பிரதமர் மோடி ஆட்சியில் வங்கி மோசடிகள் 100% உயர்வு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்திய வங்கி அமைப்பில் அதிகரித்து வரும் வங்கி மோசடி மற்றும் குற்றங்களைக் கண்காணிக்கவும், தடுக்கவும் 2015ஆம் ஆண்டு மே மாதம் ரிசர்வ வங்கி, மத்திய குற்ற பதிவு அமைப்பை (Central Fraud Registry) நிறுவியது.

 

வங்கித்துறையில் மோசடிகளைக் கண்டறியும் முறையை மறுஆய்வு செய்யப் பிரதமர் அலுவலகம் அழைத்த போது, வங்கித்துறையின் உண்மையான நிலையைக்கண்டு மத்திய அரசு கலங்கியுள்ளது என இந்தியா ஸ்பென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வங்கித் துறை..

வங்கித் துறை..

இது நாள் வரை இந்திய வங்கித்துறையில் காசோலை திரும்புதல் மட்டுமே மிகப்பெரிய மோசடியாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இதுபோல் பல மோசடிகள் நிகழ்ந்து வருவதாக மத்திய குற்ற பதிவு அமைப்பு தெரிவித்துள்ளது.

செயல்படா சொத்துக்கள்

செயல்படா சொத்துக்கள்

2013-14 மற்றும் 2014-15ஆம் ஆண்டிகளில் இந்திய வங்கித்துறையில் செயல்படா சொத்துக்களின் அளவுகள் மட்டும் சுமார் 23 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

அதேபோல் கடந்த ஒரு வருட, பிரதமர் மோடி அவர்களின் ஆட்சிக் காலத்தில் வங்கி மோசடிகளின் எண்ணிக்கை சுமார் 100% அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கிறது.

இதனைக் கருத்தில் கொண்டு தான் ரிசர்வ் வங்கி மத்திய குற்ற பதிவு அமைப்பை உருவாக்கியது.

3 லட்சம் கோடி
 

3 லட்சம் கோடி

2013-14ஆம் ஆண்டில் வங்கித்துறையில் செயல்படா சொத்துக்களின் அளவு 2,51,060 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2014-15ஆம் ஆண்டில் இதன் அளவு 3,09,409 கோடியாக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கி மோசடிகள்

வங்கி மோசடிகள்

அதேபோல் போலி காசோலை, காசோலை திரும்புதல், போலியான கடன், டெபிட் மற்றும் கிரேடிட் கார்டு மோசடிகள் முதல் சைபர் குற்றங்கள் வரை வங்கித்துறையில் 19,361 கோடியாக உயர்ந்துள்ளது.

2013-14ஆம் ஆண்டில் வங்கித்துறையில் 10,170 கோடி ரூபாயாக இருந்த செயல்படா சொத்துக்கள் அளவுகள் 2014-15ஆம் ஆண்டுக்காலத்தில் 19,361 கோடியாக உயர்ந்துள்ளது. தோராயமாக 100% உயர்வு.

மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம்

மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம்

இந்தியாவில் வங்கி மோசடி குற்றங்கள் எண்ணிக்கை மற்றும் அதன் அளவுகளைக் கணக்கிடுகையில் மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் இதன் அளவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக மேற்கு வங்காளம் மாநிலத்தில் மோசடிகளின் அளவு சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளது.

வங்கிகள்

வங்கிகள்

அதேபோல் வங்கிகளைப் பார்க்கும் போது பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் மோசடி குற்றங்களின் அளவு 2,310 கோடி ரூபாயாக உள்ளது.

இதைத் தொடர்ந்து சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா, எஸ்பிஐ, யுகோ வங்கி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள்

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள்

வங்கி மோசடிகளைக் கையழுவதில் தனியார் வங்கிகளை விடவும் பொதுத்துறை வங்கிகள் சிறந்த முறையில் செயல்படுகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தனியார் வங்கிகளின் உண்மையான நிலை

தனியார் வங்கிகளின் உண்மையான நிலை

இந்திய வங்கித்துறையில் 30 சதவீத சந்தை மதிப்புடைய தனியார் வங்கிகள், மொத்த மோசடிகளில் 40 சதவீத்தை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மொத்த 20 தனியார் வங்கிகள், 26 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 30 வெளிநாட்டு வங்கிகள் செயல்படுகிறது.

மத்திய அரசு

மத்திய அரசு

வங்கி மோசடிகளில் மேற்கு வங்காள மாநிலத்தில் மட்டும் 6 மடங்கு உயர்வு, இது வங்கித்துறையைப் பதம் பார்க்கும் ஒரு முக்கியக் காரணி என்பதால் வங்கித்துறை இதனைத் தீவரமாகக் கண்காணிக்க வேண்டும்.

மேலும் வங்கி மோசடி குறித்த வழக்குகள் மற்றும் குற்றப் பதிவுகளைக் கூடிய விரைவில் களைய வேண்டும் என வங்கித்துறை கண்காணிப்பு நிறுவன தலைவர் ராஜேஷ் கோயல் தெரிவித்தார்.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In A Year, Bank Fraud Doubles

NPAs did rise 23% between 2013-14 and 2014-15, threatening India’s banking system, but it is also true that in the year since Narendra Modi’s government took charge, there has been a 100% increase in bank fraud.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X