின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆவார்.

இன்னும் பல

இன்னும் பல

இப்பட்டியல் நீண்டு கொண்டே போகும், இன்றைய இளைஞர்கள் எளிமையான மற்றும் அமைதியான வாழ்க்கையில் ஆர்வம் காட்டுவதில்லை, இதனால் அவர்கள் அனைத்து துறையிலும் சாதித்து வருகின்றன.

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

உங்கள் வாழ்க்கையை நரகமாக்கும் கிரெடிட் கார்டு பற்றிய சில ரகசியங்கள்..!

கூகிள்

கூகிள்

சுந்தர் பிச்சை தலைமை.. இந்தியர்கள் கையில் 'கூகிள்'..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's Billionaire Heirs Who Follow Their Fathers' Footsteps

Sons of some of the billionaires in India are now ready to carry forward the legacy and maintain the success story. They are foraying into their family business with their youthful aura and young energetic thinking.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more