இந்திய சந்தையை 1 வருடமாகப் பதம் பார்க்கும் மொத்த விலை பணவீக்கம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய பொருளாதாரத்தைக் கடந்த ஒரு வருட காலமாகப் பதம் பார்க்கும் மொத்த விலை பணவீக்கம், அக்டோபர் மாதத்திலும் பணவாட்ட (எதிர்மறை பணவீக்கம்) நிலையிலேயே உள்ளது.

 

அக்டோபர் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க அளவுகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

-3.88% பணவாட்டம்

-3.88% பணவாட்டம்

அக்டோபர் மாதத்தில் முக்கியத் துறைகளில் நடந்த அதிகளவிலான வர்த்தகத்தின் மூலம் இந்திய சந்தையில் பணவீக்கத்தின் பாதிப்பு குறைந்ததுள்ளது.

இதன் காரணமாகச் செப்டம்பர் மாதத்தில் -4.54% இருந்த மொத்த விலை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் -3.81%ஆகக் குறைந்தது.

 

உணவு பணவீக்கம்

உணவு பணவீக்கம்

இந்திய சந்தையில் பருப்பு மற்றும் இதர தானிய வகைகளின் தட்டுப்பாடு காரணமாக இதன் விலைகள் புதிய உச்சத்தை எட்டியது.

இதன் காரணமாகவே அக்டோபர் மாத காலகட்டத்தில், உணவுப் பொருட்களின் மீதான பணவீக்கத்தின் அளவு 0.3% அதிகரித்துக் காணப்படுகிறது.

 

உணவு அல்லாத விவசாயப் பொருட்கள்

உணவு அல்லாத விவசாயப் பொருட்கள்

இதேபோல் உணவுப் பொருட்கள் அல்லாத விவசாயப் பொருட்களின் பணவீக்கம் 0.2% உயர்ந்துள்ளது.

எரிபொருள் மற்றும் எரிசக்தி
 

எரிபொருள் மற்றும் எரிசக்தி

இந்தியாவில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளதால், அக்டோபர் மாதத்தில் எரிபொருள் மற்றும் எரிசக்தி மீதான பணவீக்கம் 0.5% ஆக உள்ளது.

குறிப்பாக விமான எரிபொருளின் மீதான பணவீக்கத்தின் அளவுகள் 7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்திய விமானத்துறை அதிகளவில் எரிபொருள் பயன்படுத்தி அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருவது தெரிகிறது.

 

உற்பத்தி பொருட்கள்

உற்பத்தி பொருட்கள்

இதேபோல் அக்டோபர் காலத்தில் உற்பத்தி பொருட்கள் மீதான மொத்த விலை பணவீக்கம் நிலையான அளவுகளைப் பதிவு செய்துள்ளது.

உணவு பொருட்கள், மரம், பேப்பர், உலோகம் சார்ந்த துறைகளில் பணவீக்கத்தின் அளவுகள் உயர்ந்தாலும், போக்குவரத்து மற்றும் அட்டோமொபைல் உதிரி பாகங்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக், தோல் ஆகிய துறைகளின பணவீக்கம் குறைந்ததால், உற்பத்தி பொருட்களின் பணவீக்கம் நிலை பெற்றுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Index Numbers of Wholesale Price in India:October 2015

The annual rate of inflation, based on monthly WPI, stood at -3.81% for the month of October, 2015 as compared to -4.54% for the previous month.
Story first published: Monday, November 16, 2015, 12:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X