சாட்டை எடுத்தது ரிசர்வ் வங்கி... உடனடியாக வட்டியைக் குறைத்தன வங்கிகள்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வட்டி விகிதத்தை மாற்றாமல் நாணயக் கொள்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டதும், உடனடியாக வட்டிவீதத்தைக் குறைத்தன வணிக வங்கிகள்.

 

கடந்த 2 மாதங்களில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கும் கடன் விகிதமான ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்தாலும், வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை.

வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களைக் குறைப்பதற்காகவே ரிசர்வ் வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை இரு மாத நாணயக் கொள்கையில் வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லாமல் வெளியிட்டது.

இதையடுத்து நாட்டின் முன்னணி வங்கிகளான எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் வங்கிகள் தங்களது வட்டி வகிதங்களைக் குறைத்ததுள்ளன.

எஸ்பிஐ

எஸ்பிஐ

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ தனது அடிப்படை வட்டி விகிதத்தை 10 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதம் குறைத்து 9.85 சதவீதமாக அறிவித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

தனியார் வங்கிகளில் அதிக வாடிக்கையாளர் எண்ணிக்கை கொண்ட ஐசிஐசிஐ வங்கி அடிப்படை வட்டி விகிதமான 10 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் குறைத்து 9.75 சதவீதமாக அறிவித்துள்ளது.

ஹெச்டிஎஃப்

ஹெச்டிஎஃப்

எஸ்பிஐ வங்கியை போலவே ஹெச்டிஎஃப் வங்கியும் அடைப்படை வட்டி வகித்தில் இருந்து 15 புள்ளிகள் குறைத்து 9.85 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தற்போதைய நிலையில் நாட்டிலேயே ஐசிஐசிஐ வங்கி தான் குறைவான வட்டியில் கடன் வழங்குகிறது.

ஆக்சிஸ் வங்கி
 

ஆக்சிஸ் வங்கி

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி தனது வட்டி விகிதத்தை 9.95% ஆகக் குறைத்துள்ளது.

வைப்பு நிதிகள்

வைப்பு நிதிகள்

மேலும் இந்த நான்கு வங்கிகளுமே வைப்புகள் நிதிகளுக்கான வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளது.

வங்கிகள், கடனுக்கான வட்டி விகித்தை குறைத்துள்ள நிலையில் வீட்டுக்கடன், வாகனக் கடன் மற்றும் சிறு, குறு மற்றும் பெரு நிறுவன கடன்களின் வட்டி விகிதங்கள் குறையும். மேலும் இக்கடன்களுக்கான மாதத் தவணை தொகையும் குறைய வாய்ப்புள்ளது.

50 அடிப்படை புள்ளிகள்

50 அடிப்படை புள்ளிகள்

ஜனவரி மாதம் முதல் ரிசர்வ் வங்கி ரொப்போ விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்தது. ஆனால் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் மக்களை ஏமாற்றி வந்தன.

இதன் மூலம் வங்கி நிர்வாகங்கள் அதிகளவிலான லாபத்தை அடைந்தன.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கி வெளியிட்ட இரு மாத நாணயக் கொள்கையைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rajan pushes lenders to cut rates; SBI, ICICI, HDFC Bank oblige

Plain-speaking by RBI Governor Raghuram Rajan finally galvanised banks to cut lending rates even though the Reserve Bank of India decided to hold key rates.
Story first published: Wednesday, April 8, 2015, 11:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X